ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்

எபேசியர் 4:22-32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
கொலோசெயர் 3:13; மாற்கு 11:25 ஒருவர்பேரில் ஒருவருக்கு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். 
மத்தேயு 18:22(21-35) அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபது தரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
அப்போஸ்தலர் 5:31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப் பையும் அருளுகிறதற்காக... உயர்த்தினார்.
ஏசாயா 55:7 அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.
மீகா 7:18 அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்?

1. சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்த இயேசு
லூக்கா 23:34,46(31-34) அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே...
லூக்கா 5:20(18-26) திமிர்வாதக்காரன் நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது.
லூக்கா 7:48(36-50) பாவியாகிய ஸ்திரீயை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.

2. கல்லெறிந்து கொன்றவர்களை மன்னித்த ஸ்தேவான்
அப்போஸ்தலர் 7:60 (54-60) ஸ்தேவானோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.

3. குழியில் தள்ளி விற்றவர்களை மன்னித்த யோசேப்பு
ஆதியாகமம் 50:17 (14-22) உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்க வேண்டும் என்று அவனுக்குச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்ன போது, அவன் அழுதான்.
ஆதியாகமம் 37:24(13-28) அவனை எடுத்து, அந்த குழியிலே போட்டார் கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download