யாக்கோபு 1:20 (19-27) மனுஷனுடைய கோபம் நீதியை நடப்பிக்கமாட்டாதே (மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது)
1. கோபம் கொடியது
நீதிமொழிகள் 27:4 உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது (சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது)
2. கோபம் கொல்லும்
யோபு 5:2 கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.(எரிச்சல் அறிவிலியைக் கொல்லும்; பொறாமை பேதையைச் சாகடிக்கும்)
3. கோபம் குடிகொள்ளும்
பிரசங்கி 7:9 உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும் (உள்ளத்தில் வன்மத்திற்கு இடங்கொடாதே; மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம்
4. கோபக்கிறதற்கு தாமதமாயிருங்கள்
யாக்கோபு 1:19 கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவோம்.
5. கோபித்தாலும் பாவஞ்செய்யாதிருங்கள்
எபேசியர் 4:26; சங்கீதம் 4:4 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.
6. கோபப்படுத்தாமல் வளர்த்திடுங்கள்
எபேசியர் 6:4 பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்ப்பீர்களாக
Author: Rev. M. Arul Doss