பண்டைய கட்டிடக்கலையில், கட்டிடத்தின் மிக முக்கியமான புள்ளியாக மூலைக்கல் அல்லது முட்டுக்கல் இருந்தது. அது மூலையில் வைக்கப்பட்ட பெரிய, வலிமையான மற்றும் திடமான முதன்மையான கல் மற்றும் முழு கட்டிடமும் அதிலிருந்து கட்டப்பட்டது. மீதமுள்ள கட்டுமானத்தின் சீரமைப்பு மற்றும் அளவீடு அதிலிருந்து தீர்மானிக்கப்படுகிறது. கர்த்தராகிய இயேசுவே மூலக்கல்லாக இருக்கிறார் (ஏசாயா 28:16-17; 1 பேதுரு 2:6; எபேசியர் 2:19-21). தேவன் கன்மலையும், கோட்டையும் மற்றும் இரட்சகரும் என்று சங்கீதக்காரனாகிய தாவீது கூறுகிறார் (சங்கீதம் 18:2).
விலையேறப்பெற்றது:
யூதாவில் கேலி செய்பவர்களுக்கும், பெருமை பேசுபவர்களுக்கும், கிண்டல் செய்பவர்களுக்கும் உணர்த்தும் வகையில் அஸ்திபாரமாக ஒரு கல்லை சீயோனில் வைப்பதாகவும், அவரை விசுவாசித்தால், அவர்களின் வாழ்க்கையில் உறுதியான அடித்தளத்தை வழங்க, தேவன் தனது விலையேறப்பெற்ற குமாரனை அனுப்புவார் என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறினார். இந்த கல் விலையேறப்பெற்றது, தனித்துவமானது மற்றும் அறுதிஇறுதியானது. அது வேறு யாரும் இல்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், பிதாவிற்கு விலையேறப்பெற்றவர் (1 பேதுரு 2:4). சி.எச். ஸ்பர்ஜன் கிறிஸ்து ஒவ்வொரு விசுவாசியின் தேவைக்கும் உள்ளார்ந்த, நேர்மறை, ஒப்பீட்டு, மிகைப்படுத்தல் மற்றும் பொருத்தமான விலையேறப்பெற்றவர் என்கிறார்.
சோதனை செய்யப்பட்டது:
கர்த்தராகிய இயேசு சோதிக்கப்பட்டார், ஆனால் அவர் பாவம் செய்யாதவர் என்பதை நிரூபித்தார். உலகத்தின் பாவங்களான கண்களின் ஆசை, மாம்சத்தின் இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமை ஆகியவை அவரைக் கெடுக்கவோ அல்லது மாசுபடுத்தவோ முடியாது. அவர் தேவனின் பரிசுத்த குமாரன், கர்த்தராகிய ஆண்டவர் மற்றும் இரட்சகர்.
நிச்சயமான அடித்தளம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலக்கல்லானது மனிதர்களுக்கு உறுதியான அடித்தளம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அவருடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள், கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போன்றவர்கள் என்று கூறினார் (மத்தேயு 7:24-27).
அவிசுவாசத்தால் நிராகரிக்கப்பட்டது:
கட்டிடம் கட்டுபவர்களுக்கு மூலைக்கல்லைப் பற்றி சரியான பகுத்தறிவு இல்லாமல் இருக்கலாம். அதுபோலவே, மூலக்கல்லின்றிக் கட்ட முயற்சிக்கும் பல மதக் கட்டுனர்களும் உள்ளனர், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடையும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து புறணிக்கப்பட்டவர், தேர்ந்தெடுக்கப்பட்ட தேசத்தால் நிராகரிக்கப்பட்டார் (ஏசாயா 53:3).
கலகத்தால் தடுமாற்றம்:
கிழக்கிலிருந்து ஞானிகள் பிறந்த ராஜாவை வணங்க வந்தனர். அதே நேரத்தில், ஏரோது குழந்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் கொல்ல விரும்பினான். ஏரோதின் கலக ஆவி மூலக்கல்லாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் தடுமாறியது (மாற்கு 12:10; சங்கீதம் 118:22). நியாயத்தீர்ப்பில் “இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்” (மத்தேயு 21:44).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என் வாழ்வின் மூலக்கல்லாகவும் அடித்தளமாகவும் இருக்கிறாரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்