சங்கீதம் 50:15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்
எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்
1. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நமக்கு ஆதரவாயிருப்பார்
2சாமுவேல் 22:19; சங்கீதம் 18:18 என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
ஏசாயா 31:5 பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்;
2. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நமக்கு துணையாயிருப்பார்
சங்கீதம் 46:1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர்
சங்கீதம் 115:9-11 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
சங்கீதம் 40:17; சங்கீதம் 70:5 நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவர்
3. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்பார்
சங்கீதம் 20:1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக
ஆதியாகமம் 35:3 யாக்கோபு: எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன்
4. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நம்மை இரட்சிப்பார்
சங்கீதம் 107:6,13,19 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார் கள்; அவர்கள் இக்கட்டுகளில் இருந்து அவர்களை நீங்கலாக்கி விடுவி...
சங்கீதம் 37:40 கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்...
5. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நம்மை தப்புவிப்பார்
சங்கீதம் 91:15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான்; நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
சங்கீதம் 91:13 அவர் பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார். ஏசாயா 46:4; தானியேல் 6:16; 2கொரிந்தியர் 1:10
Author: Rev. M. Arul Doss