1. நேசகுமாரன்
மத்தேயு 3:16,17 இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரை யேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் நான் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
2. தேவகுமாரன்
மத்தேயு 14:22-34 இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்...காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு பயந்தார்கள். மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். யோவான் 1:34; 3:17; லூக்கா 1:35
3. மனுஷகுமாரன்
லூக்கா 19:10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்திருக்கிறார் என்றார்.
மத்தேயு 18:11 மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார் மத்தேயு 16:27,28 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைப் பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்.
4. தாவீதின் குமாரன்
மத்தேயு 1:1 தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்ச வரலாறு
லூக்கா 1:32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.மத்தேயு 9:27;15:22
5. யோசேப்பின் குமாரன்
லூக்கா 4:22 எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
6. மரியாளின் குமாரன்
லூக்கா 1:31; 2:51; பின்பு அவர் அவர்களுடனே கூடப் போய், அவர் களுக்குக் கீழ்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளை யெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டான். மாற்கு 6:3
Author: Rev. M. Arul Doss