ஜீயஸ் மற்றும் ஹெர்ம்ஸ் ஒருமுறை லீஸ்த்ராவுக்கு வந்ததாக ஒரு புராணக்கதை இருந்தது, மனிதர்கள் மற்றும் நகரத்தில் யாரும் அவர்களை அடையாளம் காணவில்லை. அவர்களுக்கு விருந்தோம்பல் மறுக்கப்பட்டது. ஒரு வயதான தம்பதிகள் அவர்களை உபசரித்தனர். கோபத்தில், தேவர்கள் முழு நகரத்தையும் அழித்து, வயதான தம்பதிகளை மட்டும் காப்பாற்றின என கதைகள் உண்டு. பவுலும் பர்னபாவும் அந்நகரத்திற்குச் சென்றார்கள், ஒரு முடக்குவாதக்காரன் அற்புதமாக குணமடைந்தான். எனவே, அவர்கள் பவுல் மற்றும் பர்னபாவை, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டு, பலிகளை கொண்டு வந்து அவர்களை வணங்க விரும்பினர் (அப்போஸ்தலர் 14: 8-23). அப்போது பர்னபாவும் பவுலும் "மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்" என்றார்கள். ஆம், அந்த ஜனங்களால் வல்லமையைக் கவனிக்க முடிந்தது, ஆனால் வல்லமையின் மூலத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தியோக்கியா மற்றும் இக்கோனியாவிலிருந்து யூதர்கள் வந்து லீஸ்திரா ஜனங்களை அவர்களுக்கு எதிராகத் தூண்டினார்கள், பவுலைக் கல்லெறிந்து, அவர் மரித்துப் போனதாக எண்ணி பட்டணத்திற்கு வெளியே கொண்டு போட்டார்கள். நகர மக்களுக்கு கடவுள்களிடமிருந்து சில எதிர்பார்ப்புகள் இருந்தது, ஆனால் அது நிறைவேறவில்லை, எனவே பவுல் மற்றும் பர்னபா வடிவத்தில் ஹெர்ம்ஸ் மற்றும் ஜீயஸ் தாக்கப்பட்டனர்.
ஏற்றுக்கொள்ள வேண்டும்:
லீஸ்த்ராவின் மக்கள் தாங்கள் தெய்வங்களுக்கு செய்வதை அவைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதாவது அது காணிக்கை, தூபம் அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், மேலும் தெய்வங்கள் தங்கள் ஆன்மீகத்தால் சாந்தப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
அங்கீகரிக்க வேண்டும்:
லீஸ்திரா மக்கள் தங்கள் தெய்வங்கள் தங்கள் எல்லா செயல்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்பினர். பவுலும் பர்னபாவும் முயற்சித்தபடி அவர்கள் சொற்பொழிவு செய்யவோ, நற்செய்தி சொல்லவோ, திருத்தவோ அல்லது சரியான பாதையைக் காட்டவோ கூடாது.
பாராட்ட வேண்டும்:
பக்தர்கள் செய்யும் சேவையை கடவுள்கள் நன்றியுடன் பாராட்ட வேண்டும். கடவுள்களுக்கு விருப்பங்கள், தெரிவுகள் அல்லது முக்கியத்துவங்கள் இருக்கக்கூடாது.
பலனளிக்க வேண்டும்:
கடவுள்கள் பக்தர்களுக்கு செழிப்பு, நிம்மதி மற்றும் கௌரவத்தை வெகுமதியாக அல்லது பலனாக வழங்க வேண்டும்.
தாக்கப்பட வேண்டும்:
மக்கள் கட்டளையிட்டதை அல்லது கோரப்பட்டதைச் செய்யாதபோது, அவர்கள் தாக்கப்படலாம். லீஸ்திராவின் மக்கள் பவுலைத் தாக்கி, அடித்து, கல்லெறிந்து, அவர் இறந்துவிட்டதைக் கண்டுதான் வெளியேறினர்.
துணிவு வேண்டும்:
கடவுள்களை உருவாக்கும் துணிச்சல் மக்களுக்கு இருந்தது. இஸ்ரவேல் புதிய கடவுள்களைக் கோரியபோது, ஆரோன் அவர்களுக்காக ஒரு தங்கக் கன்று வடிவத்தில் ஒரு போலி தெய்வத்தை உருவாக்கினான் (யாத்திராகமம் 32:1-4).
மனித இதயம் போலி கடவுள்களை உருவாக்கும் தொழிற்சாலை என்றார் ஜான் கால்வின். தெய்வங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதே ஞானம்.
நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்