முக்கியக் கருத்து
- துன்மார்க்கருக்கு எவ்வளவு புத்தி சொன்னாலும் செவிட்டு விரியனைப்போல நியாயக்கேடு செய்துகொண்டிருக்கிறார்கள்.
- ஆனாலும் கரைந்துப்போகிற நத்தையைப்போல அழிந்துபோவார்கள்.
- உலகத்தில் நீதியாய் நியாயம் செய்யும் தேவன் உண்டு.
1. துன்மார்க்கன் எப்போதும் துன்மார்க்கத்தில் நிலைத்திருக்கிறான் (வச.1-4). எவ்வளவு தூரம் ஞானமாய் எடுத்து புத்தி
சொன்னாலும் துன்மார்க்கர் செவிட்டு விரியனைப்போல கேளாதிருக்கிறார்கள் (வச.5). ஆகவே, தேவன் அவர்களை
முற்றிலும் அழித்துப்போடுவார்.
"அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றி சடிதியில் நாசமடைவான்'
என்று நீதிமொழிகள் 29:1 வசனத்தில் ஞானியாகிய சாலெமோன் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறான்.
ஆகவே, தேவ ஆலோசனை, எச்சரிப்பு ஒரு மனிதனுக்கு வரும்போது உடனே மனந்திரும்பி சீர்படுவது நல்லது ,
இல்லையேல் அழிவு உண்டாகும்.
பல்லவி
தேவ நீதி நிறைவேறுதே
தேவ கரம் உயர்ந்திடுதே
சரணம்
5. நீதி நிறைந்த நல் தேசமதில்
நீதி தயவை துன்மார்க்கன் கல்லான்
தேவ மகத்துவத்தை கவனித்திடான்
தேவன் நமக்காய் கிரியை செய்கிறார்.
பாட்டு - சகோதரி சாராள் நவரோஜி
2. ஆகவே, இப்படிப்பட்ட துன்மார்க்கர் தேவனால் தண்டிக்கப்பட்டு அழிந்தே போவார்கள் (வச.6-9).
3. துன்மார்க்கருக்கு தேவன் கொடுக்கும் நியாயத்தீர்ப்பைக் கண்டு நீதிமான் ஆறுதலடைவான். அப்பொழுது பூமியின்
குடிகள் எல்லோரும் நீதியே வெல்லும் என்றும் பூமியிலே நியாயஞ்செய்யும் தேவன் உண்டென்றும் அறிந்து
கொள்வார்கள், அநியாயம் இப்பொழுது தழைப்பதைப்போல தோன்றினாலும் அது நிரந்தரமல்ல என்று விசுவாசிகளாகிய நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
Author: Rev. Dr. R. Samuel