தெய்வீக அன்பு

பவுல் ஒரு கோட்பாட்டையோ அல்லது ஒரு தத்துவத்தையோ கொடுக்கவில்லை, ஆனால் வாழ்க்கைக்கு தேவையான நல்ல கொள்கையை அளிக்கிறார் (1 கொரிந்தியர் 13).

 1) அன்பு பொறாமை கொள்ளாது:
"பொறாமையோ எலும்புருக்கி" (நீதிமொழிகள் 14:30). "சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்" 
(ரோமர் 12:15). ஆம், சந்தோஷப்படுகிறவர்களுடன் சந்தோஷப்படுவதே கிறிஸ்தவ மனப்பான்மை. பொறாமை கொண்டவர்கள், மற்றவர்கள் ஆசீர்வதிக்கப்படும்போது, தங்களுக்கு எல்லா தகுதியும் இருந்தும்  நமக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே என்று வருத்தமடைகிறார்கள்.

2) அன்பு தன்னை புகழாது:
மிகைப்படுத்தி அல்லது தற்பெருமை காட்டுபவர்கள் அல்லது தங்களை பெரியவர்கள் என்று கற்பனை செய்துகொண்டு, தன்னை உயர்த்திக் கொள்வதில் ஈடுபடுபவர்கள் பலர் உள்ளனர்.  உதாரணமாக, சில சிறந்த வரலாற்று ஆளுமைகள் அல்லது கடவுள்களின் வழித்தோன்றல்கள் என்று கூறும் மக்கள் குழுக்கள் உள்ளன.

  3) அன்பு பெருமை கொள்ளாது:
இந்த வகையான அன்பில் சுயத்திற்கான முக்கியத்துவம் இல்லை.    மேன்மை மனப்பான்மை, ஆணவமான நடத்தை மற்றும் ஆணவ மனப்பான்மை ஆகியவை மற்றவர்களை இழிவுபடுத்துவதில் மகிழ்ச்சியடைபவர்களின் பண்புகளாகும்.

 4) அன்பு இறுமாப்பாயிராது:
 இந்த வகையான அன்பைக் கொண்டவர்கள் மற்றவர்களின் உணர்வுகள், கவலைகள் மற்றும் ஆசைகளுக்கு உணர்திறன் உடையவர்கள்.  அவர்கள் இரக்கமின்றி மற்றவர்களை அச்சுறுத்தி பணிய செய்ய மாட்டார்கள்.  கடைசி நாட்களில் மக்கள் தவறாகவும், சூழ்ச்சியாகவும், முரட்டுத்தனமாகவும் இருப்பார்கள் என்று பவுல் எச்சரிக்கிறார்  (2 தீமோத்தேயு 3:1-5).  மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணும் சிலர் மற்றவர்களை  அவமானப்படுத்துவதிலும், அவமரியாதையளிப்பதிலும் அவமதிப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

  5) அன்பு சுயநலமற்றது:
சுயதேடுதல் என்பது தியாகத்திற்கு எதிரானது.  உண்மையான அன்பு உள்ளவர்கள் மற்றவர்களின் வெற்றிக்காக தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள்.  விசுவாசிகள் தேவனுடைய ராஜ்யத்திற்காக தியாகம் செய்கிறார்கள்.

  6) அன்பு எளிதில் கோபமடையாது:
 இவர்களுக்கு சிறுசிறு விஷயங்களுக்குக் கூட கோபம், எரிச்சல் போன்ற குணங்கள் இருக்காது.  மற்றவர்கள் தவறு செய்தாலும் அவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள்.  அவர்களின் அக்கறை மற்றவர்களின் நல்வாழ்வேயன்றி, அவர்களின் சுயம் அல்ல.

  7) அன்பு எந்த தவறுகளையும் பதிவு செய்யாது:
 இப்படிப்பட்ட அன்பு உள்ளவர்கள் பலமுறை மன்னித்து மறந்து விடுவார்கள்.  மன்னிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் பழைய விஷயங்களை குப்பையில் போட்டுவிட்டு எப்போதும் புதிய மனதுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.  அவர்கள் பல முறை மன்னிக்க தயாராக இருக்கிறார்கள் (மத்தேயு 18:21-22).

  8) அன்பு அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்:
இந்த வகையான அன்பு தீமையை அங்கீகரிக்காது, ஒரு தீய காரணத்தை மறைமுகமாக ஆதரிக்காது.  அது சத்தியத்தில் மகிழ்ச்சி அடைகிறது.

  நான் தெய்வீக அன்பை பயிற்சி செய்கிறேனா / பழக்கம் படுத்துகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download