சுமையை தேவனிடம் இறக்குதல்

ஒரு இளைஞன் கனமான மற்றும் முதுகில் பெரிய பையுடன் ரயிலில் ஏறினான். அவன் உள்ளே ஏறியதும், அவனது பை மற்றவர்களுக்கு தொந்தரவாக இருந்தது, ஆனால் அவன் கவலைப்படவில்லை.  அவன் பையை கீழே இறக்கி வைக்காமலே இருக்கையில் அமர்ந்தான்,  அப்போது அங்கு ஒரு முதியவர் மிகுந்த சிரமத்துடன் பையையும் கையில் பிடித்தபடி உள்ளே ஏறினார்.  இந்த இளைஞன் அவருக்கு உதவ விரும்பினான்.  அப்போது அவன் எழுந்து நிற்கும் போது, ​​அவனது முதுகில் இருந்த பை முதியவரின் முகத்தில் இடித்தது மாத்திரமல்ல, போட்டிருந்த கண்ணாடியும் தட்டி விழ வைத்தது. முதியவர் அவனைப் பார்த்து கொஞ்சம் கடுமையாக; "முதலில், உன் பையை ஒரு ஓரமாக வை, பின்னர் எனக்கு உதவு” என்றார். ஆம், இந்த இளைஞனைப் போன்ற பல விசுவாசிகள் தங்கள் கவலை என்னும் முதுகுப்பையைப் பிரிய விரும்புவதில்லை. கர்த்தர் தம் பிள்ளைகளை  கவனித்துக்கொள்வதால், எல்லா கவலைகளையும் கர்த்தர் மீது போடுமாறு பேதுரு அறிவுறுத்துகிறார் (1 பேதுரு 5:7)

உணர்தல்: 
ஒரு நபர் உணர வேண்டும், இந்த உலகத்தின் கவலைகள், பயம், துன்பங்கள், துயரங்கள் மற்றும் மன அழுத்தத்தை தன்னால் கையாள முடியாது, தேவனிடம் ஒப்படைத்தால் மட்டுமே முடியும். பெரும்பாலான விசுவாசிகள், முதலில் தங்கள் சுமைகளை தாங்களாகவே கையாள முயற்சி செய்கிறார்கள். சோர்வாக இருக்கும்போதுதான், தேவனின் உதவி தேவை என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.  ஊதாரி மகன் தனது அறிவு, ஞானம், வளங்கள் மற்றும் திறமைகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டியிருந்தது.  சரீரத்தில் ஏற்பட்ட பசி அவனை ஆவிக்குரிய நுண்ணறிவைப் பெறத் தூண்டியது, அது அவனது தந்தையுடன் ஒப்புரவாகச் செய்து மீட்டெடுக்க உதவியது (லூக்கா 15:11-32).  

மனந்திரும்புதல்: 
தன்னால்  முடியும் என நினைப்பது பாவம் ஆகும்.   எனவே, அவர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை மனப்பான்மையையும், வீணான தன்னம்பிக்கையையும் நினைத்து மனம் திருந்த வேண்டும்;  மாறாக, தேவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.  

நம்பகத்தன்மை:  
தேவன் உண்மையுள்ளவர்.   அவருடைய வாக்குத்தத்தங்கள் சத்தியமானவை. படைப்பாளியும் சர்வவல்லமையும் கொண்ட கடவுளாக, அவர் மட்டுமே நம் எல்லா சுமைகளையும் சுமக்க முடியும்.   ஆச்சரியப்படும் விதமாக, பிரபஞ்சத்தின் தேவனானவர் நம் வாழ்விலும், நமது சுமைகளிலும், சவால்களிலும் அக்கறை கொண்டுள்ளார்.  

தெரியப்படுத்துதல்:  
விசுவாசிகள் கர்த்தருக்கு 'தெரிவிக்க வேண்டும்' என்று பவுல் எழுதுகிறார், பின்னர் மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு சமாதானம் நம் இதயங்களையும் மனதையும் நிரப்புகிறது (பிலிப்பியர் 4:6-7)

மகிழ்ச்சியோடு இருங்கள்:  
விசுவாசிகளின் இருதயங்களில் அமைதி நிலவும் போது, அவர்கள் கர்த்தருக்குள் மகிழ்ச்சியடைய முடியும்.  கர்த்தரை நம்பி, அவர் தரும் தீர்வையும், அவர் அளிக்கும் வெற்றியையும் விசுவாசிகள் எல்லா காலங்களிலும் கொண்டாடலாம்.   

நான் மனப்பூர்வமாக என் பாரத்தை கர்த்தரிடத்தில் வைக்கின்றேனா?  

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download