கிறிஸ்துவின் சிந்தை
கிறிஸ்துமஸைப் புரிந்துகொள்ள உதவும் கிறிஸ்துவின் சிந்தையின் மூன்று அம்சங்களை மட்டுமே பவுல் விவரிக்கிறார் (பிலிப்பியர் 2:6-8).
1) தேவனின் ரூபம்:
அவர் தேவன் ஆனால் திரித்துவத்தின் இரண்டாவது நபராக தான் தேவனுக்கு நிகர் என்ற நிலையில் இருப்பதைப் பற்றிக்கொள்ளவோ, அல்லது அதைப் பிடித்து தொங்கவோ விரும்பவில்லை. கர்த்தராகிய இயேசு இருக்கிறவராகவே இருக்கிறவர், கடவுள் அவதாரமாக மாறிய பரிணாம வளர்ச்சியல்ல. அவர் தனது மீட்புப் பணியை முடிக்க வல்லமை, அதிகாரம், மகிமை மற்றும் சிங்காசனம் என அனைத்தையும் சிறிது காலத்திற்கு துறக்கவும் தயாராக இருந்தார்.
2) வெறுமை:
கர்த்தராகிய இயேசு ஏசாயாவால் விவரிக்கப்பட்ட ஒரு ஊழியக்காரனாக, துன்பப்படும் வேலைக்காரனின் வேலைக்காரனாக ஆக தம்மையே வெறுமையாக்கினார் (ஏசாயா 53). தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் மற்றும் அரசர்கள் அனைவரும் தேவனின் ஊழியர்களே. இந்த பதவிகள் அல்லது அலுவலகங்களுக்கு சமூகத்தில் சில அந்தஸ்து உண்டு. ஆம், தேவ ஊழியர்கள் பல சமயங்களில் அவர்களும் தெய்வங்கள் என்பது போல நடத்தப்படுகிறார்கள்.கர்த்தராகிய இயேசு மேலும் வெறுமையாக்கப்பட்டு மனிதனாக இருந்தார், அதாவது, அவர் ஒரு சாதாரண மனிதனைப் போன்று அதாவது எந்த ஒளியும் மகிமையும் அல்லது அசாதாரண சக்தியும் இல்லாமல் மாம்சமாக மாறினார். பண்டைய மன்னர்கள் விவசாயிகளாக மாறுவேடமிட்டு, சாதாரண குடிமக்களுடன் இருக்க முயற்சி செய்யலாம். ஆனால் ராஜாவாக இருப்பதை விடுவதில்லை; கர்த்தராகிய இயேசு அப்படியல்ல. பெத்லகேமில், அவர் ஒரு குழந்தை, பாதிக்கப்படக்கூடியவர் மற்றும் ஏரோதுவால் கொல்லப்பட்டிருக்கலாம். அடிப்பதிலும், துப்பியதிலும், தாடியைப் பறிப்பதிலும் வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மூன்றாவதாக, வரம்புகள், அபூரண சூழல், சோதனைகள், ஓய்வு, தூக்கம் மற்றும் உணவு தேவைப்படுவதால்இ தான் மனிதர்களைப் போலவே அல்லது ஒத்ததாக இருந்ததாக பவுல் எழுதுகிறார்.
3) தாழ்மையானவர்:
வெறுமையாக்குவது போதாது என்பது போல், கீழ்ப்படிதலுக்காக ஆண்டவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டார் என்று பவுல் மேலும் கூறுகிறார். ஈசாக்கு தன் தந்தை ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிந்தது போல் ஆண்டவர் தன் பிதாவிற்கு கீழ்ப்படிந்தார். கீழ்ப்படிதலுக்கான விலைக்கிரயம் மிக அதிகமாக இருந்தது. கர்த்தராகிய இயேசு தன்னுடைய ஜீவனை செலுத்தி, மனிதர்களின் வீழ்ச்சியின் காரணமாக விதிக்கப்பட்ட மரணத்தின் வழியாக செல்ல வேண்டியிருந்தது. உண்மையில், இது ஒரு சாதாரண மரணம் அல்ல, ஆனால் மனிதகுல வரலாற்றில் ஒரு கொடுமையான மரணம். இது கல்வாரி சிலுவையில் ஒரு கொடூரமான, அவமானகரமான மற்றும் பரிதாபகரமான மரணம். அவரது கீழ்ப்படிதல் தன்னார்வமாகவும், விருப்பமாகவும், மகிழ்ச்சியாகவும், நோக்கமாகவும் இருந்தது.
எனக்கு கிறிஸ்துவின் சிந்தை இருக்கிறதா?
Author : Rev. Dr. J. N. Manokaran