'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்பது பிரபலமான தமிழ் சொற்றொடர். அதாவது ஒரு நபருக்கான அனைத்து வாழ்க்கைப் பாடங்களையும் குடும்பம் வழங்குகிறது என்பது கருத்து. நிச்சயமாகவே, ஒரு கிறிஸ்தவ குடும்பம் இந்த உலகத்திற்கு நல்ல வாழ்க்கைப் பாடங்களை தருவது மட்டுமல்ல, நித்தியத்திற்கும் வழங்குகிறது. "ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:20-24)
ஆதாமிற்கு ஏற்ற துணை தேவை:
யாரும் தன்னிறைவு அதாவது தன்னைத் தானே சார்ந்தவர்கள் அல்ல, அனைவரும் மற்றவர்களைச் சார்ந்தவர்கள். ஆதாம், ஏதேன் தோட்டத்தில் கூட தனிமையை உணர்ந்தான். அவனுக்கு உதவியாளர் அல்லது துணை தேவைப்பட்டது. ஆதாம் தன் மனைவி ஏவாள் இல்லாமல் முழுமையற்றவனாக இருப்பான்.
ஏவாளை உருவாக்க தேவன் எடுத்த ஆதாமின் நகலி:
இன்றைக்கு விஞ்ஞான உலகில் உயிரணு (குளோனிங்) பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. முதல் மனிதனான ஆதாமிற்கு தேவன் அதைச் செய்தார். தேவன் ஆதாமை தூங்க வைத்தார். அவனுக்கு ஒரு மனைவியை உருவாக்கும் பொறுப்பை தேவனே ஏற்றுக்கொண்டார். ஆதாமின் விலா எலும்பை எடுத்துக்கொண்டு, தேவன் ஏவாளை உருவாக்கினார், ஆம், ஒரு பெண்ணை தான் சிருஷ்டித்தாரே தவிர, வேறொரு ஆணையல்ல.
தேவன் பெண்ணை ஆதாமிடம் ஒப்படைத்தார்:
தேவன் ஆதாமிடம் அந்த பெண்ணைக் கொடுத்தார். ஆம், தேவன் ஆதாமுக்கு மனைவியின் வடிவத்தில் ஒரு பரிசைக் கொடுத்தார். ஆக, ஒருவன் தேவனின் சித்தத்தைத் தேடும்போது அவனுக்கு ஒரு துணையைக் கொடுக்கிறார் என்று இது கற்பிக்கிறது.
பாடல்:
ஏவாளின் பார்வை, ஆதாமைக் கவிஞனாக்கியது. அவளைப் பார்த்து ஆதாம் மகிழ்ச்சியுடன் "என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய்" ஆனவளே எனப் பாடினான். மனிதன் தன் மனைவியை தேவனின் பரிசாகக் (ஈவாக) காணும்போது, மகிழ்ச்சியும், பாடலும், நடனமும் இருக்கும்.
உடன்படிக்கை:
புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான் என்று தேவன் கூறினார். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். உடன்படிக்கை உறவு என்பது ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்பதும், கீழ்ப்படிவதும், அன்புடன் இருப்பதும், உதவி செய்தலும், அதிகாரமளித்தலும், மேம்படுத்துதலும் ஆகும். இந்த வாழ்க்கையில் ஒரே நோக்கம், ஒரே ஒரு குறிக்கோள், ஒருமனம் மற்றும் ஒரே தரிசனம்.
மர்மம்:
உறவு ஒரு மர்மம் அல்லது புதிர். ஒரு நிஜமான குடும்பமாக வேண்டுமென்றால்; குடும்பத்திற்குள் சிலுவையின் கொள்கையைப் பயன்படுத்துங்கள்: குரோஷியாவில் உள்ள சபை, சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றுங்கள் என்ற ஆண்டவரின் அழைப்பை திருமண வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்தியது? (மத்தேயு 16:24-26).
இது இணையத்திலிருந்து ஒரு பகுதி: குரோஷிய பாரம்பரியத்தின் படி, ஒரு ஜோடி திருமணம் செய்துகொள்ளும் போது, போதகர் அவர்களைப் பார்த்து சரியான நபரைக் கண்டுபிடித்ததாகச் சொல்லவில்லை. மாறாக; அவர் அவர்களிடம் "உங்கள் சிலுவையை நீங்கள் கண்டுபிடித்துள்ளீர்கள், இந்த சிலுவை நேசிக்க வேண்டிய மற்றும் எப்போதும் உடன் எடுத்துச் செல்ல வேண்டிய சிலுவை, இச்சிலுவை தூக்கி போடுவதற்கல்ல, ஒரு பொக்கிஷமாக பாதுக்காக்க வேண்டும்", என்றார். எர்செகோவினாவில், சிலுவை என்பது மிகப்பெரிய அன்பைக் குறிக்கிறது, சிலுவையில் அறையப்படுதல் என்பது குடும்பத்தின் பொக்கிஷமாக அறியப்படுகிறது.
மணமகனும், மணமகளும் தங்கள் திருமண நாளில் தேவாலயத்திற்குள் நுழைகிறார்கள், அவர்கள் தங்களுடன் ஒரு சிலுவையை எடுத்துச் செல்கிறார்கள். போதகர் சிலுவையை ஆசீர்வதிக்கிறார்; மணமகள் தனது வலது கையை சிலுவையின் மீது வைக்கிறார், மணமகன் தனது கையை அவள் மீது வைக்கிறார், இதனால் இரு கைகளும் சிலுவையின் மீது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. திருச்சபையின் சடங்குகளின்படி, சந்தோஷத்திலும் துக்கத்திலும், நோய் மற்றும் ஆரோக்கியத்திலும், மரணம் என்னும் ஒன்று பிரிக்கும் வரை ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், அப்படியாக அவர்கள் தங்கள் சத்தியங்களை பரிமாறிக் கொள்ளும்போது போதகர் தனது திருச்சபை துணியால் அவர்களின் கைகளை மூடுகிறார். பின்னர் மணமக்கள் சிலுவையை முத்தமிடுகிறார்கள். திருமண விழாவைக் கண்டவர்கள், அவர்களில் ஒருவர் மற்றவரை விட்டுவிட்டால், அவர்கள் கிறிஸ்துவை சிலுவையில் விட்டுவிடுகிறார்கள் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்கிறார்கள்.
பின்னர் தம்பதிகள் சிலுவையை தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து மரியாதைக்குரிய இடத்தில் வைக்கிறார்கள். அது எப்போதும் முக்கியமானதாகவும், குடும்ப ஜெபம் செய்யும் இடத்தில் இருக்கும். இக்கட்டான சமயங்களில், அக்குடும்பம் வழக்கறிஞரிடமோ அல்லது மனநல மருத்துவரிடமோ செல்லாமல், இயேசு கிறிஸ்துவின் உதவியைத் தேடி சிலுவையின் முன் ஒன்றாக மண்டியிடுகிறார்கள். கணவனும் மனைவியும் தங்கள் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் சிலுவையை மறக்காமல் முத்தமிடவும், இயேசுவுக்கு நன்றி செலுத்தவும், அவருடைய மன்னிப்பை நாடாமல் தூங்க செல்ல கூடாது என்றும் கற்றுக் கொடுப்பார்கள், மேலும் இயேசு அவர்களைத் தம் கைகளில் பிடித்துக் கொண்டிருக்கிறார், பயப்பட ஒன்றுமில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.
சவால்
தேவன் குடும்பத்தை உறவுகளின் நிறுவனமாகப் படைத்தார். ஆதாமுக்கு உலகம் ஏதேன் தோட்டம். அதையும் தாண்டி அவனுக்கு ஏவாள் என்றொரு முழுமையான வாழ்க்கை தேவைப்பட்டது. ஒரு மனிதன் இந்த உலகில் அனைத்தையும் கொண்டிருக்க முடியும், ஆனால் நிறைவு, முழுமை மற்றும் நோக்கத்திற்காக மனைவி தேவை; மனைவிக்கும் அவ்வாறே கணவன் தேவை.
Author: Rev. Dr. J .N. மனோகரன்