இரட்டிப்பாய் தரும் இறைவன்

யோபு 42:10,12 யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க்  கர்த்தர்  அவனுக்குத் தந்தருளினார். கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும்  அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்.

1. இரட்டிப்பான வரம்
2இராஜாக்கள் 2:9 (1-14) எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னை விட்டு எடுத்துக்கொள்ளப்படும்முன்னே நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரட்டிப்பாய் கிடைக்கும்படி வேண்டுகிறேன்

2. இரட்டிப்பான நன்மை
சகரியா 9:12 நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்கு திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்   
 சங்கீதம் 85:12 கர்த்தர் நன்மையானதைத் தருவார்.
சங்கீதம் 84:11 உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்

3. இரட்டிப்பான சுதந்தரம்
ஏசாயா 61:7 உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலட்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப் படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி உண்டாகும்.

4. இரட்டிப்பான கனம்
1தீமோத்தேயு 5:17 நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிற வர்களை, இரட்டிப்பான கனத்திற்கு பாத்திரராக எண்ணவேண்டும்.

5. இரட்டிப்பான பங்கு
1சாமுவேல் 1:5 எல்க்கானா அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download