Tamil Bible
English Bible
Search
Wallpapers
Study Tools
Bible Devotions
Bible References
Bible Articles
Bible Kavithaikal
Bible Literature
Prasanga Kurippugal
Screenplays
Quiz
Info
Our Info
Editor Info
Events
>
Select Book
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1சாமுவேல்
2சாமுவேல்
1இராஜாக்கள்
2இராஜாக்கள்
1நாளாகமம்
2நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
ஆபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலருடையநடபடிகள்
ரோமர்
1கொரிந்தியர்
2கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1தெசலோனிக்கேயர்
2தெசலோனிக்கேயர்
1தீமோத்தேயு
2தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரெயர்
யாக்கோபு
1பேதுரு
2பேதுரு
1யோவான்
2யோவான்
3யோவான்
யூதா
வெளிப்படுத்தின விசேஷம்
Tamil Bible
யோபு 22
யோபு 22
22:1 அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
22:2 ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?
22:3 நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
22:4 அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ?
22:5 உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?
22:6 முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.
22:7 விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்கு போஜனம் கொடாமலும் போனீர்.
22:8 பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.
22:9 விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.
22:10 ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது.
22:11 நீர் பார்க்கக் கூடாதபடிக்கு இருள் வந்தது; ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.
22:12 தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
22:13 நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
22:14 அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
22:15 அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?
22:16 காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
22:17 தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
22:18 ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
22:19 எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல் அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
22:20 குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான்.
22:21 நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.
22:22 அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ளவேண்டுகிறேன்.
22:23 நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால் திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.
22:24 அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
22:25 அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும் உமக்குச் சொக்க வெள்ளியுமாயிருப்பார்.
22:26 அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
22:27 நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
22:28 நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
22:29 மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் ரட்சிக்கப்படுவார்கள்.
22:30 குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப்போவான் என்றான்.
English
யோபு 21
யோபு 23
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
Related Topics / Devotions
References
துர்நாற்றமும் பைத்தியக்காரத்தனமும்
நிலத்திற்கான விலைக்கிரயம்
திருமணமும் அந்தஸ்தும்
மனித துன்பம்
உபரியும் தட்டுப்பாடும்
தாராள மனப்பான்மை இல்லாமை
மேசியாவின் அடிமைப்பணி
TAMIL BIBLE யோபு 22
,
TAMIL BIBLE யோபு
,
யோபு IN TAMIL BIBLE
,
யோபு IN TAMIL
,
யோபு 22 TAMIL BIBLE
,
யோபு 22 IN TAMIL
,
TAMIL BIBLE JOB 22
,
TAMIL BIBLE JOB
,
JOB IN TAMIL BIBLE
,
JOB IN TAMIL
,
JOB 22 TAMIL BIBLE
,
JOB 22 IN TAMIL
,
JOB 22 IN ENGLISH
,