செய்தித்தாள்களைப் படிக்காத அல்லது செய்தி சேனல்களைப் பின்பற்றாத சில தெய்வீக மக்கள் இருக்கிறார்கள். இதிலெல்லாம் தங்கள் நேரங்கள் வீணாவதாக கருதுகின்றனர். மேலும், அன்றாட நிகழ்வுகள் பற்றி கவலைக் கொள்வதும் இல்லை. இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களுடன், குறிப்பாக மற்ற மதத்தினருடன் ஓர் அர்த்தமுள்ள உரையாடலை எப்படி நடத்த முடியும்! மனித வரலாற்றில் தேவனுடைய பணி என்ன என்பதை புரிந்துகொள்வதையும் அவர்கள் இழக்கிறார்கள். தேவன் தன் நோக்கம் நிறைவேற்றும்படியாக வரலாற்றிற்கு கட்டளையிடுகிறார் மற்றும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அனைத்தும் நிறைவேற்றுவார்.
ராகாப் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அல்லது விவகாரங்களை அறிந்து கொள்ளும் பழக்கத்தால் யெகோவாவில் நம்பிக்கை வைக்க முடிந்தது. அவள் சொன்னாள்: "நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்" (யோசுவா 2:10,11).
1) செய்தி:
ராகாப் புத்திசாலி, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவள் அறிந்திருந்தாள். அது செய்தித்தாள்களின் அல்லது செய்தி சேனல்களின் அல்லது சமூக ஊடகங்களின் காலம் அல்ல. ஒலி சாராத வாய்மொழித் தொடர்பு மூலம் செய்தி பரவியது. ராகாப் எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலையானதையும் மற்றும் செங்கடல் வறண்டு போனதையும் பற்றி கூறினாள், இது நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது. மக்கள் அதை நினைவில் வைத்து விவாதிக்கிறார்கள். யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் அவள் குறிப்பிடுகிறாள். தான் வசித்த பகுதிக்கு அருகில் இஸ்ரவேலைப் பற்றிய செய்தி பிரபலமானதாகவோ அல்லது ட்ரெண்டிங் ஆனதாக இருந்திருக்கும்.
2) மறுமொழி:
தங்கள் இருதயம் கரைந்துபோயிற்று என்றும் எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று என்பதாகவும் தாங்கள் ஊக்கத்தை இழந்ததாகவும் ராகாப் கூறினாள்.
3) விளக்கம்:
தேவனாகிய கர்த்தரே உயரே வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர் மற்றும் அவரே இறையாண்மையுள்ள கடவுள் என்று மக்கள் விளக்கினர். பின்பு தேவனுடைய வல்லமை, அதிகாரம் மற்றும் அவர் தேசங்களின் நியாயாதிபதி என்பதையும் அவள் புரிந்து கொண்டாள்.
4) விசுவாசம்:
ஆக மிகச் சரியாக அவள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா மீது விசுவாசம் வைத்தாள்.
ஆம், உண்மையான தெய்வம் யார் என்று தேடும் அனைத்து மக்களாலும் அவரைக் கண்டுக் கொள்ள முடியும்.
நான் அன்றாட நிகழ்வுகளில் தேவனின் ஆளுகையைக் காண்கிறேனா மற்றும் புரிந்து கொள்கிறேனா? சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்