1நாளாகமம் 16:25; சங்கீதம் 96:4 கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப் படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. யாத்திராகமம் 18:11; 2நாளாகமம் 2:5; சங்கீதம் 48:1; சங்கீதம் 96:4; சங்கீதம் 135:5; சங்கீதம் 145:3; சங்கீதம் 147:5; எரேமியா 10:6
1. உங்கள் உள்ளே இருப்பவர் பெரியவர்
1யோவான் 4:4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
உபாகமம் 7:21 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.
2. உங்கள் நடுவே இருப்பவர் பெரியவர்
ஏசாயா 12:6 சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார். செப்பனியா 3:17 உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார் அவர் வல்லமையுள்ளவர்
சகரியா 2:5,10 நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன்
3. உங்கள் கூடவே இருப்பவர் பெரியவர்
லூக்கா 1:28,32 கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்... அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்.
மத்தேயு 28:20; ஏசாயா 41:10; அப்போஸ்தலர் 18:10; எரேமியா 1:8,19; எரேமியா 42:11
இதர வசனங்கள்
மத்தேயு 12:6 தேவாலயத்திலும் பெரியவர்
மத்தேயு 12:41 யோனாவிலும் பெரியவர்
மத்தேயு 12:42 சாலொமோனிலும் பெரியவர்
எரேமியா 32:19 யோசனையில் பெரியவர்
1யோவான் 3:20 இருதயத்திலும் பெரியவர்
Author: Rev. M. Arul Doss