அன்பில்லா வாழ்வு அர்த்தமில்லா வாழ்வு. அர்த்தமில்லா வாழ்வு அவசியமில்லா வாழ்வு. அன்பை விரும்பாதவர் எவரும் இல்லை. அன்பே கடவுள். அன்பை காணாமல் யாரும் நம்பமுடியாது. செயலில் வெளிப்படாத அன்பை யாரும் பார்க்க முடியாது. இவ்வுலக அழகு அந்தஸ்து ஆஸ்தி ஆரோக்கியம் அனைத்தும் அன்புக்கு ஈடாகாது!
அன்பை விரும்பாதவர் எவரும் இல்லை. அன்பே கடவுள். கடவுள் தான் எல்லாவற்றிற்கும் மூல ஆதாரம். அவரிலிருந்து இவ்வுலகம் உருவானது. கடவுளுக்கே உரித்தான பெருமையை (ஆணவத்தை) துஷ்ட தேவர்கள் உரிமைக்கொண்டாடினர். அவ்வுரிமையை அடைய மனிதர்களையும் சேர்த்துக் கொண்டனர். இதனால் கடவுளின் அன்பு துஷ்ட தேவர்களிடமிருந்தும் துஷ்ட மனிதர்களிடமிருந்தும் விலக நேரிட்டது. அதனால் மனிதன் வாழும் இப்பூமியில் அன்புக்கு பஞ்சமானது. பிரிவினைகள் பேதங்கள் கொலை கொள்ளை பெருகினது.
அன்பை காணாமல் யாரும் நம்பமுடியாது. செயலில் வெளிப்படாத அன்பை யாரும் காண முடியாது. அன்பின் உருவாக கடவுள் தனது குமாரனை இப்பூமிக்கு தாரை வார்த்தார். வரலாற்றில் இந்நாள் கிறிஸ்துமஸ் நாளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. திருக்குமாரனின் அவதாரம் ஒரு குறிப்பிட்ட இனம் நிறம் மொழி மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் உயிர்களுக்கும் பொதுவானது.
கடவுளை யாரும் கண்டதில்லை. அன்பின் உருவான கடவுளே இப்ப10மியில் இயேசுவாக பிறந்தார். வரலாற்றில் இந்நாள் கிறிஸ்துமஸ் நாளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடவுள் மனிதனாக பிறந்ததால் உலக சமயங்களில் இறை அவதாரக் கொள்கை உருவானது. மனிதர்களின் இல்லாமை, இயலாமை மற்றும் இம்சைகள் இல்லாமல் ஆக்கிடவே இறைவன் திருமகனாக பிறந்தார்.
மனிதனாகப் பிறந்த இயேசு இனம் நிறம் மொழி தொழில் என்ற பேதம் பார்க்காமல் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் உயிர்களுக்கும் கடவுளாயிருக்கிறார். கடவுள் இப்பூமியில் குழந்தையாய் பிறந்தபோது ப10மிக்கு அமைதி, மகிழ்ச்சி, அன்பு, சத்தியம், கடவுளின் பிரியம், தர்மம், தூய்மை, சமத்துவம், மற்றும் இறை ஞானத்தையும் நமக்கு வரமளித்தார்.
கடவுள் இப்ப10மியில் குழந்தையாய் பிறந்தபோது பூமிக்கு கடவுளின் அமைதியையும் மகிழ்ச்சியையும் அன்பையும் சத்தியத்தையும் வாக்கு கொடுத்தார். இவ்வாக்கு இறைமகன் நம் வாழ்வில் நாயகனாக பிறக்கும் போது பலிக்கும். உலக வரலாற்றில் பிறந்த திருக்குமரன் நம் அனைவரின் வாழ்விலும் இன்று பிறக்கட்டும். அவரின் அருளாசியுடன் பேர் வாழ்வு பெற்று பெரு வாழ்வு வாழ்வோம். அன்பு மகிழ்ச்சி அமைதி சத்தியத்தின் உருவங்களாக இவ்வுலகில் வளம் வர இறையாசியும் இறையருளும் நம்முடனும் நம் குடும்பத்துடனும் உறவினர்கள் நன்பர்கள் அனைவரோடும் இருப்பதாக.
இயேசு நம் வாழ்வில் பிறக்கும் போது நாம் கடவுளின் பிரஜ்ஜைகளாகவும் பிள்ளைகளாகவும் மாறுகிறோம். உலக வரலாற்றில் பிறந்த திருக்குமரன் நம் அனைவரின் வாழ்விலும் பிறக்கட்டும். அவரின் அருளாசியுடன் பேர் வாழ்வு பெற்று பெரு வாழ்வு வாழ்வோம். அன்பு மகிழ்ச்சி அமைதி மற்றும் சத்தியத்தின் உருவங்களாக இவ்வுலகில் நாம் வாழ்ந்து பிறரை வாழவைக்க இறையாசியும் இறையருளும் நம்முடனும் நம் குடும்பத்துடனும் உறவினர்கள் நன்பர்கள் அனைவரோடும் இப்புதிய ஆண்டில் இருப்பதாக!
Author. Rev. Dr. C. Rajasekaran