சங்கீதம் 48- விளக்கவுரை

முக்கியக் கருத்து

 - தேவனுடைய நகரத்தின் மேன்மையை விவரிக்கும் பாடல்.
 - கோராகின் புத்திரருடைய பாடல்.

வச.1 - இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை பெரியவராகக் கொண்டு அவர் வழியில் நடந்தபோது மிகுந்த சமாதானத்தையும்     சந்தோஷத்தையும் அனுபவித்து தேவனை துதித்தார்கள். வழிவிலகி சென்றபோது மிகுந்த துன்பத்தை அனுபவித்தார்கள்.
நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தரை பெரியவராக விசுவாசித்து நடந்து கொண்டால் சமாதானத்தால் நிறைந்து அவரை   துதிப்போம்.

வச.2, 3 - தாவீது, சாலமோன் இவர்கள் காலத்தில் சீயோன் நகரமும், எருசலேம் நகரமும் மகாராஜாவின் நகரமாகவும்     தேவனுடைய ஆலயம் இருக்கும் இடமாகவும் இருந்தது. அது சீயோன் மலைக்கு வடதிசையில் இருந்தது. இந்த எருசலேம் நகரை நிரந்தரமான தேவனுடைய நகரமாக கர்த்தர் நித்தியத்திலே நிறைவேற்றுவார் என்று வெளி.21:1 இல் வாசிக்கிறோம். ஆகவே சீயோன் நகரம் உலக முழுவதற்கும் சந்தோஷத்தை கொடுக்கும் நகரமாக என்றைக்கும் இருக்கும்.

 . இயேசு கிறிஸ்துவின் பிறப்பால் எருசலேம் நகரம் மகாராஜாவின் நகரமாயிற்று. அது உலகத்திற்கு சந்தோஷத்தைக் கொடுத்தது (மத்.5:35).

 .  ஆவிக்குரிய சீயோன் என்னும் தேவனுடைய நகரமாகிய விசுவாசிகளாகிய நாம் உலகத்திற்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறவர்களாக இருக்கிறோம் (மத்.5:14).

நித்திய இராஜ்ஜியத்தில், பரலோகத்தில் புதிய எருசலேமை கர்த்தர் உருவாக்கி அங்கிருந்து அரசாளுவார். நித்திய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அருளுவார் (வெளி.21:1,2).

    பல்லவி

கர்த்தர் பெரியவர் அவர் நமது
தேவனுடைய நகரத்திலே
தமது பரிசுத்தப் பர்வதத்திலே - மிக
துதிக்கப்படத் தக்கவர்

    சரணங்கள்

1.  வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்
வடிப்பமான ஸ்தானமே
சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது
அது மகா ராஜாவின் நகரம்  - கர்த்தர்

பாட்டு - சகோதரி சாராள் நவரோஜி

வச.4, 8 - தாவீதின் காலத்தில் இஸ்ரவேலரின் சத்துருக்கள் எருசலேம் நகரை மேற்கொள்ள முடியவில்லை.
ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய கிறிஸ்தவ விசுவாசிகளையும் நமது சத்துருவாகிய சாத்தான் மேற்கொள்ள முடியாது என்று  இயேசு கிறிஸ்து பேதுருவினிடம் (மத்தேயு 16:18). ஆம் வசனத்தில் கூறி இருக்கிறார்.
கடைசி காலத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நித்திய பரலோக ராஜ்ஜியத்தை நிரந்தரமாக ஸ்தாபிக்கும்போது சத்துருக்கள் எதிர்த்து வந்தும் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள் என்று வெளி.17:14 ஆம் வசனத்தில், 
"இவர்கள் (சத்துருக்கள்) ஆட்டுக்குட்டியானவருடனே (இயேசு கிறிஸ்துவுடன்) யுத்தம் பண்ணுவார்கள். ஆட்டுக்கட்டியானவர் கர்த்தாதி கர்த்தாவும், இராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெபிப்பார்' 
என்று வாசித்துத் தெரிந்துகொள்ளுகிறோம்.
வச.9-13 - நாம் இந்த தேவனுடைய நகரம் என்று சொல்லப்படும் சீயோன் நகரமாகிய தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஒவ் வொரு அம்சத்தையும் உன்னிப்பாக கருத்தாக கவனித்து, அதை நம் பின்வரும் சந்ததிக்கு விவரித்து சொல்லவேண்டும்.  அவர்களும் தேவனை விசுவாசித்து, தேவ ராஜ்ஜியத்தின் புத்திரர்களாக வேண்டும்.

வச.14 - ஆகவே இந்த தேவன் சதாகாலமும் நம்மை நடத்தி தமது ராஜ்ஜியத்தில் மெய் விசுவாசிகளை சேர்த்துக்கொள்வார்.

Author: Rev. Dr. R. Samuel



Topics: Tamil Reference Bible Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download