சித்தம் இருந்தால் சுத்தம்

1. நோயிலிருந்து சுத்தம்
மத்தேயு 8:1-3, மாற்கு 1:39-44, லூக்கா 5:12,13 குஷ்டரோகி ஒருவன் இயேசுவிடம் வந்து, உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத்தொட்டு, எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி, அவன் சுத்தமானான்.
2இராஜாக்கள் 5:10-14 நாகமான் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.
    
2. பாவத்திலிருந்து சுத்தம்
சங்கீதம் 51:1,2,7 பாவத்தினால் கறைபட்டுப்போன தாவீது என் மீறுதல்  நீங்க என்னைச் சுத்திகரியும், என் பாவமற சுத்திகரியும். என்னை ஈசோப்பினால் சுத்திகரியும். என்று வேண்டுகிறான்.
1யோவான் 1:7,9 இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

3. அசுத்தத்திலிருந்து சுத்தம்
எசேக்கியேல் 36:25 நான் உங்கள் மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன். உங்களுடைய எல்லா விக்கிரகங்களையும் நீக்கி சுத்தமாக்குவேன் நீங்கள் சுத்தமாவீர்கள்.
1தெசலோனிக்கேயர் 4:7 தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத் திற்கே அழைத்திருக்கிறார்.

இதர வசனங்கள்
மத்தேயு 5:8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
1பேதுரு 1:22 உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாயி ருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.
அப்போஸ்தலர் 10:15, 11:9 தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக  எண்ணாதே.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download