‘நான் தூயராய் இருப்பது போல நீங்களும் தூயராய் இருங்கள்’ என்பது ஆண்டவன் கட்டளை. இவ்வுலகம் அதன் வாய்மையை இழந்ததால் அதன் தூய்மையையும் வலிமையையும் இழந்து வாடுகிறது. தூய்மை மற்றும் வாய்மை இழந்த மனிதர்கள் அசுத்தம் செய்கிறவர்களை உயர் சாதியினர் என்றும், சுத்தம் செய்கிறவர்களை கீழ் சாதியினர் என்றும் இகழ்கிறார்கள். சுத்தம் செய்கிறவர்களை உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை இயேசு போதிக்கிறார். அது மட்டுமல்ல இப்படிப்பட்ட சமுதாயத்தில்தான் கடவுள் மனிதர்களின் அகத்தூய்மையையும், புறத்தூய்மையையும் கொடுக்க தானே அசுத்தம் நிறைந்த உலகிற்கு இயேசு என்னும் மனிதனாகப் பிறந்தார். இயேசு தூய்மையின் உருவம்!
தூய்மையே வலிமை, தூய்மையே வாய்மை, தூய்மையே மேன்மை! தூய்மை செய்கிறவர்கள் கடவுளுக்கு சமம். ஒரு தாய் தன் பிள்ளை மலம் மற்றும் ஜலம் கழிக்கும் போது அதனை எப்படி அருவருப்பு கொள்ளாமல் பாசத்துடன் தன் சொந்த கைகளையே பயன்படுத்தி தூய்மைப்படுத்தி தாயின் அன்பையும், பொறுப்பையும் வெளிப்படுத்துகிறாளோ அந்தபடியே துப்புறவு செய்யும் உங்களை ஒரு தாய்க்கு ஒப்பிடப்படுகிறீர்கள். இப்பணியை செய்யவே கடவுள் மனிதராகப் பிறந்தார். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் உள்ள அசுத்தத்தையும் அதனால் அம்மனிதன் வெளிபடுத்தும் அசுத்த செயல்களையும் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்படும்படியாகவும் ஒவ்வொருவரும் தூய்மையான வாழ்வு வாழவேண்டும் என்றும் இரத்தபலியாக கடவுளே இயேசு என்னும் மனிதனாகப் பிறந்தார்.
இபபடிப்பட்ட இயேசுவின் பணிக்கு ஒப்பாக மனிதர்களின் கழிவுகளை நீக்கி, அதனால் அவர்களுக்கு ஏற்படும் துர்நாற்றம் மற்றும் கொடிய வியாதிகள் வருவதை முன்னரே காக்கும் தூய பணியை செய்யும் உங்கள் பணி என்றும் கௌவரத்துடனும், தூய்மையுடனும், கடமை உணர்வுடன் தொடர எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். இயேசுவின் பிறந்தநாள் தூய்மையின் திருநாள், வாய்மையின் நன்நாள், வலிமையின் பொண்னாள். மனிதனின் உள்ளத்தையும், இல்லத்தையும், நாட்டையும், வீட்டையும் சுத்தம் செய்யும் இயேசு உங்கள் வாழ்வையும் சுத்தம் செய்து நம் தெருக்களின் அசுத்தத்தைப் போக்கி துப்புறவு செய்யும் தெய்வப்பணி மற்றும் தாயாரின் பணியை செய்து நற்பணியாற்றும் அருளையும், ஆசியையும் வரும் புத்தாண்டில் மட்டுமல்ல எப்போதும் உங்களுக்குத் தருவார் என்று நாங்கள் வாழ்த்துகிறோம்.
Author. Rev. Dr. C. Rajasekaran