தேவன் ஏதோமை நியாயந்தீர்த்தல்

"உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" (ஆதியாகமம் 12:3) என்று தேவன் ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளித்தார். ஆபிரகாமையும் அவருடைய சந்ததியினரையும் அவமதிப்பவர்களையோ அல்லது அவர்களுக்கு தீங்கு செய்பவர்களையோ அல்லது வெறுப்பவர்களையோ தேவன் தண்டிப்பார் அல்லது சபிப்பார் அல்லது நியாயந்தீர்ப்பார்.  ஏசா, ஆபிரகாமின் வழித்தோன்றலாக இருந்தாலும், தேவனை விட்டு தன் சகோதரன் யாக்கோபை வெறுத்தான்.  ஏதோமியர்கள் தொடர்ந்து இஸ்ரவேலை வெறுத்தனர்.  ஏசாவின் சந்ததியான ஏதோமியர்களை வெறுக்க வேண்டாம் என்று தேவன் யாக்கோபின் (இஸ்ரவேல்) பிள்ளைகளை எச்சரித்தார் (உபாகமம் 23:7). இருப்பினும், ஏதோமியர்கள் இஸ்ரவேல் தேசத்திற்கு எதிராக எழுந்தார்கள், அவர்கள் தேவனின் கோபத்தையும் தண்டனையையும் வருவித்துக் கொண்டனர்.

பெருமை கொள்ளல்:
"என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார்?" (ஒபதியா 1:3). முதலாவதாக, ஏதோமுக்கு இயற்கையான பாதுகாப்பு இருந்தது, ஆகையால் அந்த தேசத்தை தோற்கடிப்பது எளிதல்ல.  இரண்டாவதாக, தேசம் சக்திவாய்ந்த நாடுகளுடன் பெரும் கூட்டணிகளைக் கொண்டிருந்தது.  மூன்றாவதாக, தேமான் நகரம் பல ஞானிகளைக் கொண்டிருந்தது (எரேமியா 49:7; 1 இராஜாக்கள் 4:30).

விலகி நின்றல் :
யாக்கோபு சூறையாடப்பட்டபோது ஏதோமியர்கள் ஒதுங்கி நின்றார்கள் (ஒபதியா 1:11). அவர்கள் எரிகோ சாலையில் மரணிக்கும் தருவாயில் இருந்த மனிதனைக் கடந்து சென்ற லேவியரைப் போலவும் ஆசாரியனைப் போலவும் இருந்தனர் (லூக்கா 10:25-37).

பிறர் துன்பம் கண்டு மகிழ்தல்:
இஸ்ரவேலர் பேரழிவையும் துன்பத்தையும் நெருக்கடியையும் எதிர்கொண்டபோது ஏதோமியர்கள் சந்தோஷப்பட்டனர் (ஒபதியா 1:12)

களிகூர்தல்:
ஏதோமியர்கள் மகிழ்ச்சியடைந்தனர், கொண்டாடினர் மற்றும் இஸ்ரவேலர் துயரமடைந்து, தோற்கடிக்கப்பட்டு மற்றும் அழிக்கப்பட்டதில் களிகூர்ந்தனர் (ஒபதியா 1:12). எதிரிகளின் பேரழிவைக் கண்டு மகிழ்வதற்கும் சந்தோஷப்படுவதற்கும் எதிராக வேதாகமம் எச்சரிக்கிறது (நீதிமொழிகள் 24:17-18).

கொள்ளையடித்தல்:
படையெடுப்பினால் தேசம் சூறையாடப்பட்டப் பின்பு மிஞ்சியிருக்கும் பொருளின் மீது ஏதோம் கை வைத்தது (ஒபதியா 1:13). இஸ்ரவேலரின் பாதிக்கப்படக்கூடிய தருணத்தை ஏதோமியர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

 தப்பியோடியவர்கள் கைது செய்யப்படல்:
ஒரு அடிமை எஜமானனிடமிருந்து தப்பிக்கும்போது, ​​அவனுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட வேண்டும் என்று தேவனின் கட்டளை கூறுகிறது, "தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக" (உபாகமம் 23:15). ஆனால் எதிரிகளிடமிருந்து தப்பிய யூத மக்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டனர் (ஒபதியா 1:14).

நீதியுள்ள நீதிபதி நியாயந்தீர்த்தல்:
தேவன் நீதியுள்ளவர்.  அவர் நாடுகளை நியாயந்தீர்க்கிறார். "எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்" (ஒபதியா 1:15)

இறுதியில் சங்கரிக்கப்படல்
யூதர்கள் ரோமுக்கு எதிராகக் கலகம் செய்தபோது, ​​ஏதோமியர்கள் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர் (66-70 கி.பி). இது மிகவும் தாமதமானது.  ரோமானியர்கள் ஏதோமியர்களை தோற்கடித்தனர், மேலும் ஒபதியா மற்றும் எசேக்கியேல் தீர்க்கதரிசனம் கூறியபடி வரலாற்றில் மீண்டும் குறிப்பிடப்படவில்லை, முற்றிலுமாக அழிக்கப்பட்டனர் (ஒபதியா 1:10; 18; எசேக்கியேல் 35:15).

 மற்றவர்களிடம் எனது அணுகுமுறை மற்றும் மனநிலை என்ன?
Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download