கிறிஸ்துவும் தொடர்பியலும்

"இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்" (எபிரெயர் 1:2)

1) மாம்சமாகுதல்:
அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்பதாக அப்போஸ்தலனாகிய யோவான் தெளிவாக எழுதுகிறார் (யோவான் 1:14). மாம்சமாகுதல் என்பது மனிதச் சூழலில் தன்னைக் காணக்கூடியதாகவும், அனுபவமிக்கவராகவும், தொடக்கூடியதாகவும் ஆக்குவதற்கான தேவனின் வழியாகும்.

2) தொடங்குதல்:
கர்த்தராகிய இயேசு நாசரேத்திற்கு வந்து அறிக்கையை வாசித்து தேவ ராஜ்யத்தைத் தொடங்கினார் (லூக்கா 4). 

3) அழைத்தல்:
கர்த்தர் ஜனங்களை 'வந்து பாருங்கள்' என்று அழைத்தார். ஆம், வந்து தங்கி உடனிருந்து பார்க்கும்படி அழைத்தார் (யோவான் 1:38-39). 

4) அறிவுறுத்தல்:
கர்த்தராகிய இயேசுவின் காலத்தின் பெரும்பகுதி போதனை, செயல் (நடப்பித்தல்) மற்றும் உவமைகளில் செலவிடப்பட்டது.

5) விளக்கமளித்தல்:
கர்த்தராகிய இயேசு மோசேயின் நியாயப்பிரமாணத்தை மலைப்பிரசங்கமாக, நியாயப்பிரமாணத்தின் உணர்வை ஒருமுகப்படுத்தவும் எல்லா சூழல்களிலும் பொருந்தும் வகையிலும் விளக்கினார். பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் நீதியைப் பற்றிய அறிவின்மை மற்றும் வேதத்தைப் பற்றிய தவறான புரிதலை கர்த்தர் எதிர்த்தார்.

6) தலையீடுதல்:
இறந்தவர்களை உயிர்த்தெழுப்புதல், குருடர்கள், முடமானவர்கள், தொழுநோயாளிகளைக் குணப்படுத்துதல் போன்று தனிநபர்கள் அல்லது சமூகங்கள் என மக்களின் வாழ்வில் ஆண்டவர் இயேசு தலையிட்டார்.

7) ஈர்க்கப்படுதல்:
குழந்தைகள் ஆண்டவரால் ஈர்க்கப்பட்டனர், அநேகமாக அவருடைய புன்னகையும் இரக்கமும் அவர்களை ஈர்த்தது. அவரது சீஷர்கள் குழந்தைகளைத் தடுக்க முயன்றார்கள்;  கர்த்தர் சீஷர்களைக் கண்டித்தார்.

8) ஈடுபடுதல்:
கானா ஊரில் நடந்த ஒரு திருமணத்தில் ஆண்டவர் இயேசு தம் சீஷர்களுடன் கலந்து கொண்டார். லாசரு மரித்தபோது துக்கமடைந்த மார்த்தாள் மற்றும் மரியாளின் குடும்பத்தை ஆறுதல்படுத்த அவர் சென்றார் (யோவான் 2,11). 

 9) தகவலளித்தல்:
 பரலோகம், பிதாவின் வாசஸ்தலம் அல்லது மாளிகைகள் பற்றிய தகவல்களை ஆண்டவர் பகிர்ந்து கொண்டார் (யோவான் 14:1-3). 

10) நேர்காணல்:
மதத் தலைவரும் யூத ஆலோசனைச் சங்கத்தின் உறுப்பினருமான நிக்கொதேமுவுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுவதற்கு ஆண்டவர் தயாராக இருந்தார் (யோவான் 3).

 11) வினவல்:
ஆண்டவர் தம் சீஷர்களிடம் கேள்விகள் கேட்டு உரையாடினார். "மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்". பின்பதாக "அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்" (மத்தேயு 16:13,15). 

12) தாக்கத்தை ஏற்படுத்துதல்:
கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களின் பாதங்களைக் கழுவி சேவை செய்வது எப்படி என்பதை அவர்களுக்கு நிரூபித்தார்.

13) முதலீடு செய்தல்:
ஆண்டவர் சீஷர்களின் வாழ்வில் அன்பை முதலீடு செய்தார் (யோவான் 17:26). 

14) பரிந்துரைத்தல்:
கர்த்தர் தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்காகப் பரிந்துபேசினார், மன்னிப்பைக் கோரினார்.

15) வழங்குதல்:
உயிர்த்தெழுந்த பிறகு, அவர் அவர்கள் மீது பரிசுத்த ஆவியை ஊதினார் (யோவான் 20:22). 

நான் ஒவ்வொரு நாளும் சாந்தகுணமுள்ள ஆண்டவரிடம் கற்றுக்கொள்கிறேனா?

  Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download