நகோமி மம்மியாக மாறிய மாமியார்

உலகத்திலே உன்னதமான உறவு உயிரும் மெய்யும் கலந்த அப்பா அம்மா உறவு. அதில் அம்மாதான் முதன்மை. கருவில் சுமந்து, தெருவில் சுமந்து, இறுதிவரை மனதில் சுமக்கும் உறவுதான் தாய். பெற்றவள் என்றால் பெற்றுக்கொண்டவள் என்று பொருள். கடவுள் கருவின் மூலம் கொடுப்பதும் பிள்ளைதான், கருவின் பிள்ளைக்கு மனமுடித்துக்கொடுப்பவரும் பிள்ளைதான். பெற்றவளைவிட வளர்த்தவளுக்கே அதிக பாசமும், உரிமையும் உண்டு. ஆகவேதான் பெற்றதாய் வளர்ப்புத்தாய் என்று இரண்டு தாய்கள் உண்டு. நகோமி ரூத்தை ஈன்றெடுக்கவில்லை ஆனால் கடவுளிடமிருந்து மகன் வழியாக பெற்றுக்கொண்ட தாய். மகன் வழியாக கடவுள் மற்றொரு மகளை கடவுள் கொடுத்தார் என்று எந்த மாமியார் நினைக்கிறாளோ அவளே நல்ல தாய், நல்ல பெண்மணி. அப்படித்தான் மம்மியாக மாறினாள் மாமியார் நகோமி.

தொப்புள்கொடி உறவான திருமண உறவு

திருமணம் ஒன்றுதான் மாமியார் மருமகள் என்ற உறவை உருவாக்குகிறது. திருமண உறவு மரணத்தோடு முடிவடைகிறது. ஆனால் அந்த உறவை தொப்புள் கொடி உறவாக மாற்ற கருவில் சுமக்கத்தேவையில்லை மாறாக மனதில் சுமந்தாலே போதும் என்பதுதான் நகோமியின் தாய்மைக்கு அடையாளம். மகன் இறந்தாலும் பரவாயில்லை மருமகள் தாளி அறுக்கணும் என்னும் ஆசை கொண்ட மாமியார்கள் மத்தியில் மகன்கள் இறந்த பின்பும் மருமகள்களை அவளுடைய பிள்ளைகளாக பாவித்து, அவர்களை மகள்களாக அவளுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்றிருந்த ஆசை தூய்மையானது மற்றும் நேர்மையானது. அந்த ஆசையுடன் மருமகள்களை மக்களே (1:12) என்று அழைத்த போதே மம்மியாக மாறினாள் மாமியார் நகோமி!

துன்பப்பட்டாலும் இன்பத்தை அருளும் பாசம்

தாய்க்குப் பின் தாரம் என்பது நிதர்சனம். இறைக் கோட்பாட்டின்படி ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் துனை தேவை. அது தாயில் ஆரம்பித்து, தமக்கையில் தொடர்ந்து, தாரத்தில் வளர்ந்து, மகள் அல்லது மருமகளோடு முதிர்ந்து, தள்ளாத வயதில் பேத்தியோடு முடிவுறுகிறது. பாசத்திற்கு பெயர்கொண்டது பெண் இனம். ஆனால் மாமியார் மற்றும் மருமகள் என்ற உறவுகளில் மட்டும் பெண் கொடுமையானவளாக காணப்படுகிறாள் அல்லது சித்தரிக்கப்படுகிறாள். பொதுவாக மாமியார் மருமகள், அவர்கள் உறவுகளிடையே உள்ள துன்பங்களை ஒருவர் மேல் ஒருவர் சாட்டி இன்பம் காண முயற்சிப்பார்கள். ஆனால் நகோமி அவளுடைய துன்பத்தை பொறுத்துக்கொள்ள தீர்மானித்து, மருகமள்கள் இன்பமே அவளுடைய இன்பமாக கருதி,என்றாலும், அல்லது தான் இல்லை என்றாலும் தன்னால் யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பாள். தன்னை சார்ந்திருப்பவர்களுக்காக செயல்திட்டங்ளை வகுப்பவளும், செயல்படுபவளும், செத்து மடிபவளும் தாய்தானே! நகோமி அவளை நம்பி வந்த ரூத்தை கைவிடுவது அவளுக்கு இழைக்கும் துரோகம். தாயாக ஏற்றுக்கொண்ட மருமகள் ரூத்திற்கு நல்வாழ்வை அமைத்துக்கொடுப்பது நகோமியின் கடமை. தொலைநோக்குடன் அதற்கான செயல்திட்டங்களை வகுத்தாள். தான் மீண்டும் தாயாகி அதன் பின்பு மீண்டும் மாமியாராவதற்கு பதில் மருமகளுக்கு தாயாவதே சிறப்பானது என்று அறிந்தாள். அதனை ரூத் புரிந்துகொள்ளும்படி செய்தாள். மாமியாருக்கு மருமகள் கீழ்படியும்படியக்கூடிய உத்தமமான வாழ்கை வாழ்ந்தாள். மருமகளுக்கு தாயாக இருந்து திருமணத்தை நடத்திவைத்தாள். அதனால் பாட்டி என்ற அந்தஸ்தையும் பெற்றாள். சாதாரனப் பாட்டி அல்ல, தாவீது ராஜாவின் முப்பாட்டியானாள். மருமகளுக்கு மருமணம் செய்து வைத்து மம்மியாக மாறினாள் மாமியார் நகோமி!!!

துனைக்கு துனைதேடிக்கொடுக்கும் தியாகம்

துனையாக ஒருவர் இருப்பவருக்கு நான் ஏற்ற துனை இல்லை, அவருக்கு ஏற்றத் துனையை தேடிக்கொடுக்க ஒரு தாயைத்தவிர எந்த துனைக்கும் துணிவும் தியாகமும் எளிதில் வராது. நகோமிக்கு துனையாக ரூத் வந்தாள். ஆனால் ரூத்திற்கு நான் ஏற்ற துனையில்லை, அவளுக்கு ஒரு கணவனே ஏற்ற துனையாவான் என்பதை அறிந்தாள் நகோமி. தனக்கென ஒரு துனையை தேடிக்கொள்ளவோ, அல்லது தனக்கென உள்ள ஒரே துனையான ரூத்தை விட்டுவிடாதிருக்கும் சுயநலவாதியாகவுமில்லை மாமியார் நகோமி. ஒருதாய் தனக்கென துனை எவரும் இல்லை என்றாலும் தன் பிள்ளைகளுக்கு ஏற்ற துனையை தேடித்தர தன்னையே தியாகம் செய்வாள். அப்படியே நகோமி, நல்ல செல்வந்தனை மட்;டுமல்ல நல்ல குணநலன்களைக் கொண்டிருந்த போவாஸை ரூத்திற்கு திருமணம் முடிக்க தன்னையே தியாகம் செய்ததால் மம்மியாக மாறினாள் மாமியார் நகோமி!!!!

“அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்@ அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது. அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன். உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள். நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள். அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள் அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.” (4:14-17).

Author: Rev. Dr. C. Rajasekaran



Topics: bible study Rev. Dr. C. Rajasekaran Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download