திகைப்பு! அதிர்ச்சி !!
கோவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸின் தொற்றுநோய் சீனாவையும் படிப்படியாக உலகின் பிற பகுதிகளையும் வீழ்த்தியபோது, நாம் திகைத்துப் போனோம், பேச்சற்றுப்போனோம். திடீரென்று முழு இந்தியாவிற்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, நாம் அதிர்ச்சியடைந்தோம். அதோடு பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் புலம் பெயர்ந்தவர்களின் காட்சிகள் நம்மை பேச முடியாதவர்களாக்கியது.
மீள முடியாததா?
நகர்ப்புற பணி என்ற முறையில், நகரமயமாக்கல் மற்றும் இடம்பெயர்வு என்பது மீளமுடியாத செயல் என்று நான் நினைத்தேன், அதை கற்பித்தேன். இடம்பெயர்வு எப்போதும், கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு மட்டுமே நடக்கும் என்று நான் வாதிட்டேன். எனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையும் எனது புத்தகமான ‘கிறிஸ்துவும் புலம்பெயர்ந்தவர்களும்’ , இடம் பெயர்ந்தோர் மத்தியில் ஊழியம் செய்வதற்கான யோசனைகளையும் உத்திகளையும் உருவாக்கின. திடீரென்று, எனது யோசனைகள் நீக்கப்பட்டது போலவும் எல்லாம் வீணாகிவிட்டதை போலவும் உணர்கிறேன். அரசாளும் தேவனே இந்த செயல்முறையை மாற்றியமைக்கும்போது யாரால் கேள்வி கேட்க முடியும்?
உதவியற்ற நிலை
நண்பர்கள் தொலைபேசியில் பேசும்போதும் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்டபோதும் அது ‘மனச்சோர்வை’ தரும் புலம்பெயர்ந்தோரைப் பற்றிய செய்தியாகவே இருக்கிறது. பல முறை ஒரு உணர்வு வந்தது, ‘நாம் எவ்வளவு உதவியற்றவர்களாகவும் பயனற்றவர்களாகவும் மாறிவிட்டோம்? என்று. பசி தூக்கம் எல்லாம் மறைந்தது, உணர்வற்ற நிலைக்கு ஆளானேன், ஏனெனில் தொலைக்காட்சி மற்றும் மொபைல் போனில் இத்துயரங்கள் ஆக்கிரமித்து உள்ளது.
சிறுத்துளிகளாக வந்த செய்திகள்
படிப்படியாக, விஷயங்கள் வித்தியாசமாகத் தெரிய ஆரம்பித்தன. அப்போது ‘உதவியற்ற’ சூழ்நிலையிலிருந்து ஒரு நம்பிக்கையான’ சூழ்நிலைக்குள் என்னால் செல்ல முடிந்தது. தமிழ்நாட்டில் குடியேறியவர்களை சிறந்த முறையில் கவனித்துக்கொள்வதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க ஒரு கிறிஸ்தவ வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார், அது வெற்றிகரமாக அமைந்தது. ஒரு சிறிய வீட்டில் வசிக்கும் ஒரு நண்பர், தன் பணத்தேவைக்காக எப்போதும் போராடி வருபவர் இக்காலக்கட்டங்களில் சாலையில் நின்றுகொண்டு நடக்கின்ற மக்கள் கூட்டத்திற்கு உதவினார். மற்றொரு நண்பர் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லும் மக்கள் கூட்டத்திற்கென தனது முகநூலில் ஒரு முகநூல் பக்கத்தை (Facebook page) உருவாக்கி அதன்மூலம் 22 சரக்கு லாரிகளில் உணவினை வழங்கியுள்ளார். ஒரு சிறிய சபை ஆண்டுக்கு இரண்டு முறை இருநூறு உறுப்பினர்களைக் கொண்ட தங்கள் சொந்த சபைக்கு உணவளிக்கவே போராடும் நிலையில் தங்களால் இயன்றதை மிக தாராளமாக கொடுத்தார்கள். மகாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு போதகர் அருகிலுள்ள நன்கு அறிந்த மளிகை கடை உரிமையாளர் மூலம் ஏற்கனவே ரூ.10000 மதிப்பளவு மளிகை பொருட்கள் ஏழைகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொருவர் தன்னிடம் இருந்ததெல்லாம், அவர் ஏழைகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் மீண்டும் அடுத்த வேளை உணவிற்காக தேவனை எதிர்நோக்கியுள்ளதாகவும் தொலைபேசியின் மூலம் தெரிவித்தார். ரயில் நிலையத்திற்கு வரும் சுமார் எட்டாயிரம் புலம்பெயர்ந்தோருக்கு ஒருவர் உணவு வழங்குவதாக அந்நகரத்திலிருந்து ஒரு செய்தி வந்தது. ஒரு போதகர் தனது வீட்டு வாசலில் காவல்துறை அதிகாரிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து பயத்துடன் அவர்களை நோக்கியபோது அவர்கள் தயக்கத்துடன் தங்களுக்கு முககவசங்கள் தேவை என்றும், தையல் கருவிகளின் உதவியுடன் தங்களுக்கு தைத்து தர முடியுமா? எனவும் கேட்டிருக்கிறார்கள்.
வலைத்தளம்
இந்த முயற்சிகள் அனைத்தையும் நெட்வொர்க்கிங் மூலம் ஒன்றாகக் கொண்டுவர வேண்டும் என்று நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார். மூன்று மணி நேரத்திற்குள்,, 30க்கும் மேற்பட்ட நகரங்களில் தீவிரமாக செயல்படும் உள்ளூர் கிறிஸ்தவ வீரர்களை நாங்கள் கண்டோம். நள்ளிரவில் ரயில் நிலையத்தில் வந்து புலம்பெயர் தொழிலாளிகளுக்கு அதில் ஒருவர் சேவை செய்தார். இந்த நெட்வொர்க் நிச்சயமாக அடுத்து வரும் காலங்களில் விரிவடையும்.
பழைய ஒழுங்குகள் காலமானது
நான் கவனமாக கவனித்தபோது, பழைய கவர்ந்திழுக்கும் தலைவர்கள் ஏற்கனவே மறைந்துவிட்டார்கள். இப்போது பணியில் இருக்கும் இளைஞர்கள் யார் எனில் இளம் போதகர்கள் மற்றும் இளம் தலைவர்கள், தங்கள் ஊரை தவிர எதுவும் தெரியாதவர்களும் வெளியில் வராதவர்களும் தங்கள் ஜனங்களுக்காகவும் தங்கள் தெரு மக்களுக்காக மட்டும் போராடியவர்கள். இந்த இளைஞர்களுக்கு ஆலோசனைகள், கலந்துரையாடல்கள் ( நிறைய பேசுபவர்கள், வேலை செய்ய மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை) போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் தங்கள் சொந்த வழியிலும் பாணியிலும் செயலில் இறங்குவதில் வல்வர்கள். அந்த நெட்வொர்க்கின் மூலம் காரியங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அவர்களை ஊக்குவிக்கவும் முடிகின்றது.
குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
இந்திய சபைகள் சமீப காலங்களில் உபத்திரவ காலங்களை எதிர்கொண்டது. பெண்கள், மாணவர்கள் உட்பட பல போதகர்கள், மிஷனரிகள் மற்றும் சமூக சேவையாளர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டனர். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான நிதி நிறுத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள் மீது வேண்டுமென்றே பல புகார்கள் மற்றும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சூழலில், உடைந்துபோன சபைகளும் பலவீனமான சபைகளும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையும், அவருடைய நிர்பந்தமான அன்பும் இரக்கமும், தேவனுடைய மக்களிடம் சத்தமின்றி அசைவை ஏற்படுத்தியதால் அமைதியாக இருக்க இயலாமல், தங்களால் இயன்ற அளவு சேவை செய்ய உந்தியது. இந்த செயல்கள் ஆவணப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டால், இது இந்திய சபைகளின் வரலாற்றின் குறிப்பிடத்தக்க அத்தியாயமாக இருக்கும்.
செய்ய வேண்டியது அதிகம்
ஆமாம், இந்த அயராத, சுயநலமில்லாத மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை ‘நடக்கின்ற அனைத்து மக்கள் கூட்டத்தினருக்கும்’ பாதுகாப்பை அளிக்க முடியவில்லை. இருப்பினும், பலவீனமான இந்திய சபைகள் தன்னால் முடிந்தவரை உதவிசெய்திருக்கிறது, இது மறக்க முடியாத உண்மையாக இருப்பினும் இன்னும் செய்ய வேண்டியது அதிகம் இருக்கிறது.
காரணம் மற்றும் நம்பிக்கை
சில அமைப்புகள் உண்டு (அவற்றில் எனக்குத் தெரிந்தவை மற்றும் தனிப்பட்ட முறையில் தொடர்புடையவை), அவைகள் முதல் சில நாட்களுக்கு சில மீட்புப் பணிகளைச் செய்து பின்பு காணாமல் போன கிறிஸ்தவர்கள் அல்லாவர்கள். ஆயினும், நம்முடைய எஜமானராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய கிறிஸ்தவர்கள் தொடர்ந்து உதவிகளைச் செய்தார்கள். இயேசுவை விசுவாசித்து, மரணம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நித்தியத்திற்கான நுழைவுக்கான ஒரு கதவு என்பதை அறிந்திருந்ததால், உதவ முன் வந்த இளைஞர்களுக்கு ‘மரண பயம்’ இல்லை. எஜமானரைப் போலவே, அவர்களும் இரக்கத்துடன் நகர்ந்தார்கள். கடந்த காலங்களில் மடங்கள் (monasteries) மற்றும் ஆலயங்கள் எந்தவொரு தொற்றுநோய்களின் போதும் நடுத்தர வயதினரின் நம்பிக்கையாக மாறியது போல, கிறிஸ்தவர்கள் நம்பிக்கையற்ற இருண்ட காலகட்டத்தில் ‘ஒளியின் குழந்தைகள்’ என்ற நற்பெயருக்கு ஏற்றவாறு வாழ்ந்தனர்.
ஐந்து ரொட்டிகள் மற்றும் இரண்டு மீன்களின் அதிசயம்
இந்த எளிய, தாழ்மையான மற்றும் பயனுள்ள வேலைகள் அனைத்தும் தேவ பிள்ளைகளின் சுய தியாக நன்கொடைகளால் அளிக்கப்பட்டன. முதல் நூற்றாண்டின் மாசிடோனிய தேவாலயத்தைப் போலவே, பல கிறிஸ்தவர்களும் வறுமையிலிருந்தும் தங்கள் சக்திக்கு மீறி அளித்தனர். மக்களின் ‘தாராள மனப்பான்மை’ அற்புதமானது, மேலும் தேவனின் ‘பெருக்கத்தின் அற்புதம்’ என்பதும் தெளிவாகத் தெரிந்தது.
இன்னும் செய்ய வேண்டும்
சூழல் மாறிவிட்டது, இடம்பெயர்வு மூலம் பலர் இடம்பெயர்ந்து அல்லது தங்கள் வீடுகளில் திரும்பி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் ‘கனவுகளையும் நம்பிக்கையையும்’ இழந்துவிட்டார்கள். மக்கள் வாழ்க்கையின் அப்பட்டமான உண்மைகளை எதிர்கொள்கின்றனர். இவை அனைத்தும் நித்தியத்தின் வெளிச்சத்தில் மக்கள் தங்கள் ஆன்மீக வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க உதவும். இளையகுமாரனைப்போல இந்த மக்களும் வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் நோக்கம் மற்றும் வாழ்க்கைக்கு அப்பால் உள்ளவற்றை சிந்திப்பார்கள். இந்திய திருச்சபை நம்பிக்கையின் செய்தியைக் கொண்டுள்ளது, மக்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும்போது அவை உதவிக்கரம் நீட்டி நிரூபித்தன. சுவிசேஷத்திற்காக புதிய திறந்த கதவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வெற்றிச்சின்னங்களில் ஓய்வில்லை
இந்திய சபைகள் தனக்கான மனநிறைவையும் மற்றும் சுயவாழ்த்துக்களையும் கொண்டுள்ளது. எல்லா கிறிஸ்தவர்களும் சபைகளும் இதில் ஈடுபடவில்லை, இது வருத்தமளிக்கிறது. எனவே, என்ன செய்யப்பட்டுள்ளதோ அது முழு திறனுக்கும் அப்பாற்பட்டது, ஒரு பகுதியினர் முடிந்தளவு முயற்சி செய்துள்ளனர். எல்லா கிறிஸ்தவர்களும் தங்கள் கைகளை நீட்டி, நம்முடைய மகிமைமிகு தேவனின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக சிறிய காரியங்களைச் செய்தால், முழுமையும் மிகுதியும் சாத்தியமாகும்.
சவால்
இதுபோன்ற சூழ்நிலையில் இந்திய சபைகளின் முதிர்ச்சியும் வளர்ச்சியும் கண்டு நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைகிறேன். நாம் அனைவரும் இதற்காக ஒன்றாக மகிழ்வோம். தேவனின் அற்புதமான மற்றும் மகத்துவமான செயல்களுக்காக அவரைத் துதியுங்கள். நம்பிக்கையற்ற மக்களை வழிநடத்தவும், பாதைக் காட்டவும், ஆறுதலளிக்கவும், கற்பிக்கவும் முன்னேற தேவன் நமக்கு உதவட்டும் - குறிப்பாக ‘நடக்கின்ற மக்கள் கூட்டத்திற்கு'.
Author: Rev. Dr. J.N. Manokaran