சனகரீப் என்ற யூதர்களின் தலைமைச் சங்கம் கூடியது. அவர்களது சதிதிட்டதின்படி பொய்சாட்சிகளுடன் வந்து இயேசுவைக் குற்றப்படுத்தினர். ஒன்றும் தகுதியான ஆதாரம் பெறவில்லை. அப்பொழுது தலைமைஆசாரியர் எழுந்து " என்றென்றுமுள்ள கடவுளின்மேல் ஆணையிட்டுச் சொல்லும்படி உன்னைக் கேட்கிறேன் நீ மேசியாவா என்றார்.
இயேசு “நீரே சொல்லிவிட்டீரே மனுமைந்தர் தெய்வ வலப்பக்கத்தில் வீற்றிருப்பதையும், வானங்களின் மேகங்கள்மீது வருவதையும் காண்பீர்கள்” என்றார்.
உடனே தலைமை ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, இவன் தேவதூஷணம் சொன்னான். இனிமேல் சாட்சிகள் எதற்கு? இந்த தெய்வ நிந்தனையைக் கேட்டீர்களே உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? என்றான் அவர்கள் , “இவன் மரண தண்டனைக்குரியவன்!” என்றார்கள் .
இயேசுவின் முகத்தில் துப்பி அவரை அடித்தார்கள் . கன்னத்தில் அறைந்து, “மேசியாவே உன்னை அடித்தது யார் ? ஞானத்தால் உணர்ந்து சொல் ” என்று ஏளனம் செய்தனர் .
பேதுரு முற்றத்தில் உட்கார்ந்திருந்த, மற்றவர்களுடன் குளிர் காய்ந்து கொண்டிருந்தார் ஒரு வேலைக்காரி பேதுருவைக் கண்டு “நீயும் கலிலேயராகிய இயேசுவுடன் இருந்தாயே” என்றாள் .
பேதுரு, “நீ என்னை சொல்லுகிறாய் என்பதே எனக்குத் தெரியவில் லை என்று ஒன்றும் அறியாதவர் போல மறுதலித்தார் . வாயிலருகே சென்றார். வேறொரு வேலைக்காரி அவரைக் கண்டு, 'இவன் நாசரேத்தூர் இயேசுவுடன் இருந்தான் !” என்று அங்கிருந்தவர்களுக்குச் சொன்னாள் .
"அந்த ஆளை எனக்குத் தெரியாது!' என்று ஆணையிட்டு மறுதலித் தான் . சற்று நேரத்திற்குப்பின் , அங்கே நின்றவர்கள் , “உண்மையாகவே நீயும் அவர்களுள் ஒருவனே! உன் பேச்சே உன்னைக் காட்டிக் கொடுக்கிறது” என்றார்கள் .
அப்பொழுது பேதுரு, “அந்த ஆளை எனக்குத் தெரியாது” என்று கூறி சபிக்கவும் , சத்தியம் பண்ணவும் ஆரம்பித்தான் . சேவல் கூவியது. விசாரணையிலிருந்து இயேசு தன் முகத்தைத் திருப்பி பேதுருவைப் பார்த்தார் .
பேதுருவின் உள்ளம் உடைந்தது.
இயேசு தன்னிடம் , “சேவல் : கூவும் முன் 3 முறை மறுதலிப்பாய் எனக்கூறிய வார்த்தையை நினைத்தார் . வெளியே போய் கதறி அழுதார் .
தலைமை ஆசாரியர்களது மதவிசாரணைக்குப் பின் ரோம ஆளுநர் பிலாந்துவிடம் இயேசுவை இழுத்துச் சென்றனர் . யூதேயா, சமாரியா நாடு ஆண்ட அர்கெலாயு பதவியை இழந்திருந்தான் . ரோம ஆளுநர் பொந்தியுபிலாத்து செசரியாவை தம் அதிகாரப் பூர்வ குடியிருப்பாகக் கொண்டு ஆட்சி செய்துவந்தார் . பஸ்காப் பண்டிகைக்காக எருசலேமிற்கு வந்து, அந்தோணியாக் கோட்டையில் தங்கியிருந்தான் .
மரண தண்டனை அளிக்க ரோம அதிபருக்கு மாத்திரமே அதிகாரம் இருந்ததால் பிலாத்துவிடம் இயேசுவை விசாரனை செய்ய அழைத்துச் சென்றனர். பலவித குற்றங்களை தலைமை ஆசாரியர்களும் , மூப்பர்களும் கூறிக் கொண்டே இருந்தனர். இயேசுவோ பதில் கூறவில்லை, பிலாத்து ஆச்சரியப்பட்டான் .
“நீர் யூதரின் ராஜாவா?! என வினவ,
“நீர் சொல்லுகிறபடிதான் ” என்றார் இயேசு. அந்த சமயம் பிலாத்துவின் மனைவி, “அந்த நீதிமான் காரியத்தில் நீர் தலையிட வேண்டாம் . நேற்றிரவு கனவில் அவர் பொருட்டு நான் மிகவும் பாடுபட்டேன் .' என்று எழுதி ஒரு வேலையாள் கையில் கொடுத்து அனுப்பியிருந்ததைப் பெற்ற பிலாத்து அவரை விடுதலை பண்ண வகை தேடினான் . இயேசு கலிலேயா நாட்டைச் சேர்ந்தவர் என அறிந்து, பஸ்காப் பண்டிகைக்காக யூதாவிற்கு வந்து மக்காபியர் மாளிகையில் தங்கியிருந்த ஆண்டிபாஸீடம் அனுப்பினான் . ஆண்டிபாஸ் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து “தான் கொன்ற யோவான் திருமுழுக்குநர் உயிருடன் எழுந்து விட்டாரோ?” என ஐயங்கொண்டிருந்தான் . எனவே இயேசுவிடம் பல கேள்விகள் கேட்டான் .
இயேசுவோ பதில் கூறவில்லை. எனவே அவரை ஏளனம் செய்து பிலாத்துவிடமே அனுப்பினான் .
பஸ்காப் பண்டிகைதோறும் மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை விடுதலை பண்ணுவது ரோம அதிபனின் வழக்கம் . பரபாஸும் ஒரு கொலைக் குற்றத்தில் அகப்பட்டு சிறையில் இருந்தான் .
தலைமையாசாரியர் தூண்டிவிட்டபடி மக்கள் கூட்டம் , “பரபாஸை விடுதலை பண்ணும் ” எனக் கூக்குரலிட்டனர் .
“இயேசுவை என்ன செய்ய வேண்டும் ?” என பிலாத்து கேட்க,
“சிலுவையில் அறையும் ” எனக் கூக்குரலிட்டனர் .
பிலாத்து இயேசுவை விடுதலை பண்ண மனதுள்ளவனாய் , 'இயேசுவை வாரினால் அடித்து விடுதலை செய்கிறேன் ” எனக்கூறி இயேசுவை வாரினால் அடிக்க ஆணையிட்டான் . இயேசுவின் கைகளைக் கட்டி, தலையில் குட்டினார்கள் . மாறி மாறி கன்னத்தில் அறைந்தார்கள் . ரோமப் போர் வீரர்கள் முள்ளால் ஒரு முடியைப் பின்னி இயேசுவின் தலையில் வைத்து, அவருக்கு செந்நிற ஆடையை அணிவித்து, அவர் கையில் கோலைக் கொடுத்து, யூதருடைய ராஜாவே வாழ்க” எனக்கூறி ஏளனம் செய்தனர் . பின் அந்தக் கோலை வாங்கி அவர் தலையில் அடித்தனர் . தலையில் வைக்கப்பட்ட கீரிடத்தின் முட்கள் பதிய, பதிய இரத்தம் பீறிட்டது. சொல் லொண்ணா வேதனையில் அவரது சரீரம் துடித்தது. அழகிய அவரது வதனம் உருக்குலைய ஆரம்பித்தது. போர்வீரர்கள் இயேசுவின் முகத்தில் காறி உமிழ்ந்தனர் . எச்சில்வடிய எம்பெருமான் தாழ்மையின் உருவாய் நின்றிருந்தார் .
யூதர்களுடைய சட்டப்படி ஒரு மனிதனை 40 அடிகள் அடிக்கலாம் . அவர்களுடைய சவுக்கு ஏழு சவுக்குகளாகப் பிரிந்திருக்கும் . அவற்றின் இறுதியில் ஈயக்குண்டுகள் இருக்கும் . ஈயக்குண்டுகளில் கொக்கிகள் இருக்கும் . சவுக்கால் ஒரு அடி அடிக்கும்போது ஏழு சவுக்குகளும் உடலில் ஏழு இடங்களில் அடியுடன் கொக்கி பதியும் . இழுக்கும் போது ஏழு இடங்களிலும் சதைகளை பிய்த்துக் கொண்டு வரும் . அப்படியாயின் 40 அடிகள் என்றால் . 40 * 9 = 360 இடங்களில் கொக்கிகள் பதிந்து இயேசுவின் உடலை நார் நாராக பிய்த்தெறிந்திருக்கும் . உடல் முழுவதும் உழவனால் உழப்பட்ட நிலம் போல வாரினால் உழப்பட்டு, இரத்தம் கொட்டியது.
ராஜாதி ராஜன் , ஒரு கேவலமான கொலைகாரனைவிட கொடுமையானவனைப் போல் எண்ணப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, பிலாத்துவின் முன் இழுத்து வரப்பட்டார் . பரிபூரண அழகுள்ளவர் , முள்ளுகளினால் உண்டான காயத்தினால் முகமெல்லாம் இரத்தம் வழிய, போர் வீரர்களின் எச்சில்கள் அத்துடன் கலந்திருக்க, அலங்கோலமாய் அழைத்து வரப்படுகிறார்.
அவரைக் கண்டபிலாத்துவின் உள்ளம் துடிக்கிறது. அவரை விடுதலை பண்ணிவிட துடிக்கிறான் .
"இவரிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை. குற்றமற்றவரை இவ்வளவு தண்டித்தது போதாதா? பிலாத்துவின் வார்த்தைகள் இறைஞ்சின.
"இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்றான் . எங்களுடைய நியாயப் பிரமாணச் சட்டப்படி இவன் சாக வேண்டும் !” அன்னா ஆத்திரத் தோடு கூற, தலைமை ஆசாரியர் ஏவிவிட்டபடி கூடி வந்திருந்த அவர் கள் இயேசுவை சிலுவையில் அறையும் ” எனக் கூக்குரலிட்டனர் .
பிலாத்துவின் முயற்சி பலன் அளிக்கவில்லை.
ஆசாரியர்கள் , “இவன் தன்னை இராஜா என்று கூறுகிறான் . ராஜா எனக் கூறுகிறவன் ரோம அரசுக்கு எதிரி. நீர் இவனை விடுதலை பண்ணினால் இராயருக்கு நீர் நண்பர் அல்ல! நாங்கள் இராயருக்கு இதைத் தெரிவிப்போம் " என மிரட்டினர் .
பதவி போய்விடுமோ எனப் பயந்த பிலாத்து தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, தன் கைகளைக் கழுவி “இந்த நீதிமானின் இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன் . நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் !” எனக் -கூறி சிலுவையில் இயேசுவை அறைய ஒப்புக் கொடுத்தான் . இத்தீர்ப்பைக கேட்ட யூதா கலங்கினான் , துடித்தான் . அவன் மனச்சாட்சி அவனை வாதித்தது.
ஆசாரியர்களிடம் சென்று, “குற்றமற்ற இரத்தத்தைக் காட்டிக் கொடுத்து பாவம் செய்தேன் ” என்றான் .
அவர்களோ, அது உன் பாடு, எங்களுக்கென்ன”, என்றனர் . கதறினான் , அவன் குற்றமோ அவன்முன் விஸ்வரூபமாகியது.
நிம்மதி காணாத யூதாஸ் 30 வெள்ளிக்காசை திருக்கோவிலில் எறிந்துவிட்டு, நான்றுகொண்டு செத்தான் .
இதன் தொடர்ச்சி பாவம் போக்கும் பலி! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.