ரோமானியப் பேரரசு வல்லரசாக இருந்த காலங்களில், ரோமானிய வீரர்கள் தங்கள் ஒழுக்கம், கடமை, கண்ணியம், விசுவாசம் மற்றும் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றுக்கு பெயர் பெற்றவர்கள். நூற்றுக்கு அதிபதி ஒரு வித்தியாசமான சூழ்நிலைகளைப் பார்க்கிறான்; பெண்கள் கூக்குரலிடுகிறார்கள், படையினர் கேலி செய்கிறார்கள், அவர்கள் தேர்ந்தெடுத்த ‘பரபாஸ்’ விடுவிக்கப்பட்டதால் கட்டுக்கடங்காத கும்பல் ஆரவாரம் செய்கின்றது, கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டார், ஒரு திருடன் கேலி செய்கிறான், மற்றொருவன் ஜெபிக்கிறான்.
அவனுக்கு இந்த சூழலைப் புரிந்து கொள்ளவோ இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. கர்த்தராகிய இயேசுவின் ஆடையை அவன் தனது உரிமையாக எடுத்துக் கொள்ள முடியும். மாற்கு கூற்றுப்படி, அவன் கர்த்தராகிய இயேசுவின் முன் அந்த கும்பலுடன் சேராமல் தனித்து நின்றான். அவன் சார்ந்திருக்கும் தொழில் தர்மப்படி பார்த்தால் அப்படி துக்கப்படுகிற குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இருக்க முடியாது.
நூற்றுக்கு அதிபதி கவனித்தது என்னவெனில், கோபம் அல்லது விரக்தியின் ஒரு கணத்தில் குற்றம் செய்த பல குற்றவாளிகளைப் போல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ‘குற்றவுணர்வோடு இல்லை'. மேலும், இயேசு கிறிஸ்து எதிரிகளுக்காகவும் அவர்களின் தப்பிதங்களுக்காகவும் பிதாவிடம் பரிந்து பேசி மன்னிப்பு கேட்பதை அவன் வேறு எங்குமே கண்டதில்லை (லூக்கா 23:34). பொதுவாக குற்றவாளிகள் தாங்கள் தவறிழைத்து விட்டு அனைவரையும் சபிப்பார்கள், ஆனால் இயேசு அவ்வாறு செய்யவில்லையே. தாய் மீது காட்டிய இரக்கத்தின் மூலம் இயேசுவின் மென்மையான தன்மை வெளிப்படுத்தப்பட்டது (யோவான் 19: 26-27). திருடனுக்கு தேவ ராஜ்யத்தின் உறுதியின் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நம்பிக்கை, கௌவுரவம், அங்கீகாரம் மற்றும் அதிகாரம் ஆகியவை ராஜாவின் ராஜாவாக கடவுளுடைய ராஜ்யத்திற்கான உறுதி திருடனுக்குத் தெளிவாகத் தெரிந்தது (லூக்கா 23:42-43). மேலும் நூற்றுக்கு அதிபதி தனது வாழ்நாளில் பூகம்பத்துடன் கூடிய மூன்று மணி நேரம் இருளைக் கண்டதில்லை (மத்தேயு :26:45, மாற்கு 15:43). ஆண்டவரின், ஒரு காரியத்தின் முடிவும் மற்றும் "எல்லாம் முடிந்தது" என்ற (யோவான் 19:30) வெற்றியின் ஓலம் மிகவும் தனித்துவமானது. கர்த்தராகிய இயேசு தம்முடைய ஆவியை விட்டுக்கொடுத்த அமைதியும் சமாதானமும் நூற்றுக்கு அதிபதியின் இதயத்தைத் தொட்டது.
"நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்" (லூக்கா 23:47). அதோடு அவன் நிறுத்தவில்லை, பிதாவிடமிருந்து வெளிப்பாடு பெற்றவனாய் "மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன், என்றான்" (மாற்கு 15:39). இது மக்கள் முன்பாக பொந்தியு பிலாத்துவை பகிங்கரமாக கண்டித்தது மற்றும் புறஜாதியினரின் பிரதிநிதியாகவும் சாட்சி சொன்னான். 24 மணிநேரமும் கிறிஸ்துவின் துயரத்தைத் தவிர வேறு எதையும் அவன் காணவில்லை என்றாலும், அவன் தனது சீசருக்கு உரிய மிக உயர்ந்த மரியாதை அளித்தான்.
கர்த்தராகிய இயேசு தேவனுடய குமாரன் என்று நான் அறிவிக்கிறேனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J. N. Manokaran