1. தண்ணீரை இரசமாய் மாற்றிய கர்த்தர்
யோவான் 2:1-11 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப் புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிப்பார்த்தபோது, மணவாளனை அழைத்து:
2. தண்ணீரை இரத்தமாய் மாற்றிய கர்த்தர்
யாத்திராகமம் 7:17-25 கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக் காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிபோயிற்று.
யாத்திராகமம் 4:9 நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்று வாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும்
3. தண்ணீரை இனிமையாய் மாற்றிய கர்த்தர்
யாத்திராகமம் 15:23- 25 (22-27) இஸ்ரவேல் மக்கள் மாராவிலே வந்த போது மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அது அவர்களுக்கு குடிக்கக் கூடாதிருந்தது; ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத் தைக் குடிப்போம் என்றார்கள். மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று
4. தண்ணீரை ஆரோக்கியமாய் மாற்றிய கர்த்தர்
2இராஜாக்கள் 2:19-22 அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்த தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலைப்பாழும் இராது என்று கர்த்தர்...
5. தண்ணீரை ஆசீர்வாதமாய் மாற்றிய கர்த்தர்
யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கட வீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்.
யோவான் 4:1-15 நான் (இயேசு) கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிற வனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் யோவான் 7:38; வெளிப் 7:17; வெளிப் 21:6; வெளிப். 22:7
Author: Rev. M. Arul Doss .