6:12 பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித் திரிகிறான்.
6:13 அவன் தன் கண்களால் சைகை காட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.
6:14 அவன் இருதயத்தில் திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.
6:15 ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.