வெறுக்கத்தக்க உணவா?!

ஒரு வேதாகம கல்லூரி விடுதியில் உணவு பரிமாறப்பட்டது, அதன் சுவை ஓரளவிற்கு இருந்தது.  அதில் தங்களை தாங்களே கெடுத்துக் கொண்ட  சில பணக்கார மாணவர்கள் இருந்தனர், அவர்கள் அந்த உணவு கேவலமாக இருப்பதாக கருதினர்; ஆகையால் அருகிலுள்ள உணவகங்கள், துரித உணவு இடங்களுக்கு சாப்பிடுவதற்காக குழுவாகச் சென்றனர்.  வனாந்தரப் பயணத்தில் இருந்த இஸ்ரவேலர்களும் மன்னாவை பாடாவதியான உணவாகக் கருதினர்.  எண்ணாகமம் மற்றும் யாத்திராகமம் புத்தகத்தில் மூன்று வகையான முணுமுணுப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன (யாத்திராகமம் 16; எண்ணாகமம் 11; எண்ணாகமம் 21:5).

உணவு பற்றாக்குறையா?:
எகிப்திலிருந்து புறப்பட்டதிலிருந்து ஒரு மாதம் கடந்துவிட்டது, ஏனென்றால் அவர்கள் முந்தைய மாதத்தின் பதினைந்தாம் நாளில் புறப்பட்டு இருப்பார்கள் (யாத்திராகமம் 12:18). அவர்கள் கொண்டுவந்த உணவெல்லாம் ஒருவேளை முடிந்திருக்கலாம், ஏனெனில் அவர்கள் எகிப்திலிருந்து விரைந்து வெளியேறினார்கள்.  இருப்பினும், அவர்களுக்கு ஆடுகளும் மந்தைகளும் இருந்தன, அவைகளை அடித்து எளிதாக புசிக்கலாம். ஆக இஸ்ரவேலர்கள் பசியை அனுபவிக்கவில்லை, ஆனால் பசியை எதிர்பார்த்தனர்.  ஊட்டச்சத்தின்மையோ, பட்டினியால் மரணம் ஏற்படவில்லை.  அவர்களில் யாரும் பசியால் மயக்கம் அடையவும் இல்லை.  ஆனாலும், அவர்கள் முறுமுறுத்து குறை கூறினர்.

 பலவகை குறைபாடா?:
 இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியேறியபோது, ​​சில இஸ்ரவேலர்கள் அல்லாதவர்களும் அவர்களுடன் சென்றார்கள் (யாத்திராகமம் 12:38). அவர்கள் மற்ற அடிமைகளாகவோ அல்லது கால்நடைகளுடன் வந்த சில எகிப்தியர்களாகவோ இருந்திருக்கலாம்.  அவர்கள் இறைச்சியை விரும்பி இஸ்ரவேலரை ஏங்க தூண்டினார்கள்.

வெறுக்கப்பட்ட மன்னா!:
அது என்னவென்று தெரியாததால், இஸ்ரவேலர்கள் வைத்த பெயர் மன்னா.  தேவன் அதை வானத்திலிருந்து வந்த அப்பம் (வானத்தின் தானியம்) என்று அழைத்தார்.  இது தேவதூதர்களின் உணவு என்றும் குறிப்பிடப்பட்டது (யாத்திராகமம் 16:4, 15, 31; சங்கீதம் 78:24-25). துரதிர்ஷ்டவசமாக, தேவதூதர்கள் இப்படிப்பட்ட கேவலமான / பாடாவதியான உணவையா சாப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்!!.

நன்றியின்மை:
நன்றியின்மையால் இஸ்ரவேல் பாவம் செய்தது.  அவர்களுக்கு "தேர்வு ஞாபகம் " இருந்தது, எப்படியெனில் எகிப்தின் உணவைப் பற்றி  நினைவுகளையேக் கொண்டிருந்தனர், ஆனால் கசப்பான அடிமைத்தனத்தை முற்றிலுமாய் மறந்துவிட்டனர் (யாத்திராகமம் 1:14). சொல்லப்போனால், அவர்கள் தங்கள் தற்போதைய புகார்களை நியாயப்படுத்த, கடந்த காலத்தைப் பற்றிய தங்கள் விளக்கத்தைத் திரித்தனர் என்றே சொல்ல வேண்டும்.

 விசுவாசமின்மை:
 அவர்களின் விசுவாசமின்மை ஆதாம் மற்றும் ஏவாளைப் போன்றது, தேவன் தங்களுக்கு நல்லது அல்லது சிறந்தது அல்லது மேலானதை (கடவுள்களைப் போல் ஆக) தடுக்கிறார் என்று நினைத்தார்கள்.

 நித்திய கண்ணோட்டம் இல்லாமை:
 மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை அவர்கள் தாமதமாக அறிந்து கொண்டார்கள்.  (உபாகமம் 8:3)

 நல்ல தேவனிடமிருந்து  அனைத்தையும் பெறுவதற்கு எனக்கு நன்றியுள்ள இருதயம் உள்ளதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download