கண்னன் ஏறக்குறைய கி. மு. 900ல் இஸ்ரவேல்: நாடு இரு பிரிவாகப் பிரிந்தது. ஒன்று சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரவேல் நாடு. மற்றொன்று எருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூதநாடு. கடவுளை விட்டு விலகி தரமற்ற வாழ்வு வாழ்ந்ததால் கடவுள் அவர்களைக் கைவிட்டார். கி. மு. 600 ல் அசீயா நாட்டு அரசன் சார்கோன் சமாரியாவை வென்று அங்குள்ள மதத்தலைவர்கள், அமைச்சர்கள், பிரபுக்கள், தளபதி போன்ற முக்கியமானவர்களை தன் நாட்டிற்குச் சிறைகளாகக் கொண்டு போனான். அதற்கு பதிலாக வேற்று நாட்டு மக்களை சமாரியாவில் குடியேற்றினான். வேற்று நாட்டவரும் சமாரியாவிலிருந்த யூதரும் திருமண உறவில் இணைந்தனர். புதிய இனம் தோன்றியது. அது சமாரிய இனம், சமாரியரை யூதர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதினர்.
இயேசு தம் சீடர்களுடன் கலிலேயாவிற்கு சமாரியா நாட்டின் வழியே வந்து கொண்டிருந்தார். யாக்கோபின் கிணறு என்றழைக்கப்பட்ட கிணற்றருகே அமர்ந்திருந்தார். சீடர்கள் உணவு வாங்குவதற்காக ஊருக்குள் சென்று விட்டனர். அப்பொழுது நேரம் மதியம் 12 மணி ஒரு சமாரியப் பெண் தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளிடம் குடிக்கக் கொஞ்சம், தண்ணீர் தா"' என்றார். அவள், “நீர் யூதன்! நான் சமாரியப் பெண்! நீர் எப்படி என்னிடம் நீர் கேட்கலாம்?” என்று கேட்டாள்.
“கடவுளின் அருள் பற்றியும், உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் நீ அறிந்திருந்தால். நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவரும் உனக்கு மெய்வாழ்வுதரும் நீரைத் தந்திருப்பார்.'” இயேசுவின் பதிலைக் கேட்டவள்,
“ஐயா! மொண்டு கொள்ள உம்மிடம் பாத்திரமும் இல்லை. கிணறும் ஆழமாக இருக்கிறது, அப்படியிருக்க்கும்போது.... உமக்கு எங்கிருந்து மெய்வாழ்வு தரும் தண்ணீர் கிடைக்கும். நம்முடைய தந்தையாகிய யாக்கோபை விட பெரியவரா நீர்? அவரும்,. அவருடைய பிள்ளைகளும், அவருடைய கால்நடைகளும் இதில் தண்ணீர் குடித்ததுண்டே!”
“இந்தத் தண்ணீரைக் குடிப்பவனுக்கு மீண்டும் தாகம் வரும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிப்பவனுக்கு ஒருபோதும் தாகமெடுக்காது அவன் என்றென்றுமுள்ள மெய்வாழ்வைப் பெறும்படி அவனுக்குள்ளே பொங்கியெழும் நீரூற்றாயிருக்கும்.”
“ஐயா! எனக்குத் தாகமெடாமலும், தண்ணீர் மொள்ள நான் இங்கே வராமலும் இருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தாரும்.
"நீ போய் உன் கணவனை இங்கே அழைத்து வா! எனக்குக் கணவன் இல்லையே!”
"உண்மையைச் சொன்னாய், இப்பொழுது இருப்பவன் உன் கணவன் அல்ல. இதற்கு முன்....'” என்று கூறி அவளது தரங்கெட்ட வாழ்வை எடுத்துரைத்தார். திகைத்தாள் ஒரு நிமிடம், பின்.
ஐயா! நீர் இறைவாக்குரைப்பவர் எனக்கண்டு கொண்டேன். எங்கள் மூதாதையர் இந்த மலையில் தொழுதுகொண்டு வந்தனர். நீங்களோ எருசலேமில் தொழுது கொள்ள வேண்டும் என்கிறீர்களே!” தன் ஐயத்தை எடுத்துரைத்தாள்.
"இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல. எங்கும் பிதாவைத் தொழுது கொள்ளும் காலம் வருகிறது. கடவுள் ஆவியாயிருக்கிறார். தொழுகிறவர்கள் உண்மையான பக்தியோடு தொழவேண்டும். அதுதான் முக்கியம்”
கிறிஸ்து எனப்படும் மேசியா வருவார். அவர் வரும்போது அனைத்தையும் அறிவிப்பார்.”
"உன்னோடு பேசுகிற நானே அவர்: என்று இயேசு கூறவும், சீடர்கள் திரும்பி வரவும் சரியாக இருந்தது. சமாரியப் பெண்ணும் இயேசுவும் பேசுவதைக் கண்டு திகைப்படைந்தனர்.
ஊருக்குள்ளே போய் '*நான் செய்த ஒவ்வொரு காரியத்தையும் ஒருவர் எனக்குச் சொன்னார். அவர் மேசியாவோ வந்து பாருங்கள்" மற்றவர்களை அழைத்தாள்.
சமாரியர் வந்தனர். இயேசுவின் போதனைகளைக் கேட்டனர். அங்கே இரண்டு நாள் தங்கினார். சமாரியர் அநேகர் அவரிடம் நம்பிக்கை வைத்தனர். இயேசு யூதருக்கு மட்டுமா ஆண்டவர்? அவர் முழு உலகிற்கும் உரியவர். சமாரியரும் அவர் மக்களே!
இயேசு கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு வந்தார். ஒரு அரசாங்க அதிகாரியின் மகன் கப்பர்நகூம் என்னும் ஊரில் நோயுற்றிருந்தான். இயேசு கானா ஊருக்கு வந்துள்ளதை அறிந்த அதிகாரி கானா ஊருக்கு சென்று, இயேசுவிடம் கெஞ்சினார். இயேசு நீ போகலாம் உன் மகன் முழுநலத்தோடு இருக்கிறான்!” என்று சொன்னார். அந்த அதிகாரி இந்த வார்த்தையை நம்பி தன் வீட்டிற்கு, வந்தான். அவனுடைய வேலைக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து பையன் முழுநலத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.
“எத்தனை மணிக்கு அவனுக்கு குணம் ஏற்படத் தொடங்கிற்று'' ஆவலோடு கேட்டான்.
“நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு காய்ச்சல் விட்டது ஐயா' என வேலைக்காரர் கூறினர்.
“உன் மகன் முழுநலத்துடன் இருக்கிறான்!” என இயேசு தன்னிடம் சொன்ன மணிநேரம் அதுவே என அறிந்த அதிகாரி இயேசுவிடம். நம்பிக்கை கொண்டான். அவன் வீட்டாரும் இயேசுவிடம் பக்தி கொண்டனர்.
நாசரேத்தூருக்குச் சென்ற இயேசு தொழுகைக் கூடத்திற்குச் சென்றார். இறைவாக்குரைப்பவராகிய ஏசாயாவின் நூற்சுருள் அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதை விரித்து,
“ஆண்டவருடைய ஆவி என்மேல் இருக்கிறது. அவர் என்னை அபிஷேகம் செய்துள்ளார். எளியவர்க்கு அருட்செய்தியை அறிவிக்கவும், “சிறைப்பட்டோருக்கு விடுதலை. குருடருக்குப் பார்வை'' என்று அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோர் விடுதலை அடையும்படி செய்யவும் இதோ ஆண்டவர் அருள்-தரும் ஆண்டு! என்று அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்” என்ற பாகத்தை எடுத்து வாசித்தவர் அத்தோல் சுருளைச் சுருட்டி பணிவிடைக் காரனிடத்தில் கொடுத்தது.
“நீங்கள் இந்த வேதபாகத்தைக் கேட்கையிலேயே இது நிறைவேறுகிறது. ஏசாயா தீர்க்கரால் கூறப்பட்டவர் நானே!'' என்று கூறினார்.
தொழுகைக் கூடத்திலிருந்த அனைவரும் வெகுண்டெழுந்தனர்.
“இவன் தச்சன் மகன் அல்லவா? '*தன்னை கடவுளுக்குச் சமமாகக் கூறுகிறானே!” என்று கூறி அவரை தம்முடைய ஊர் அமைந்திருந்த மலையிலுள்ள செங்குத்தான இடத்திலிருந்து அவரைத் தள்ளி விடும்படி இயேசுவைத் தள்ளிக் கொண்டு போனார்கள். அவரோ அவர்களை விட்டுக் கடந்து போய் விட்டார்.
இதன் தொடர்ச்சி மகிபனின் மலைச் சொற்பொழிவு! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.