கால்வின் க்ளீன் (Calvin Klein's) என்பது 1968 இல் நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க ஃபேஷன் ஹவுஸ் ஆகும். இது தோல் , வாழ்க்கை முறை பாகங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், வாசனை திரவியங்கள் , நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஆயத்த ஆடைகளில் நிபுணத்துவம் பெற்றது . இந்நிறுவனம் சில்லறை மற்றும் வணிக ரீதியில் கணிசமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. சமீபத்திய விளம்பரம் ஒன்று டிவிட்டரில் விவாத பொருளானது. அது என்னவென்றால் (NDTV மே 13, 2022) அன்னையர் தினத்திற்கான விளம்பரத்தில் தாடியுடன் இருக்கும் ஒரு ஆண் கர்ப்பமாக இருந்தார், கூடவே மனைவி எரிகா பெர்னாண்டஸ் என்பவரும் இருந்தார். ராபர்டோ பெட் ஒரு பிரேசிலிய பெண், அவர் தனது பாலினத்தை ஆணாக மாற்றினார். ராபர்டோ பெட் வெளித்தோற்றத்தில் ஆணாக இருந்தாலும் இன்னும் பெண்ணாகவே இருக்கிறார், அவர்களுக்கு நோவா என்ற குழந்தை பிறந்தது. "ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ?" (எரேமியா 30:6). உயிரியல் ரீதியாகவோ அல்லது இதயத்தில் இருந்தோ இனப்பெருக்கம் செய்யலாம். ஏனெனில் நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் தான் எங்களுக்கான அவசியம் என்பதாக அந்த ஜோடி தெரிவித்தனர்.
சிருஷ்டிப்பு:
தேவன் தனது வார்த்தைகளால் பறவைகள், விலங்குகள் மற்றும் மீன்கள் என படைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். அவனை ஆதாம் என்றும் அவன் விலா எலும்பில் இருந்து எடுத்தவளை ஏவாள் என்றும் அழைத்தார். "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்" (ஆதியாகமம் 1:27).
பாவம் மற்றும் சாபம்:
முதல் தம்பதிகள் பாவம் செய்ததால், உடல் ஊனம் மற்றும் நோய் உள்ளிட்ட சாபம் மனிதகுலத்தின் மீது வந்தது. பெண் ஹார்மோன்கள் உள்ள ஆண் அல்லது ஆண் ஹார்மோன்கள் உள்ள பெண் திருநங்கை ஆகலாம். இளம் பருவத்திலே இதை கண்டுபிடித்தால் ஹார்மோன் சிகிச்சையை வழங்க முடியும்.
தெரிவு:
தேவன் மனிதனை, ஆணாகவோ, பெண்ணாகவோ படைக்கிறார். இது ஒரு தனி நபரின் தெரிவு அல்ல. ஆனால் பெண்களாக மாற விரும்பும் சிலரும் ஆண்களாக மாற விரும்பும் பெண்களும் உள்ளனர், இது தேவ நோக்கத்திற்கும் சித்தத்திற்கும் எதிரானது. அதை சாத்தியமாக்கும் மருத்துவ நடைமுறைகள் உள்ளன.
அணுகுமுறை:
எச்சரிக்கையான பெற்றோர்கள் குழந்தைகளின் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஆரோக்கியமாக வளர உதவலாம். திருநங்கைகளாக மாறுபவர்களை அனுதாபத்துடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளைப் போலவே, திருநங்கைகளும் இதுபோன்ற குறைபாடுகளைச் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
விருப்பங்கள்:
இயற்கைக்கு முரணான ஆசைகள் கொள்வது பாவம் (ரோமர் 1:24-26). தேவன் நிராகரிக்கப்படும்போது, பாவம் மற்றும் இருளின் படுகுழியில் மக்களை மூழ்கடிக்க அவர் அனுமதிக்கிறார்.
நான் வேதாகமத்தை நம்புகிறேனா அல்லது உலகின் போக்குகளைப் பின்பற்றுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்