சிரேனே ஊரானாகிய சீமோன்: சிலுவையை தாங்குதல்

ஆசாரியர்கள், பரிசேயர்கள், வேதபாரகர்கள் மற்றும் யூத கும்பலின் கூக்குரலான கோரிக்கைக்கு பணிந்து, பிலாத்து மரண தண்டனைக்கு உத்தரவிட்டபோது, ​​​​கர்த்தராகிய இயேசு அதை நிறைவேற்ற கொல்கொதா நோக்கி செல்ல ஆரம்பித்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளி தனக்கான மரச் சிலுவையை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் சொந்த சிலுவையை அவர்களே எடுத்துக்கொள்ள வேண்டும், மரணதண்டனைக்கான உபகரணங்கள் இனிமையானது அல்ல, மேலும் மரண தண்டனை பெற்ற நபரின் ஆவியை உடைக்க அது நடத்தப்பட்டது.  கொடூரமான ஊர்வலம் மனிதக் கொடுமையை வெளிப்படுத்துகிறது, அதே போல் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு எச்சரிப்பதோடு, கருத்து வேறுபாடு அல்லது கலகம் அல்லது சட்டத்தை மீறுபவர்களுக்கும் இதேபோன்ற விதி காத்திருக்கிறது.

பிலாத்துவின் வீரர்கள் மற்றும் ஏரோதின் வீரர்களின் கடுமையான அடிகளால் ஆண்டவர் இயேசு சோர்ந்து போயிருந்ததால் அன்றைய ஊர்வலம் மிகவும் இதயத்தை பிளந்தது.  மேலும் அவர் உணர்வுபூர்வமாகவும் உடைந்துதான் போயிருப்பார்; ஆம், ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்டார், மற்றொருவரால் மறுதலிக்கப்பட்டார், யோவானைத் தவிர மற்ற சீஷர்களால் கைவிடப்பட்டார், மிகவும் சோர்வடைந்தார். பாவ மனிதகுலத்தின் ஆவிக்குரிய பாரமும் அவரது ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் மீது ஏறியிருப்பதால் சிலுவை அதிக எடையாயிருக்கும்.  கர்த்தராகிய இயேசு "தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்" (யோவான் 19:17). இருப்பினும், அவர் தடுமாறினார், மேலும் அதிக சுமையுடன் நடக்க முடியவில்லை.  ரோமானிய வீரர்கள் தங்கள் கைதி தூக்கிலிடப்படுவதற்கு முன்பு இறப்பதை விரும்பவில்லை, எனவே கர்த்தராகிய இயேசுவுக்கு உதவ ஒருவரைக் கொண்டுவர நினைத்தனர்.

சிலுவையை தூக்க ஒரு வாய்ப்பு  தற்கால லிபியா, ஆப்பிரிக்காவில் இருந்து வந்த யாத்ரீகர்களில் சிரேனே சீமோன் ஒருவன். வேதாகம அறிஞர்கள் பிளவுபட்டுள்ளனர், அவர் புலம்பெயர் யூதரா அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து யூத மதத்திற்கு மாறியவரா என்பது உறுதியாக தெரியவில்லை.  பஸ்கா மற்றும் பெந்தெகொஸ்தே நாட்களில் பல பக்தியுள்ள யூதர்கள் எருசலேமுக்கு வந்ததைப் போல, சீமோனும் எருசலேமுக்கு வந்திருக்கலாம்.  அந்த  மோசமான ஊர்வலம் எருசலேமின் வாயில்களை விட்டு வெளியேறிய நேரத்தில் இருக்கலாம். மேலும் சீமோன் ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு மாதம் பயணம் செய்திருக்க வேண்டும்.

சில அறிஞர்கள் சீமோன் ஒரு இரகசிய விசுவாசி என்றும், ரோமானிய வீரர்களின் கொடூரமான நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.  பழிவாங்கும் விதமாக, சீமோன் சிலுவையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  மற்ற அறிஞர்கள் அவன் ஒரு அந்நியன் என்று நினைக்கிறார்கள், வீரர்கள் அவனைப் பிடித்து சிலுவையைச் சுமக்க வைப்பது புத்திசாலித்தனம். வெறுப்பு நிறைந்த சூழ்நிலையின் காரணமாக, ஒரு யூதர் சிலுவையை தானாகவே சுமக்க முன்வந்திருக்க மாட்டான்.  "அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்"  (லூக்கா 23:26).

சீஷர்கள் காணாமல் போனார்கள், ​​கர்த்தராகிய இயேசு ஊழியத்தின் மூலம் பயனடைந்தோர் காணாமல் போனார்கள், நல்ல சமாரியர்களைக் காணவில்லை; ஆனால் சீமோன் கிடைத்தான். அவன் சரியான நேரத்தில் சரியான வேலைக்காக இருந்தான்.  அந்த நேரத்தில் சீமோன் இருந்ததே தேவனின் இறையாண்மை வடிவமைப்பு.  பஸ்கா பண்டிக்கைக்கு ஆட்டுக்குட்டியை பலியிட வந்திருக்க வேண்டிய சீமோன், உலகத்தின் பாவத்தை நீக்கும் தேவ ஆட்டுக்குட்டிக்கு உதவ முடிந்தது.

பின்தொடரக் கிடைக்கும் வாய்ப்பு
சிலுவையைச் சுமக்கும்படி சீமோன் கட்டாயப்படுத்தப்பட்டான் அல்லது கட்டளையிடப்பட்டான்.  கர்த்தராகிய இயேசுவின் மீது பொதுமக்களிடையே மிகுந்த விரோதம் இருந்தபோது, ​​பாதிக்கப்பட்டவருக்கு உதவுவது சாதகமான விருப்பமாக இருக்கவில்லை. சீமோன் கர்த்தராகிய இயேசுவை அவருடைய அவமானம், நிந்தை, நிராகரிப்பு, வாய்மொழி மற்றும் வன்முறை துஷ்பிரயோகம் மத்தியில் அடையாளம் காண வேண்டியிருந்தது. சீமோன் தயக்கம் காட்டியிருக்கலாம், ஆனால் ரோமானிய ஆட்சியாளர்களின் கீழ் வேறு வழியில்லை.  ஒன்று அவன் கீழ்ப்படிய வேண்டும் அல்லது தப்பி ஓட வேண்டும், மீறினால் கைது செய்யப்படலாம். 

சீமோன் அனைத்து சீஷர்களுக்கும் ஒரு முன்மாதிரி.  "அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்" (மத்தேயு 16:24). சிலுவை என்பது மிருகத்தனம், வன்முறை, வேதனை, அவமானம், பாவம் மற்றும் மரணத்தின் சின்னமாகும்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் கல்வாரி சாலையில் கர்த்தராகிய இயேசுவை அடையாளம் காண வேண்டும்; மாற்று வழி இல்லை. கர்த்தராகிய இயேசுவின் அணிவகுப்பு விரோதமும் வெறுப்பும் நிறைந்த சூழலில் இருந்தது.  கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றுபவர்கள் உலகத்திலிருந்து விரோதத்தையும் வெறுப்பையும் எதிர்பார்க்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவே (யோவான் 15:18-19). 

குடும்பத்தை வழிநடத்த கிடைக்கும் வாய்ப்பு
நற்செய்தி எழுத்தாளர் மாற்கு மேலும் ஒரு தகவலைக் கொடுக்கிறார், சீமோன் என்பவன் அலெக்சாண்டர் மற்றும் ரூப்பின் தந்தை.  "சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்" (மாற்கு 15:21).  மாற்குவின் நற்செய்தியைப் படித்தவர்களுக்கு, அலெக்சாண்டர் மற்றும் ரூப்பு ஆகிய இரண்டு முக்கிய மனிதர்கள் நன்கு அறியப்பட்டவர்கள்.  சீமோன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அந்த நாளில் மட்டும் அல்ல, அவருடைய வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார்.  சீமோன் இதைப் பற்றி பெருமையாக பேசியதாக எந்த பதிவும் இல்லை, உண்மையில், சீமோனின் மகன்களை வைத்து வாசிப்பவர்களுக்கு அடையாளம் காட்டினார் மாற்கு. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை தன் பிள்ளைகளும் பின்பற்றுவதை சீமோன் உறுதி செய்தார்.

பவுல் ரூப்பு பற்றி எழுதுகிறார், அவர் மார்கு குறிப்பிட்ட அதே ரூப்பாக  கருதப்படுகிறார்.  சீமோனின் மனைவியும் தேவனின் அற்புதமான பெண் மற்றும் பவுலுக்கு தாயைப் போல இருந்தார்.  "கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்" (ரோமர் 16:13). ஆக,  முழு குடும்பமும் முதல் நூற்றாண்டு தேவாலயத்தின் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

அருட்பணியை தலைமை ஏற்க வாய்ப்பு 
அந்தியோகியா சபையில் மூன்று கண்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் இருந்தனர். "அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும் (சீமோன் தான், பெயர் உச்சரிப்பினால் சிமியோன் என மாறியுள்ளது), சிரேனே ஊரானாகிய லுூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்" (அப்போஸ்தலர் 13:1).  சில வேதாகம அறிஞர்கள் இங்குள்ள சிமியோன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக சிலுவையைச் சுமந்த அதே சீமோன் என்று கூறுகின்றனர்.  அந்தியோகியாவின் ஆற்றல்மிக்க தலைவர்களில் ஒருவராக சீமோன் மற்ற சபைத் தலைவர்களுடன் ஈடுபட்டார், உபவாசம் மற்றும் ஜெபம் மற்றும் மிஷனரிகளான பர்னபா மற்றும் சவுல் (பவுல்) ஆகியோரை ரோமானியப் பேரரசின் பல்வேறு பகுதிகளுக்கு நியமித்தார்.

சவால்
சீமோன் கல்வாரி பாதையில் ஆண்டவரைப் பின்தொடர்ந்து, மகிமையின் பாதையில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.  சீமோனைப் போல எல்லாரும் சிலுவையைச் சுமக்கக் ஆயத்தமாக இருக்க வேண்டும்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராவதற்கு அதுவே முதல் தேவை.  எப்படியோ, இன்றைய பிரசங்கங்களில் சீமோனைப் பற்றி பேசுவது அரிது, விடுப்பட்ட பாத்திரம். சீமோன் வாய்ப்பை பெற்றான், அப்படியென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அவமானம், துன்பம் மற்றும் நிராகரிப்பை உடனிருந்து அடையாளமாக கண்டான்.  உலகில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் துன்பத்தையும் வேதனையையும் எதிர்பார்க்க வேண்டும். சீமோன் குடும்பத்தின் ஆவிக்குரியத் தலைவராகவும், விருந்தோம்பும் மனைவி மற்றும் சபைகளில் முக்கிய மகன்களுடன் இருந்தார்.  உள்ளூர் சபையில், சீமோன் தேவ ராஜ்யத்தை கட்டியெழுப்புவதில் ஈடுபட்ட ஒரு தலைவராக இருந்தார்.

 சீமோன் ஒரு உத்வேகம், மாதிரி, சவால் மற்றும் பின்பற்றுவதற்கு தகுதியானவர்

 Author: Rev. Dr. J. N. Manokaran

 

 



Topics: Rev. Dr. J .N. மனோகரன் Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download