அவனும் அவனுடைய அண்ணன்மார் 1௦ பேரும் அறுவடை செய்த கதிர் கட்டுகளைக் கட்டிக் கொண்டிருந்தனர். அப்பொழுது யோசேப்பின் கதீர் கட்டு நடுவில் நிமிர்ந்து நிற்க, அண்ணன்மார்களின் கதிர்கட்டுகள் யோசேப்பின் கதீர்க்கட்டைச் சுற்றி வணங்கி நின்றன. இக்கனவை அவன் தன் சகோதரர்களிடம் கூறினபோது அவர்கள் கோபம் கொண்டு “எங்கள் மீது நீ அதிகாரம் செலுத்துவாயோ?” எனக்கூறி அவனைப் பகைத்தனர்.
தேவ பக்தியும், நற்குணமும் நிரம்பிய அந்த அழகிய இளைஞனை அவன் தகப்பன் யாக்கோபு அதிகமாய் நேசித்தார். மூத்த மகனுக்குத் தர வேண்டிய அங்கியை யோசேப்புக்கு பரிசளித்திருந்தார். இதனால் சகோதரர்கள் பொறாமை கொண்டனர். தன் சகோதரர்களின் தவறுகளை, தன் தகப்பனிடம் கூறி விடும் யோசேப்பை அவர்கள் ஏற்கனவே வெறுத்து வந்தனர்.
இதன் தொடர்ச்சி யோசேப்பின் இரண்டாவது கனவு! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை வெற்றித் திருமகன் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.