1. நீங்கள் உப்பாயிருக்கிறீர்கள்
மத்தேயு 5:13; மாற்கு 9:50 நீங்கள் பூமிக்கு உப்பாயிருங்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப் படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது... உப்புடையவராயிருங்கள்
கொலோசெயர் 4:6 உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
2. நீங்கள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்
மத்தேயு 5:14 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;
லூக்கா 11:35 உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கை...
எபேசியர் 5:8 முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொ ழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்;
1தெசலோனிக்கேயர் 5:5 நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்;
3. நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்
மத்தேயு 6:26 லூக்கா 12:7,24 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாரு ங்கள்... அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
மத்தேயு 10:31; பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவி களைப்பார்க்கிலும், நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்
4. நீங்கள் சாட்சிகளாயிருக்கிறீர்கள்
அப்போஸ்தலர் 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்
யோவான் 15:26-27 நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்
5. நீங்கள் புத்திரராயிருக்கிறீர்கள்
கலாத்தியர் 3:26 நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே
மத்தேயு 5:45 நீங்கள் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.
ரோமர் 8:14 எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார் களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள்.
Author: Rev. M. Arul Doss