கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு உயிரில்லையே..
போதகர் ஒருவருக்கு அவரது சபையில் உள்ள குழந்தைகள் பற்றி கவலை இருந்தது. அதாவது கிறிஸ்துமஸ் தாத்தா (ளுயவெய ஊடயரள) ரகசியமாக வந்து பரிசுகள் அளிப்பார் என்பதில் அவர்கள் ஆர்வம் காட்டினர். பெரும்பாலான குழந்தைகளுக்கு, கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் பரிசுகளைப் பெறுவது தான் என்பதாக இருந்தது. ஆம், ஒரு நோக்கமுள்ள பாரம்பரியம் அர்த்தமற்ற மூடநம்பிக்கையாகிவிட்டது.
பாரம்பரியத்தின் தோற்றம்
நிக்கோலஸ் லிசியாவில் உள்ள மைராவின் (இப்போது டெம்ரே) பிரபலமான பிஷப் ஆவார். ஏழைகளுக்குக் கொடுப்பதில் தாராளமானவராக இருந்தார். ஒரு ஏழை கிறிஸ்தவனின் மூன்று மகள்களை விபச்சாரத்தில் தள்ளாதபடி அவர்களுக்கு அவர் தாராளமாக பரிசளித்தார் என்பது பிரபலமான கதைகள் ஒன்று. அவர் கிரீஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா,ஜெர்மனி மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் தாடி வைத்த பிஷப்பாக நன்கு அறியப்பட்டவர். பானை வயிறு, சிவப்பு ஆடை, பனி போலான வெள்ளை தாடியுடன் கலைமான் பனியில் சறுக்கி ஓடும் சவாரி மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகளை கொண்டு வரும் கிறிஸ்துமஸ் தாத்தா என மேற்கில் பாரம்பரியம் ஒரு அடையாளத்துவம் பெற்றது.
வணிக நலன்கள்
வணிக நலன்களுடன், சந்தை சக்திகள் பல தயாரிப்புகளை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த யோசனையை ஊக்குவித்தன. இன்றும் கிறிஸ்துமஸ் அட்டைகள், நட்சத்திரங்கள், மரங்கள், அந்தந்த இடத்திற்கு தக்கதான காட்சி பொம்மைகள், கிறிஸ்துமஸ் படங்கள் போன்றவை கிறிஸ்துமஸ் காலங்களில் பெரும் வருவாயை ஈட்டுகிறது.
குழந்தைகளை தவறாக வழிநடத்துகிறது
குழந்தைகள் இந்த கருத்தை நம்பினர் மற்றும் அவர்கள் விரும்பும் பரிசுகளுக்காக ஜெபம் செய்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து பொம்மைகள் அல்லது உடை போன்ற பரிசுகள் கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருந்து வந்ததாகக் கூறி வழங்குவார்கள். குழந்தைகள் பார்க்கும் போது பெற்றோர்கள் பரிசுகள் போடும் காலுறைகளை தங்கள் வீட்டு வாசலில் தொங்கவிடுவார்கள். குழந்தைகள் தூங்கச் சென்ற பிறகு, அவர்கள் அதை பரிசுகளால் நிரப்புகிறார்கள். இது தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு நீடித்தது மற்றும் இப்படியாக கிறிஸ்துமஸ் தாத்தா ஒரு வழிபாட்டு நிலையை அடைந்தார்.
கலாச்சாரம்
விரைவில் அது மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியது. அரசாங்கங்கள், சமூக அமைப்புகள், சந்தை வளாகங்கள் என கிறிஸ்துமஸ் காலக்கட்டத்தில் பலூன்கள், மணிகள், நட்சத்திரங்கள், ஊரைப் பறைசாற்றும் படங்களுடன், கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவப்படம் அல்லது பொம்மை ஆகியவற்றை நிறுவினர். இப்படி கிறிஸ்துமஸ் ஒரு கலாச்சார வெளிப்பாடாக மாறியது.
புதுமையான போதகர்:
பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சந்தை சக்திகளால் சபை மூழ்கியுள்ளது. இதில் வருத்தம் என்னவெனில், கிறிஸ்துமஸிற்கான காரணம், பெத்லகேமில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அதுவே மறைக்கப்பட்டது. பின்னர் அப்போதகர் சிந்தித்து கிறிஸ்துமஸ் கால நாடகம் ஒன்றை இயக்கினார். அதில் கிறிஸ்துமஸ் தாத்தா இறந்து புதைக்கப்பட்டதாகவும், அவர் இனி வரமாட்டார் என்றும் குழந்தைகளுக்கு நாடகம் மூலம் அறிவித்தார். பின்னர் முழு சபையும் கொண்டாட்டத்தின் புற அம்சங்களுக்குப் பதிலாக மாம்சமாகுதல் என்ற பெரிய சத்தியத்தின் மீது கவனம் செலுத்த முடிவு செய்தது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நான் கவனச்சிதறல் இல்லாமல் கொண்டாடுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran