ஆராதனை வீரர் என்று அழைக்கப்படும் ஒருவர்; “நான் திரைப்பட கலைஞர்களுடன் போட்டியிடுகிறேன். நான் அவர்களை விட சிறப்பாக பாடவும், நடனமாடவும், கச்சேரி செய்யவும் விரும்புகிறேன். என்னுடைய மேடை நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும். நான் கடவுளின் மகிமைக்காக இதைச் செய்கிறேன்” என்பதாக கூறினார். இது ஒரு முட்டாள்தனமான நபரின் பிரச்சனைக்குரிய, பரிதாபகரமான மற்றும் துன்பகரமான அறிக்கையல்லவா. துரதிருஷ்டவசமாக, இந்த நபர் ஒரு புதிய சொற்றொடர், கருத்து, மற்றும் தெய்வீக பொழுதுபோக்கு என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வை உருவாக்கியுள்ளார். ஆனால் நீங்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நீங்கள் ராஜாவின் ஆசாரியர். நீங்கள் ஒரு பரிசுத்த தேசம். நீங்கள் தேவனுக்குச் சொந்தமான மக்கள். தேவன் தாம் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் சொல்வதற்காக உங்களைத் தேர்ந்தெடுத்தார். அவரது அற்புதமான ஒளிக்கு இருளிலிருந்து அவர் உங்களை வரவழைத்தார் (1 பேதுரு 2:9) என்பதை இவர் போன்ற முட்டாள்தனமானவர்கள் அறிவதும் இல்லை, அனுபவிப்பதும் இல்லை. தங்களுக்கான வெளிச்சத்தையும் அக்கினியையும் உருவாக்குபவர்களை ஏசாயா தீர்க்கதரிசி; “பார், நீங்கள் உங்களது சொந்த வழியில் வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். உங்கள் நெருப்பையும் விளக்கையும் நீங்கள் பொருத்துகிறீர்கள். எனவே, உன் சொந்த வழியில் வாழ்வாயாக. ஆனால் நீ தண்டிக்கப்படுவாய். நீங்கள் உங்கள் நெருப்பில் விழுவீர்கள், நீங்கள் எரிக்கப்படுவீர்கள். நான் அது நடக்கும்படிச் செய்வேன்” (ஏசாயா 50:11) என்பதாக எச்சரிக்கிறார்.
தெய்வீகம்:
இது வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்ட பிரமாணங்கள், வேண்டுகோள்கள் மற்றும் சத்தியத்திற்கு இணங்குவதற்கான தரம், அணுகுமுறை மற்றும் நடைமுறை என வரையறுக்கப்பட்டுள்ளது; மற்றும் தேவனின் சித்தம் அல்லது திட்டம் அல்லது விருப்பத்தை அர்ப்பணிப்பு, தார்மீக நேர்மை, மரியாதைக்குரிய பயம் மற்றும் முழு அர்ப்பணிப்புடன் செய்வதாகும். அது பிரபலங்களைப் போல அல்ல, தேவனைப் போல் ஆகி விடுவதாகும். ஆனால் தேவனையும், அவருடைய நீதியையும், நற்குணத்தையும், கிருபையையும் மறுதலிப்பவர்கள், அவமதிப்பவர்கள், கீழ்ப்படியாதவர்கள் மற்றும் சந்தேகப்படுபவர்கள் தெய்வபக்தியற்ற மக்கள் ஆவார்கள்.
தற்செயலும் சிற்றின்பமும்:
ஆராதனை, ஊழியம், பிரசங்கம் மற்றும் கற்பித்தல் ஆகியவை சாதாரணமாகவோ அல்லது தற்செயலாகவோ அல்லது மாம்சமாகவோ செய்யக்கூடாது. ஆரோனின் மகன்கள் நாதாப் மற்றும் அபியூவும் தேவனுக்கான பலியைச் சர்வசாதாரணமாக அணுகியதால் இறந்தனர் (லேவியராகமம் 10:1-10). ஏலியின் மகன்களான ஓப்னியும் பினெகாசும் தங்கள் சரீர இச்சைகளுக்காக பலிபீடத்திலிருந்து பலிகளைத் திருடினார்கள் (1 சாமுவேல் 2:13-16). ஆக இந்த நான்கு இளைஞர்களும் தேவனின் வல்லமை, மகத்துவம் மற்றும் பரிசுத்தம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளாததால் இறந்தனர்.
செயல்திறன் அல்லது அழைப்பு:
ஒருவர் பாடவும், போதிக்கவும், கற்பிக்கவும் முடியும். ஒரு நல்ல காரியத்திற்காக நேரத்தை பயன்படுத்துவதற்காக தான் அவ்வாறு செய்கிறேன் என்றார். அவருக்கு தேவனுக்கு ஊழியம் செய்கிறோம் என்ற உணர்வோ, அழைப்பின் உணர்வோ இல்லை. அவ்வாறு செய்வதன் மூலம், அவர் நன்றாகவும், உற்சாகமாகவும், கௌரவமாகவும், விருந்தோம்பல் காட்டப்பட்டவராகவும் உணர்ந்தார்.
படுகுழியில் இருந்து இழுத்தல்:
Pulpit என்பதன் பொருள் மக்களை குழியிலிருந்து இழுப்பது ஆகும். இது நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் தளம் அல்ல, ஆனால் தேவனின் சிந்தையைப் பற்றி வெளிப்படுத்தும் இடமாகும்.
தேவனையும் பொழுதுபோக்கையும் ஒருங்கிணைக்க முடியாது என்பதை நான் உணர்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்