நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இளமையாக இருந்த ஒருவரை நான் அறிவேன், அவருக்கு சைக்கிள் பழுதுபார்க்கும் கடை இருந்தது. மிகவும் பக்தியுள்ள கிறிஸ்தவர், தனது வேலையை அர்ப்பணிப்புடன் செய்யக்கூடிய ஒரு நேர்மையுள்ள நபர். அவரது கடையில், மக்கள் வந்து பெரும்பாலும் தங்கள் சைக்கிளுக்கு பஞ்சர் பார்ப்பதும் அல்லது டயரில் காற்றை சரிசெய்தும் கொண்டிருந்தார்கள், அங்குள்ள சுவரில் வேதாகம வசனங்கள் தொங்க விடப்பட்டிருக்கும். மேலும் ஒரு அலமாரியில், இரண்டு அல்லது மூன்று காணிக்கை பெட்டிகள் இருந்தன. ஒன்று, தனது உள்ளூர் சபையான தென்னிந்திய திருச்சபைக்கானது (CSI) குறிப்பாக லெந்து நாட்களுக்கானது; மற்றவைகள் மிஷனரி அமைப்புகளைச் சார்ந்தது. அவருடன் அமர்ந்து உரையாடுபவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் படியாக சில துண்டுப்பிரதிகளும் தயாராக இருந்தன. மேலும் ஒவ்வொரு மாதமும் வட இந்தியாவில் பணியாற்றும் மிஷனரிகளுக்கு தவறாமல் ‘தபால் அட்டைகள்’ எழுதும் ஒழுக்கமும் அவருக்கு இருந்தது. இந்த ‘தபால்கள்’ வடக்கே பணியாற்றும் மிஷனரிகளுக்கு பாலைவனத்தில் சோலைகளைப் போன்றவை, அவர்களுக்கு அரிதாகவே கடிதங்கள் அல்லது அஞ்சல்கள் கிடைக்கும். (நாங்கள் ஹரியானாவில் பணியாற்றியபோது அப்படிப்பட்ட பயனாளிகளில் நாங்களும் ஒருவராக இருந்தோம்) எப்போதெல்லாம் ஒரு ‘போதகர்’ தனிப்பட்ட முறையில் அவரது கடைக்குச் சென்றாலும் அவர் அப்போதகரிடம் கட்டணம் வசூலிக்க மாட்டார், அதற்கு பதிலாக எப்போதும் ஒரு சிறிய காணிக்கை கொடுப்பார்.
கொடுப்பதில் கற்பது
கொடுப்பது என்பது இயல்பாக வருவதில்லை. இது மக்களின் நடைமுறை வழக்கமல்ல , வேதாகம ஒழுங்காக மாறி, ஆசீர்வாதங்களை அனுபவித்து, ராஜ்யத்தின் பார்வையில் பார்க்கும் வரை இது மக்கள் இயக்கமாக மாறாது. இதற்கான நனறிக்கடனை பிஷப் வி.எஸ். அசரியா என்பவரையேச் சாரும் எப்படியெனில் சமையல் செய்யும்போது ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து வைக்கவும், குடும்பத்திற்காக சமைக்கும்போதெல்லாம் தனித்தனியாக சேமிக்கவும் பெண்களை அணிதிரட்டினார். சேகரிக்கப்பட்ட இந்த அரிசி காணிக்கையாக தேவாலயத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பஞ்சத்தை அனுபவித்தவர்கள், ஒரு கைப்பிடி அரிசியின் மதிப்பை அறிந்தவர்கள், உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் கொடுத்தார்கள். காய்கறிகள், முட்டை, கோழிக்குஞ்சுகள் மற்றும் பணம் என
கொடுப்பதற்கான அடிப்படை அன்று தொடங்கப்பட்டதே.
கொடுத்தல் என்பது வீட்டில் தொடங்குகிறது
நான் என் வீட்டில் வளர்ந்தபோது, போதகர்கள், சுவிசேஷகர்கள் மற்றும் வாலிபம் கிறிஸ்துவுக்கே, நண்பர்கள் மிஷனரி குழு போன்ற மிஷனரி இயக்கங்களும் பிற கிறிஸ்தவ ஊழியக்காரர்களும் எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய காணிக்கை வழங்கப்பட்டது. எங்கள் உணவு நேரத்தில் அவர்கள் வர நேர்ந்தால், அவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. சில நேரங்களில், அதன் காரணமாக நாங்கள் பசியுடன் இருந்திருக்கிறோம். நூற்றுக்கணக்கான எனது நண்பர்கள் இதேபோன்ற அனுபவங்களை தங்கள் வீடுகளில் பகிர்ந்து கொள்வார்கள்.
கொடுக்கும் கலாச்சாரம்
நான் இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். சில வீடுகளில், அங்கு அவர்கள் ‘தேவ ஊழியரின்’ கால்களைக் கழுவும் சடங்கைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் எந்த காணிக்கையையும் கொடுக்க மாட்டார்கள். ஒரு சிலர் நல்ல உணவைக் கொடுப்பார்கள், நாம் ‘தேவ ஊழியருக்கு' உணவளித்தால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்’ ’எனினும், அவர்கள் எந்தப் காணிக்கையையும் கொடுக்க மாட்டார்கள். கொடுக்கும் கலாச்சாரம் என்பது நமது தமிழ்நாட்டின் விசுவாசிகளின் இதயங்களிலும் மனதிலும் பதிந்துள்ளது.
தியாகத்துடன் கொடுப்பது
தமிழ்நாட்டில் தேவாலய வளர்ச்சிக்கு ஒரு காரணம் மக்கள் தியாகத்தோடு காணிக்கை அளித்ததே. அது நிச்சயமாக அந்த காலங்களில் மிஷனரி பயணங்களாக இயக்கப்பட்டது. எனவே, இந்த உள்நாட்டு ஆதரவுடன் வட இந்தியாவில் பணியாற்றிய மற்றும் சேவை செய்த ஆயிரக்கணக்கான மிஷனரிகள் இருந்தனர். தமிழ்நாட்டின் தேவாலயங்கள் மிஷனரி பணிகளில் ஈடுபட்டுள்ளதால் தேவன் தமிழ்நாட்டின் பல்வேறு தேவாலயங்கள் மற்றும் ஊழியங்களுக்கு மகத்தான வளர்ச்சியைக் கொடுத்தார்.
மறக்கக்கூடிய ஆதரவாளர்கள்
புதிதாக ஆட்சிக்கு வந்த ராஜா யோசேப்பை அறியாதது போல, தமிழ்நாட்டிலும் சில தலைவர்கள் தோன்றினர். (யாத்திராகமம் 1: 8) முதலில், அவர்களுக்கு வேதம் தெரியாது. இரண்டாவதாக, அவர்களுக்கு தமிழகத்தின் வரலாறு தெரியாது. மூன்றாவதாக, தமிழ் கிறிஸ்தவர்களின் துணை கலாச்சாரம் அவர்களுக்குத் தெரியாது. நான்கு, தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. எல்லா பகுதிகளிலும் தமிழகத்தில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு கிறிஸ்துவ முதலீடு தான் காரணம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ் கிறிஸ்தவர்களின் காணிக்கை கொடுப்பதிலுள்ள தியாகம் மூலம் விதைக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, விசித்திரமாகவும், நுட்பமாகவும், தேவ மக்களுக்கு ‘கொடுப்பதை’ தடை செய்வதன் மூலம் ‘கொடுக்கும் கிருபையை’ அழிக்க அவர்கள் விரும்புகிறார்கள், இதனால் சாத்தானின் கைகளில் கருவிகளாக மாறுகிறார்கள்.
கொடுப்பதில் உள்ள சீஷத்துவம்
நிச்சயமாக, ‘நேர்மையாகவும்’ அல்லது ‘வெளிப்படையாகவும்’ இல்லாதவர்கள் குறைவு. ஆமாம், கொடுப்பவருக்கு குறிப்பிட்ட பொறுப்பு உள்ளது, யாருக்கு கொடுக்க வேண்டும். தேவன் நம்மை வழிநடத்துவதால் நாம் ஊழியங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சீஷஷத்ததுவம் கூறுகிறது. ஒரு சிலர், தங்கள் தனிப்பட்ட அல்லது ஊழிய பயன்பாட்டிற்காக நிதி திரட்ட ‘ஆவிக்குரிய மிரட்டல்’ மற்றும் ‘உணர்ச்சியின் தந்திரங்களை’ பயன்படுத்துகிறார்கள். அதை நாம் ஊக்குவிக்கக்கூடாது.
ஆபத்தான யோசனை
இருப்பினும், ‘கொடுப்பது’ மீதான ‘மொத்த தடை’ என்பது தேவனின் ஆசீர்வாதங்களைக் கொள்ளையடிப்பதன் மூலம் கிறிஸ்தவ சமூகத்தின் மீது ‘பொருளாதார பேரழிவை’ உருவாக்குவதற்கான ஆபத்தான யோசனையாகும்.
பாக்கியவான்கள்
வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், அவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையைத் தழுவி, 'கொடுக்கும் கிருபையை' கற்றுக் கொண்டபோது, அவர்கள் வறுமையிலிருந்து 'நடுத்தர வர்க்கமாக' மாறினர், தாராளமாகக் கொடுத்த பல 'நடுத்தர வர்க்க' கிறிஸ்தவர்கள் இன்று 'பணக்காரர்களாகவும் வளமானவர்களாகவும்' மாறிவிட்டனர்.
தேவனின் வாக்குறுதிகள்
தேவனின் வாக்குறுதிகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், தேவபிள்ளைகளை தவறாக வழிநடத்தும் ‘மனித குரல்களை’ மறந்து விடுங்கள். விஷயம் இதுதான்: எவர் குறைவாக விதைக்கிறாரோ அவர் மிகக்குறைவாக அறுவடை செய்வார், மேலும் யார் அதிக அளவில் விதைக்கிறாரோ அவர் அந்தளவில் அறுவடை செய்வார். ஒவ்வொருவரும் தன் இருதயத்தில் தீர்மானித்தபடி கொடுக்க வேண்டும், தயக்கத்தோடோ அல்லது நிர்ப்பந்தத்தோடோ அல்ல, ஏனென்றால் தேவன் மகிழ்ச்சியாக கொடுப்பவரை நேசிக்கிறார்" (1 கொரிந்தியர் 9: 6-7).
சவால்
தாராளமாக இருப்பது மற்றும் கொடுப்பது என்பது பல பரிமாண ஆசீர்வாதங்களை உருவாக்கும் கிறிஸ்தவ விசுவாசத்தை நிரூபிப்பதாகும்.
நான் மகிழ்ச்சியுடன் கொடுப்பவரா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J.N. Manokaran