லூக்கா 5:18-26

5:18 அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளேகொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள்.
5:19 ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.
5:20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
5:21 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.
5:22 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?
5:23 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?
5:24 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
5:25 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.
5:26 அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.




Related Topics


அப்பொழுது , சில , மனுஷர் , திமிர்வாதக்காரன் , ஒருவனைப் , படுக்கையோடே , எடுத்துக்கொண்டுவந்து , அவனை , உள்ளேகொண்டுபோகவும் , அவர் , முன்பாக , வைக்கவும் , வகைதேடினார்கள் , லூக்கா 5:18 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 5 TAMIL BIBLE , லூக்கா 5 IN TAMIL , லூக்கா 5 18 IN TAMIL , லூக்கா 5 18 IN TAMIL BIBLE , லூக்கா 5 IN ENGLISH , TAMIL BIBLE Luke 5 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 5 TAMIL BIBLE , Luke 5 IN TAMIL , Luke 5 18 IN TAMIL , Luke 5 18 IN TAMIL BIBLE . Luke 5 IN ENGLISH ,