முக்கியக் கருத்து
- தாவீது தனது மிகுந்த அவசர தேவையின்போது தேவனின் ஒத்தாசையை நாடிய ஜெபம்.
- தனது முயற்சியால் அடையமுடியாத உயரமான இடத்தில் தேவன் தன்னைக் கொண்டுபோக வேண்டுதல்.
- தனது பொருத்தனைகளை நிறைவேற்ற தேவனுடைய உதவியை நாடுதல்.
வச.1,2 - தாவீது தனது பெலவீனப்பட்ட நேரத்தில் சோர்வு தன்னை தாக்கி இருக்கிற நேரத்தில், தேவனிடமிருந்து தூரம்
விலகிவிட்டது போன்ற சூழ்நிலையில் தேவன் துரிதமாக தன் விண்ணப்பத்தை கவனித்து கேட்கவேண்டும் என்ற அவசர
ஜெபத்தை ஏறெடுக்கிறான். விசுவாசிகளாகிய நாம் அனேக நேரங்களில் சோர்வடைந்து தனிமையை உணரும்போது நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான செயல் இதுதான் என்பதை உணரவேண்டும்.
"ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்...' என்று சங்கீதம் 50:15 ஆம் வசனத்
தில் ஆகாப் எழுதியிருப்பதை நான் நினைவு கூறவேண்டும். அதுமாத்திரமல்ல
"... எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்' என்று (வச.2) இல் கேட்கிறார்.
தாவீது தனது சொந்த முயற்சியால் அடைய முடியாத மேலான இடத்திற்குத் தன்னைக் கொண்டுபோய் நிறுத்தக்கோறுகிறார். அந்த உயரமான கன்மலை தேவனே.
"இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் ...' என்று 2 சாமுவேல் 23:3 இலும்,
"... அந்தக் கன்மலை கிறிஸ்துவே' என்று 1 கொரிந்தியர் 10:4 வசனத்திலும் வாசித்துத் தெரிந்துகொள்கிறோம்.
"என்னை நோக்கிக் கூப்பிடு, ... நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்' என்று யேகோவா தேவன் எரேமியாவுக்கு உரைத்ததை எரேமியா 33:3 இல் வாசிக்கிறோம்.
தாவீதைப்போல நாமும் நமது பெலவீன நேரத்தில் தேவனிடம் ஜெபித்து எட்டாத உயரமான இடத்தில் அழைத்துச்
செல்லப்படுவோமா?
வச.3-6 - தாவீது தான் இராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்ட நாளில் தான் தேவனிடம் செலுத்திய பொருத்தனைகளையும், தேவன் தனக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களையும், தலைமுறை தலைமுறையாய் தன்னை ஸ்திரப்படுத்த
கொடுத்த வாக்குத்தத்தங்களையும் தேவ சன்னிதியில் நினைப்பூட்டுகிறார். 2 சாமுவேல் 7 ஆம் அதிகாரத்தில் இந்தக்
காரியங்களை வாசிக்கிறோம்.
விசுவாசிகளாகிய நாமும் கர்த்தரிடம் நாம் உடன்படிக்கை செய்து ஞானஸ்நானம் பெற்ற நாட்களில் கர்த்தர் நமக்குக்
கொடுத்த வாக்குத்தத்தங்களை நினைவுபடுத்தி தேவனோடு நமது உறவை புதுப்பித்துக்கொள்வது மிகவும் நலமானது.
நமது ஆவிக்குரிய ஜீவியத்தில் மீண்டும் ஒரு எழுப்புதலையும், புத்துணர்ச்சியையும் கொடுக்க இந்த அனுபவம் மிகவும்
உதவியாக இருக்கும்.
வச.7-8 : இந்த வசனங்களில் தாவீது தான் தேவனுக்குமுன்பாக நீடித்த நாட்களாக நிலைத்திருக்க விரும்பினாலும்,
கர்த்தருடைய தயவு ,உண்மை இவற்றின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்ற வாஞ்சையை வெளிப்படுத்துகிறான்.
மேலும், ஒவ்வொரு நாளும் கர்த்தரிடம் தனது பொருத்தனைகளை செலுத்தும்படியாக தேவனை துதித்து தான் கீர்த்தனம்
பண்ணுவேன் என்ற உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளுகிறான். இதுவே, ஒரு உண்மை விசுவாசி தேவனோடு நெருங்கி
ஜீவிப்பதற்கும் தனது ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்து செல்வதற்கும் வழியாகும்.
தாவீது தேவன் பேரிலிருந்த தனது நம்பிக்கையை,
"நீர் எனக்கு அடைக்கலம்' (வச.2) என்று விசுவாச அறிக்கையிட்டு உறுதிப்படுத்திக் கொண்டான்.
"நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்' ரோமர் 10:10 வசனத்தில் வாசிக்கிறோம்.
மேலும், தாவீது தேவனிடம் பொருத்தனைகளைச் செலுத்தி தனது சுதந்திரங்களைப் பெற்றுக்கொண்டான்.
நாமும் நமது விசுவாசத்தை வாயினாலே அறிக்கையிட்டு விடுதலையைப் பெற்றுக்கொள்வோம். தேவனுக்கு நமது பொருத்தனைகளை செலுத்தி தேவனிடமிருந்து நமது சுதந்திரங்களைப் பெற்றுக்கொள்வோம்!
ஆமென்!
Author: Rev. Dr. R. Samuel