சிறுபான்மையினரான கிறிஸ்தவ சமூகத்தினரால் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் விண்ணப்பங்களை அரசாங்கத்திடம் முன்வைக்க அவர்கள் ஒரு செல்வாக்குமிக்க அரசியல்வாதியை நிகழ்ச்சிக்கு அழைத்தனர். பொதுவாக கிறிஸ்தவர்களிடம் தாராளமாக நடந்துகொள்ளும் அரசியல்வாதி கிண்டலாக ஒரு கருத்தைச் சொன்னார்; “உங்களுக்கு பரிசுகளை வழங்க நான் என்ன கிறிஸ்துமஸ் தாத்தா என்று நினைக்கிறீர்களா?”. இதைக் கேட்டதும் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகமும் அதிர்ச்சியடைந்தது. பின்னர், முக்கியத் தலைவர்களில் ஒருவர், சிறுபான்மையினரின் தாழ்வு மனப்பான்மையோடு, அரசியல் ரீதியாக பலம் வாய்ந்தவர்களோடு உறவு கொள்வது எவ்வளவு முட்டாள்தனம் என்றும், மேலும் கிறிஸ்தவர்களுக்கு அரசியல்வாதிகளை ஆசீர்வதிக்கவும், ஆலோசனை வழங்கவும், வழிநடத்தவும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கினார்.
யாக்கோபு மற்றும் பார்வோன்:
அந்த நேரத்தில் எகிப்து வரலாற்றில் மிகவும் வலிமைமிக்க நாடாக இருந்தது. தேசத்தை ஆளுவதற்கும் பஞ்ச காலத்தை நிர்வகிப்பதற்கும் யோசேப்பு பிரதமராக நியமிக்கப்பட்டார். யோசேப்பின் அழைப்பின் பேரில் யாக்கோபு மற்றும் அவனது குடும்பத்தினர் எகிப்துக்கு வந்தனர். பார்வோன் யாக்கோபை சந்திக்க ஒரு நேரத்தை முன்கூட்டியே நியமித்தான். வயது முதிர்ந்த யாக்கோபு ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ளவனாகவும் தன்னை அழைத்ததின் நோக்கத்தை அறிந்தவனாகவும் உணர்ந்தவனாகவும் பார்வோனை ஆசீர்வதித்தார் (ஆதியாகமம் 47:7-12). ஆசீர்வாதங்களை அளியுங்கள், நன்மைகளைத் தேடாதீர்கள்.
யோசேப்பு மற்றும் பார்வோன்:
வீடு பற்றிய ஏக்கம், எகிப்திலிருந்து எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற எண்ணம் யோசேப்பிற்கு இருந்தது. ஆகையால் யோசேப்பு இந்த வேதனையை சமையல்காரரிடம், அதாவது பார்வோனின் சமூகத்தில் மீண்டும் சேர்வதற்கான மறுசீரமைப்பு கனவை விளக்கினானே அவரிடம் பகிர்ந்து கொண்டார், ஆனாலும், யோசேப்பை மறந்து விட்டார். ஆனால் மீண்டும் யோசேப்பு நினைவுகூரப்பட்டு, கனவை விளக்குவதற்கு வரவழைக்கப்பட்டபோது, யோசேப்பு கேட்கும் முன்னரே பார்வோன் ஒரு உதவியைக் கேட்டார், மேலும் யோசேப்பை பிரதமராக (எகிப்தின் நிர்வாகி) நியமித்தார் (ஆதியாகமம் 40:140
பிலிப்பு மற்றும் எத்தியோப்பிய மந்திரி:
எருசலேமிலிருந்து தனது வீட்டிற்குத் திரும்பிப் பயணித்த எத்தியோப்பிய மந்திரியை அடைய தேவன் பிலிப்பை வழிநடத்தினார். மந்திரி ஏசாயா புத்தகத்திலிருந்து படித்துக்கொண்டிருந்தார், ஆனால் சத்தியத்தை அறிய முடியவில்லை. ஏசாயா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவான மேசியாவைக் குறிப்பிடுகிறார் என்று பிலிப்பு விளக்கினார். சத்தியத்தைக் கேட்ட மந்திரி தண்ணீரைக் கண்டதும், ஞானஸ்நானம் பெற விரும்பினார், பிலிப்பு அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். அடுத்த நொடியே, தேவ ஆவியானவர் பிலிப்பை அழைத்துச் சென்றார். ஒருவேளை, பிலிப்பு எருசலேமில் உள்ள விதவைகள் ஊழியம் அல்லது சமாரியாவில் புதிய திட்டங்களுக்கான மானியத்திற்கான தனது கோரிக்கையை மந்திரியிடம் வெளிப்படுத்துவதை கர்த்தர் விரும்பவில்லை போலும்.
உலகத் தலைவர்களுக்குக் கற்பிக்கக் கொடுக்கப்பட்ட ஞானத்தை நான் சரியாக பயன்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்