உஷாரான உக்கிராணக்காரர்கள்

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் தங்கள் தலைவர்களை எகிப்திய பணி அதிகாரிகளுடன் ஒப்பிட்டார்.  அவர்கள் வளங்களை (மூலப்பொருட்கள்) கொடுக்கவில்லை, ஆனால் செய்ய வேண்டிய வேலையை செய்து முடிக்க எதிர்பார்த்தனர் (யாத்திராகமம் 5:7-9).‌ வேலையாட்கள் பற்றி குறைந்தது இரண்டு உவமைகளில் கற்பிக்கப்படுகிறது; பத்து ராத்தல் உவமை மற்றும் தாலந்து உவமை (லூக்கா 19:11-27; மத்தேயு 25:14-30).

வளங்கள்:
இரண்டு உவமைகளிலும், ஒவ்வொருவருக்கும் முதலீடு செய்வதற்கும் லாபகரமான தொழிலில் ஈடுபடுவதற்கும் கணிசமான தொகை வழங்கப்படுகிறது.  தேவன் சில வளங்களை அனைவருக்கும் சம அளவில் கொடுத்துள்ளார்.  உதாரணமாக சொல்ல வேண்டுமானால், இருபத்தி நான்கு மணிநேரம் என்பது கல்வி, இனம், வேலைவாய்ப்பு, வயது, தேசியம் மற்றும் சூழல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்ட சமமான பரிசு.  திறமைகள் அனைத்து மனிதர்களுக்கும் மற்றும் ஆவிக்குரிய தாலந்துகள் (வரங்கள்) அனைத்து விசுவாசிகளுக்கும் வழங்கப்படுகின்றன.

அதிகாரம்:
தாலந்துகள் அல்லது ராத்தல் பெற்றவர்கள் சிறந்த நடைமுறைகளின்படி மற்றும் சட்டத்தின்படி வளங்களைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றனர். ஆனால் சில தலைவர்கள் அதிகாரத்தை வழங்குவதில்லை, மாறாக மற்றவர்களிடமிருந்து பலனை மட்டும் நாடுகிறார்கள்.

பொறுப்பு:
அவர்கள் வெளியே சென்று, தங்கள் ஞானம், படைப்பாற்றல் மற்றும் வாய்ப்புகளை (ராத்தல்/தாலந்துகள்) பயன்படுத்தி லாபம் ஈட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஒவ்வொரு நபரும் தனது அழைப்பு, ஆர்வம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றில் செயல்பட முடியும்.  நல்ல சிரத்தையுடன் இருப்பவர்கள் அதிகபட்ச பலனைக் கொண்டுவருவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த முடியும்.

கணக்கு ஒப்புவிப்பு:
இரண்டு உவமைகளிலும், எஜமான் தொழிலாளர்களை பொறுப்பாக்கினார்.  கணக்கு ஒப்புவிக்காமல், வளங்கள், அதிகாரம் மற்றும் பொறுப்பு ஆகியவை, தவறாகப் பயன்படுத்தப்படலாம் அல்லது அழிக்கப்படலாம்.  தாலந்தின் உவமையில், ஒரு தாலந்து கொண்ட ஒருவர் வட்டி சம்பாதிக்க வங்கியில் முதலீடு செய்யவில்லை, ஆனால் அதை புதைத்துவிட்டார்.

வளர்ச்சி:
சோம்பேறி, பயனற்ற, வீணான, முட்டாள் வேலைக்காரனின் பத்து ராத்தலை எஜமான் பறித்து, இருபது ராத்தல் வைத்திருந்த வேலைக்காரனுக்குக் கொடுத்தார்.  இதேபோல், ஐந்து தாலந்து கொண்ட மனிதனுக்கு தாலந்துகளின் உவமையில் வெகுமதி அளிக்கப்பட்டது.  "உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார் (மத்தேயு 25:29).

முட்டாள் உக்கிராணக்காரர்கள்:
பொறுப்பைக் கொடுத்தாலும், போதுமான ஆதாரங்களையும் அதிகாரத்தையும் கொடுக்க மறுக்கும் தலைவர்கள் முட்டாள்தனமான அடக்குமுறையாளர்கள்.  அவர்கள் தங்கள் முட்டாள்தனமான நிர்வாகத்திற்காக தேவனிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

எனக்கு கொடுக்கப்பட்ட தாலந்தை பெருக்கும் உக்கிராணக்காரனா அல்லது இருப்பதையும் பறிகொடுக்கும் சோம்பேறியா?

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download