எபேசியர் 4:22-32

4:22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
4:23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
4:24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
4:25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
4:26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
4:27 பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
4:28 திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
4:29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
4:30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
4:31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.
4:32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்காருவர் மன்னியுங்கள்.




Related Topics


அந்தப்படி , முந்தின , நடக்கைக்குரிய , மோசம்போக்கும் , இச்சைகளாலே , கெட்டுப்போகிற , பழைய , மனுஷனை , நீங்கள் , களைந்துபோட்டு , , எபேசியர் 4:22 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 4 TAMIL BIBLE , எபேசியர் 4 IN TAMIL , எபேசியர் 4 22 IN TAMIL , எபேசியர் 4 22 IN TAMIL BIBLE , எபேசியர் 4 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 4 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 4 TAMIL BIBLE , Ephesians 4 IN TAMIL , Ephesians 4 22 IN TAMIL , Ephesians 4 22 IN TAMIL BIBLE . Ephesians 4 IN ENGLISH ,