போய் சுதந்தரிப்போம்
"இவையெல்லாம் முடிந்த பின்பு, வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப் போய், யூதா பென்யமீன் எங்கும், எப்பிராயீமிலும் மனாசேயிலும் கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப் போட்டார்கள். பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிகளுக்குத் திரும்பினார்கள்.(2 நாளா 31:1)
எசேக்கியா தன்னுடைய 10 அம்சத்திட்டத்தின் முதல் திட்டத்திலிருந்து ஒன்பதாவது திட்டம் வரை திட்டமாய்ச் செய்து முடித்தபின்பு, தேவனுக்காகவும் தேசத்துக்காகவும் அவன் கொண்ட பாரமும் வைராக்கியமும், யூதாவிலும் இஸ்ரவேலிலுமுள்ள ஒவ்வொருவரையும் பற்றிப்பிடித்தது. தேசத்தின் நிர்ப்பாக்கிய நிலையின் யதார்த்தம் ஒவ்வொரு கண்களிலும் பற்றியெரிய, தலைவனின் தரிசனத்தையும் பாரத்தையும் தங்கள் இரத்தநாளங்களில் ஏற்றிக் கொண்டவர்களாய், ஊரெங்கிலும் தெருத்தெருவாய்ச் சென்று சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்துத் தகர்த்துப்போட்டனர் யூதாவும் இஸ்ரவேலும்..
ஒரு தரிசனத்தையோ பாரத்தையோ செயல்பாட்டுக்குக் கொண்டுவர ஜனங்களை ஒருமனப்படுத்துவது தேவகரம் மட்டுமே! குறிப்பிட்ட ஒரு காரியத்துக்காக தேவ ஜனம் ஒருமனப்பட்டு ஏகோபித்து நிற்கும்போது தேவன் அதை அவர்கள் மூலம் வாய்க்கச் செய்யவே செய்கிறார்.
எசேக்கியாவின் பாரமும் தரிசனமும் பூரணமாய் நிறைவேறிமுடியக் கடைசியாகக் கை கொடுத்தவர்கள், அதைச் செய்து நிறைவேற்றிய சாமான்ய ஜனங்களே! அவர்கள் செய்ததெல்லாம் தெருத்தெருவாய், வீதி வீதியாய் ஊர் ஊராய்ச் சென்று விக்கிரகங்களையும் தோப்புகளையும் உடைத்தெறிந்ததே!
இங்கே நம் தேசமெங்கும் விக்கிரகங்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இமயத்தின் முகடுகள் முதல் இந்தியப் பெருங்கடலின் வாசல்வரை தெருத்தெருவாய், வீடுவீடாய் விக்கிரகங்கள். அப்படியெனும்போது இதில் செய்யவேண்டியது என்ன?
ஊர் முழுவதும் நிறைந்திருக்கிறவனிலும் நம்மில் இருக்கிறவர் பெரியவர் அல்லவா? தேசத்தை ஆளுபவர்களையும் அதிகாரத்தில் வீற்றிருக்கிறவர்களைக் காட்டிலும், ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்தும் நம் ராஜாதி ராஜாவானவர் பெரியவரல்லவா? காலாகாலமாய் இந்தத் தேசத்தை இருளிலே வைத்திருப்பவனிலும், "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்று சொல்லி அநாதிகாலமாய் உலகங்களை உண்டாக்கிய உன்னதர் மகா பெரியவர் அல்லவா? வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொண்டவராய், "உன்னை அனுப்புகிறவர் நானல்லவா?" என்று சொல்லித் தமது அதிகாரம் அனைத்தையும் நமக்குத் தந்து நம்மைப் பார்த்து, "நீ தேசத்தில் பாய்ந்து போ, உனக்கு அணையில்லை.." (ஏசா 23:10) என்று சொல்லி அனுப்புகிற நம் தேவன் பெரியவரல்லவா?
எசேக்கியாவின் ஜனம் ஊர் ஊராய்ப் புகுந்து துவம்சம் செய்தது போல, தேவ ஜனம் இப்போது செய்ய வேண்டியது என்ன? இங்கே தான் சபையின் விசுவாசிகள் ஒவ்வொருவரின் செயலாற்றலும் தொடங்குகிறது. தேவன் தந்த விசுவாசத்தோடும் அபிஷேகத்தோடும், வல்லமையோடும் பாரத்தோடும், வைராக்கியத்தோடும் வீதி வீதியாய்ப் படைபடையாய்க் களமிறங்கி அந்தந்தத் தெருவிலும், நால் முக்குச்சந்திகளிலும், ஊரின் பிரதான வீதிகளிலும், விக்கிரகக் கோட்டையான நகரங்களிலும் உட்புகுந்து சகல அந்தகார சேனைகளையும், விதவிதமான அசுத்த ஆவிகளையும் வேதவசனத்தினாலும், இயேசுவின் இரத்தத்தின் வல்லமையினாலும், பரிசுத்தஆவியின் அபிஷேகத்தினாலும் கட்டும்போது அவைகள் கட்டப்பட்டு செயலிழந்துபோவது உறுதி! இதை ஒவ்வொரு கிராமத்திலும், சிற்றூரிலும் நகரங்களிலும், ஊரின் மூலைமுடுக்குகளிலும் செய்தாக வேண்டும். தவிர, அந்தந்த ஊர்களிலும் தெருக்களிலும் உள்ள விசுவாசிகளின் வீடுகளில் கூடுதலும், ஜெபித்தலும் துதித்தலும், அந்தந்தப் பகுதிகளுக்காக ஆவிக்குரிய யுத்தம் செய்து அந்தந்தப் பகுதிகளை கிறிஸ்துவின் ஆளுகைக்குள் கொண்டுவந்து அதை இயேசுவின் இரத்தத்தினாலே முத்திரையிடுவதுமே பத்து அம்சத்திட்டத்தின் க்ளைமாக்ஸ்!
ஏனெனில்..
* 7 பெரிய ஜாதிகளையும் 39 ராஜாக்களையும் ஒவ்வொருவராய்ச் சங்கரித்து வாக்குத்தத்த பூமியை சுதந்தரித்தது இப்படித்தான்!
* எருசலேமின் அலங்கம் 52 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்டதும் இப்படித்தான்!
* எருசலேம் தேவாலயம் இரண்டாம் முறை கட்டப்பட்டதும் இப்படித்தான்!
இந்தப் பத்தாவது அம்சத்தில் தான் சபையின் ஒவ்வொரு விசுவாசியின் பங்கும் இன்றியமையாததாகிறது. விசுவாசிகளுக்கு தரிசனமும் பாரமும் ஊட்டப்பட்டு, அவர்கள் அறைகூவலிட்டு அழைக்கப்பட்டு, அதினாலே ஒருங்கிணைந்து எழுந்து நின்று கட்ட வேண்டியவர்கள் அவர்களல்லவா?
"அந்நாளிலே விக்கிரகங்களின் பேரும் தேசத்தில் இராதபடிக்கு அழிப்பேன். அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை. தரிசனம் சொல்லுகிறவர்களையும் அசுத்த ஆவிகளையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" என்ற வார்த்தையை ஜெப வீரர்கள் தங்கள் இருதயத்திலே முத்திரைவெட்டாய்ப் பதித்துக்கொள்வார்களாக! (சக 13:2)
■ ஆப்கானிஸ்தானின் பாமியான் மலைக்குகைகளிலிருந்த 1300 வருடப் புராதன பிரம்மாண்ட புத்தர் சிலைகளை ஓரிரு நாட்களிலேயே ஏர் ஸ்ட்ரைக் மூலம் தகர்த்தெறிய தறிகெட்ட தாலிபான்களாலேயே கூடுமானால்...
■ இமய மலைச்சாரலின் உருகிய பனியினால் மந்தாகினி ஆற்றில் எழுந்த காட்டாற்று வெள்ளம் ஒன்று 7ம் நூற்றாண்டுப் புராதனப் புண்ணிய ஸ்தலமான கேதார்நாத்தைத் துவம்சம்பண்ணித் துவைத்தெடுத்துத் தரைமட்டமாக்கிப் போடக்கூடுமானால்...
■ சுனாமி ஒன்று வந்து சகலத்தையும் கீழது மேலது ஆக்கிப்போடக்கூடுமானால்...
தேசத்தைத் தத்தளிக்கப்பண்ண கர்த்தரே எழும்பும்போது அவருடைய சத்தம் பூமியை அசையப் பண்ணாதோ ? இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தம் செய்திருக்கிறாரே! (எபி 11:26)
ஆகவே தேவன் தாமே நமது சேனை அதிபனாய் நிற்கும்போது, அவரது சேனையில் போர் வீரராய் நாம் அவரது கட்டளை ஒவ்வொன்றையும் அப்படியே நிறைவேற்றும்போது, தேசமும் தேவனுடையதாகும் அந்த நாள் தூரமல்லவே!
Author : Pr. Romilton