மறு உத்தரவு அளிக்கும் கர்த்தர்

எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

1. கூப்பிடுபவருக்கு மறுஉத்தரவு அளிக்கும் கர்த்தர்
சங்கீதம் 91:15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிசெய்வேன்
சங்கீதம் 138:3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறு உத்தரவு அருளினீர்; 
ஏசாயா 30:19 உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு மறுஉத்தரவு அருளுவார்
ஏசாயா 58:7-12நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்; இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்.
ஏசாயா 65:17-25 அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன் அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
யோனா 2:2 என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார் 

2. காத்திருப்பவருக்கு மறுஉத்தரவு அளிக்கும் கர்த்தர் 
சங்கீதம் 38:15 கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்.
சங்கீதம் 5:3 கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்
சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்
மீகா 7:7 தேவனுக்குக் காத்திருப்பேன்; என்னைக் கேட்டருளுவார்.

3. பிரார்த்திருப்பவருக்கு மறுஉத்தரவு அளிக்கும் கர்த்தர் 
யோபு 12:4 என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார் 
சங்கீதம் 143:1 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங் களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின் படியும் உத்தரவு அருளும்
சங்கீதம் 66:19 மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார் 
1சாமுவேல் 1:17,27; 1இராஜாக்கள் 9:3; 2இராஜாக்கள் 20:5; எஸ்றா 8:23

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download