வெளிப்படுத்தின விசேஷம் 19- விளக்கவுரை

அதிகாரம்- 19
‘ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது’
‘the wedding of the Lamb has come’
வெளி (Rev) 19: 7

முன்னுரை:-
1. பரலோகத்தில் இரத்தசாட்சிகளின் ஆரவார துதியின் சத்தம் !
2. சிங்காசனத்திலிருந்து ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்தை அறிவிக்கும் சத்தம் !
3. மிருகத்தின் சேனைகளை சங்கரிக்கும் கடைசி யுத்த சத்தம் !
பாட்டு 7- 1,5

மூன்றுவித சபைகள்
1. விழுந்துபோன சபை (ரோம சபை) – Fallen Church
2. கைவிடப்பட்ட சபை(ஆயத்தமில்லா சபை) - Leftout church
3. எடுத்துக்கொள்ளப்பட்ட சபை( மணவாட்டி சபை) – Raptured Church வெளி -12, 17, 18, 19. மத் 25: 1, 2
7 வருட உபத்திரவகாலம் ( அந்தி கிறிஸ்துவின் ஆட்சி காலம்) என்பதின் இறுதி காலக்கட்டம்.

வச 1- 4: - பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இரத்தசாட்சிகள் நன்றி, துதி கலந்த ஆரவார சத்தம் இடுகிறார்கள்.(3) வெளி -6: 9
- காரணம் - விழுந்துபோன சபைக்கு தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பின் ஆக்கினை(2)
• பூமியை கெடுத்தது.
• பரிசுத்தவான்களை கொன்றது.
- தேவன் தம்மமை நீதியுள்ளவராகவும் வல்லமையுள்ளவராகவும் நிரூபிக்கிறார்.(1)
- தூதகணங்களும், மூப்பர்களும் நன்றியோடு தொழுதுகொள்ளுகிறார்கள்.(4)

வச 5- 8: - சிங்காசனத்திலிருந்து ஒரு சத்தம் 
• ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்தை அறிவிக்கிறது.(7)
யார் அறிவிக்கிறார்கள்? – மணவாட்டி இருக்கும் இடத்திலிருந்து வருகிறது. 2 கொரி 11: 2
• மணவாட்டி சபையின் ஆயத்தத்தை அறிவிக்கிறது.(8)
சங் 132: 9, எபே 5: 25, கொலோ 1: 28, 1 தெச 2: 19,20.
பாட்டு 191- 3,5

வச 9- 10:  - ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்திற்கு அழைக்கப்பட்ட பாக்கியசாலிகள்.(9) யார் இவர்கள் ? மத் 22: 1- 3, யோவான் 3: 29
- தேவதூதர்கள், பரிசுத்தவான்கள் இவர்களை தொழுதுகொள்ளக்கூடாது. யாத் 20: 3, கொலோ 2: 19.

வச 11- 16: - இராஜாதி ராஜாவாகிய கிறிஸ்து வெண்குதிரைமேல் ஏறி தமது பக்தர்களோடு தம் சத்துருக்களை கடைசி சங்காரம் செய்ய இறங்கி வருகிறார். 2 தெச 1: 7- 10.

வச 17 : - மிருகம், கள்ளதீர்க்கதரிசி, பூமியின் ராஜாக்கள், அவர்களை பின்னற்றியவர்கள் அக்கினி கடலிலே தள்ளப்பட்டார்கள். யோவான் 12: 48, 2 தெச 2: 8.

Author: Rev. Dr. R. Samuel Topics: Tamil Reference Bible Revelation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download