1யோவான் 3:9-16

3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
3:10 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.
3:11 நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.
3:12 பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
3:13 என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.
3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.
3:15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
3:16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.




Related Topics



பகை வேண்டாம்-Rev. M. ARUL DOSS

நீதிமொழிகள் 10:12; 1பேதுரு 4:8 பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும் (பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்; அன்பு தனக்கிழைத்த தீங்கு...
Read More



தேவனால் , பிறந்த , எவனும் , பாவஞ்செய்யான் , ஏனெனில் , அவருடைய , வித்து , அவனுக்குள் , தரித்திருக்கிறது; , அவன் , தேவனால் , பிறந்தபடியினால் , பாவஞ்செய்யமாட்டான் , 1யோவான் 3:9 , 1யோவான் , 1யோவான் IN TAMIL BIBLE , 1யோவான் IN TAMIL , 1யோவான் 3 TAMIL BIBLE , 1யோவான் 3 IN TAMIL , 1யோவான் 3 9 IN TAMIL , 1யோவான் 3 9 IN TAMIL BIBLE , 1யோவான் 3 IN ENGLISH , TAMIL BIBLE 1John 3 , TAMIL BIBLE 1John , 1John IN TAMIL BIBLE , 1John IN TAMIL , 1John 3 TAMIL BIBLE , 1John 3 IN TAMIL , 1John 3 9 IN TAMIL , 1John 3 9 IN TAMIL BIBLE . 1John 3 IN ENGLISH ,