கன்னியின் பாலகனா?
ரமேஷும் உமேஷும் வகுப்புத் தோழர்கள். அவர்கள் ஒரே தேவாலயத்திற்குச் செல்வதால் அவர்கள் நெருங்கிய நண்பர்களானார்கள். அவர்கள் ஒன்றாக நிறைய விஷயங்களைச் செய்கிறார்கள். அது கிறிஸ்துமஸ் காலம். எனவே அவர்கள் தேவாலயத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள். ரமேஷ் ஒரு ஏணியின் மேல் இருந்த பிரகாசமான சிவப்பு நட்சத்திரத்தை சரிசெய்ய முயன்றான்.. உமேஷ் ஏணியைப் பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவிக் கொண்டிருந்தான்.
ரமேஷ் கூறுகையில், “இந்த கிறிஸ்துமஸ் காலம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் மகிழ்ச்சியாகவும் சமாதானமாகவும் உணர்கிறேன் என்றான். சிறிது நேரம் கழித்துஇ அவன் கூறினான், “ஆனால், இயேசு கன்னியிடம் பிறந்தார் என்பதை நம்புவதில் எனக்கு சிக்கல் உள்ளது என்பது உனக்குத் தெரியுமல்லவா. உனக்கு எப்படி?" என்றான். "உஷ்ஷ்….யாராவது கேட்டுருவாங்க...மெதுவா பேசு" என்ற உமேஷ். "ஆம், எனக்கும் அது சிக்கலாகத்தான் இருக்கிறது", என்றான். ராஜீவ் இந்தக் கேள்விகளை எல்லாம் பள்ளிக்கூடத்தில் கேட்டபோது கன்னிப் பிறப்பு போன்ற ஒன்றை நம்பினதற்காக நான் ஒரு முட்டாள் போல் உணர்ந்தேன். சிறிது நேரம் இருவருமே அமைதியாக இருந்தார்கள். ஆனால் இந்த கேள்வியுடன் ஒவ்வொருவரும் போராடினார்கள். அப்போது உமேஷ், “நாம் யாரிடமாவது கேட்க வேண்டும்” என்றான். "சரி, நம்முடைய சந்தேகங்களை ராஜு சகோதரனிடம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். வாலிபர் ஐக்கியத்தில் அவர் எவ்வளவு புரிதலுடன் இருக்கிறார் என்பது தெரியுமல்லவா! எனவே இந்தப் பிரச்சனைக்கான பதில் அவருக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன். "ஆம், அவரிடம் செல்வோம்." என முடிவு எடுத்தவர்கள் அமைதியாகத் தங்கள் வேலையைச் செய்தனர். அப்போது உமேஷ், “எப்போது?” என்றான். "நாம் எப்போது சகோதரன் ராஜுவிடம் செல்வோம்?" என்று பேசிக் கொண்டவர்கள்; “அலங்கரித்து முடித்தவுடன் போகலாம்” என்றனர். எனவே, அவர்கள் தேவாலயம் மற்றும் ஞாயிறு பள்ளி கூடத்தை அலங்கரித்து முடித்துவிட்டு சகோதரன் ராஜுவின் வீட்டிற்கு சைக்கிளில் சென்றனர்.
ராஜு ஒரு பள்ளி ஆசிரியர். அவர் பொதுவாகவே இளைஞர்களுடன் இருப்பதை விரும்புகிறவர். அவர் ஒரு அனாதை இல்லத்தில் கூடைப்பந்து பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார். சிறுவர்கள் கதவைத் தட்டியபோது அவர் அப்போது தான் வேலைகளை முடித்து விட்டு திரும்பி வந்திருந்தார். அவர் சோர்வாக இருந்தாலும், அவர் தனது தனது வீட்டிற்குள் உற்சாகமாக சிறுவர்களை வரவேற்றார். "சரி, இப்படி இரவு நேரத்தில் அவசரமாக வந்ததின் காரணம் என்ன? அப்படி என்ன பிரச்சனை?" என்றார் ராஜூ.
"நாங்கள் இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்," என்று ரமேஷ் கூறினான். “ராஜு அண்ணா, இன்றைக்கு எப்படி இப்படியெல்லாம் நம்புவது? இது அறிவியல் பூர்வமானது அல்ல!” என்றான் உமேஷ். “அப்படியா? செயற்கை கருத்தரித்தல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?". "இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை” என்று உமேஷ் பதிலளித்தார். "அது என்ன?" "இது சோதனைக் குழாய் குழந்தைகளைப் பெறும் செயல்முறைக்கான அறிவியல் சொல்." "இதோடு தொடர்பு என்ன?” என்று உமேஷ் கேட்டான்.
“உமேஷ் உனக்கு தெரியாதா?” என்றான் ரமேஷ், "அந்த முழு செயல்முறையும் கன்னியாக இருப்பவர் குழந்தைகளைப் பெற முடியும் என்பதாகும்." அதற்கு உமேஷ், “கண்டிப்பாக. ஆனால் இது ஒரு அறிவியல் சாதனை. அப்போது அவர்களுக்கு அந்த அளவு அறிவு இல்லையே" என்றான். "அது உண்மைதான்," என்றார் ராஜு, "ஆனால், மனிதனால் கன்னியிடம் குழந்தைகளை உருவாக்க முடியும் என்றால், தேவன் தனது வல்லமையினால் அதைச் செய்ய முடியாது என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக, அறிவியல் என்பது அவர் உருவாக்கியதைக் கண்டுபிடிப்பது மட்டுமே. “நான் ஏன் அதை நினைக்கவில்லை? இது மிகவும் எளிமையானது, இங்கே நான் தேவனின் வல்லமையை சந்தேகித்தேனே” என்று உமேஷ் கூறினான். “ஐயோ! நானும், சந்தேகித்தேனே” என்றான் ரமேஷ்.
"இப்போது அதை எண்ணிக் கவலைப்பட வேண்டாம் மரியாளும் யோசேப்பும் கூட கன்னிப் பிறப்பை நம்புவதில் சிரமப்பட்டனர்", என்றார் ராஜூ. “அப்படியா?” என்று ஆசசரியப்பட்டனர் சிறுவர்கள். “ஆம்,” என ராஜு கூறினார், “நற்செய்தி நூல்களில் உள்ள கிறிஸ்து பிறப்புக் கதைகளில் நீங்கள் அதைக் காணலாம். மரியாள் தேவதூதரிடம், 'நான் கன்னியாக இருப்பதால் இது எப்படி நடக்கும்?" என்று கேட்டாள். மரியாள் சொன்னதை யோசேப்பு நம்பவில்லை. ஒரு சொப்பனத்தின் மூலமே சமாதானப்படுத்தப்பட வேண்டியிருந்தது. "அப்படியானால், நாம் தேவன் மீது சந்தேகம் கொண்டதற்க்காக அவர் கோபப்படவில்லை என்று நினைக்கிறீர்களா?" ரமேஷ் கேட்டான். "நிச்சயமாக இல்லை. முக்கிய விஷயம் என்னவென்றால், சகோதரர்களே உங்களுக்கு நேர்மையான சந்தேகம் இருந்தது. நீங்கள் சாக்குப் போக்கு சொல்லி தவறு செய்வதற்கு ஏதுவாக எதையாவது சந்தேகிப்பது போல் நடிக்கவில்லை, நீங்கள் பதில்களைத் தேடினீர்கள். உங்கள் சந்தேகங்கள் தீர்த்துவிட்டன.” "இன்னும் ஒரு கேள்வி என்னிடம் உள்ளது," என்றான் ரமேஷ். இயேசு ஏன் கன்னிப் பெண்ணிடம் பிறக்க வேண்டும்? இது ஒரு சாதாரண பிறப்பாக இருந்திருக்கலாமே? “சரி, வேதாகமம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்” என்றார் ராஜு. அவர் தனது வேதாகமத்தை எடுத்துக் கொண்டு வந்து லூக்கா அதிகாரம் ஒன்றிற்குத் திரும்பினார். "ரமேஷ், நீ வசனம் 35-ஐப் படி"என்று ராஜூ சொல்ல, ரமேஷ் படித்தான், “தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்". “நீங்கள் பார்க்கிறீர்கள், இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம் பிறக்க வேண்டும், அதனால் அவர் தேவகுமாரன் அழைக்கப்படுவார். அவரது தந்தை கடவுள், ஒரு மனிதன் அல்ல. நாம் அனைவரும் பூமிக்குரிய தந்தையின் குழந்தைகள். இயேசு தேவனின் பரிசுத்த குமாரன். அவர் கன்னியிடம் பிறக்க வேண்டும்”. ரமேஷ் மற்றும் உமேஷ் இருவரும் ராஜுவுக்கு நன்றி கூறிவிட்டு தங்கள் சந்தேகம் தீர்ந்த மகிழ்ச்சியில் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதால், அவர்களுக்கு வேறு சந்தேகங்கள் இருக்கும். ஆனால் அவர்கள் அவற்றைப் பற்றியோ அல்லது பதில்களைக் கேட்கவோ பயப்படமாட்டார்கள். ஆம், அவர்களின் விசுவாசம் வலுப்பெற்றது.
Author : Rev. Dr. J. N. Manokaran