முக்கியக் கருத்து:
- மனிதன் தனது நாட்கள் இந்த உலக வாழ்க்கையில் குறுகிய அளவிடப்பட்டுள்ளதை உணர்ந்து
தேவனை நம்பி ஜீவிக்க வேண்டும்.
- துன்மார்க்கர்களால் சூழ்ந்திருக்கப்படும்போது தேவ மனிதன் தன் வழிகளை காத்துக்கொள்ள வேண்டும்.
ஏதூதூன் என்ற பாடகர் குழு தலைவனிடம் பாட கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 1 நாளா. 25:1; 16:41
1. (வச.1-3) தாவீது தனது அக்கிரம செய்கையால் கர்த்தரால் தண்டிக்கப்பட்டிருக்கும் நிலமைக்காக வருந்தி, அந்த சூழ்நி
லையில் எடுத்த இரண்டு எச்சரிப்பின் நடவடிக்கைகளை பார்க்கிறோம்.
1. துன்மார்க்கர் தன்னை சூழ்ந்திருப்பதால், தனது நாவை அடக்கி, பேசாமல் இருப்பது நல்லது என்று அதன் மூலம்; பல வீணான பிரச்சனைகளை தவிர்த்துக்கொள்ளுகிறான் .(வச.1,2).
யாக்கோபு 3:5-12, நீதிமொழிகள் 6:2, 13:3, 17:27
2. தேவனுடைய வார்த்தைகளை தனக்குள் தியானித்துக்கொண்டிருந்ததால், தேவனிடம் விண்ணப்பம் செய்ய தன் இருத
யத்தில் ஏவப்பட்டான் (வச.3). எரேமியா 20:9.
2. (வச.4-6) மனிதனுடைய ஆயுசு நாட்கள் இந்த உலக வாழ்க்கையில் குறுகியதும், அளவிடப்பட்டதுமாக இருக்கிறது.
அது நான்கு விரற்கடை அளவாக மாத்திரமே உள்ளது.
1. குழந்தைப் பருவம், 2. இளமைப் பருவம் 3. வாலிபப் பருவம், 4. வயோதிபப் பருவம்
இந்த நாட்களில் வீணாக உலக காரியங்களுக்காக மாத்திரம் செலவழிக்காமல், தன்னையும் மற்றவர்களையும் தேவபக்தி
யில் நடத்தும் வழியில் செலவிடுவது நல்லது .1 தீமோத். 6:6-14, எபேசியர் 5:16.
3. (வச.7-11) தாவீது தனது மீறுதல்களினின்றும், அதனால் தனக்கு வந்த வாதைகளினின்றும் விடுவிக்கப்பட
"நீரே என் நம்பிக்கை' (வச.7) என்று ஆண்டவரை எதிர்பார்த்திருக்கிறான்.
பல்லவி
நான் நம்பி வந்தேன் ஏசுநாதா
என்னை ஏற்றுக்கொள்ளும்
உம்மை யன்றி மீட்பரில்லை
உலக இரட்சகரே
சரணம்
1. எந்தன் பாரம் தாங்கிடவோ
ஏதும் என்னும் பெலனுண்டோ
யாரிடம் செல்வேன் என்னை விசாரிப்பாரில்லை - நான்
என் பாவ பாரம் நீக்கிடும் தேவா
ஏசுவே இரங்கும் - என் - நான்
பாட்டு - சகோதரி சாராள் நவரோஜி
4. (வச.12,13) இந்த உலக வாழ்க்கையில் தனது வாழ்நாள் குறுகினது என்பதை தாவீது முழுதுமாய் உணர்ந்தபடியினா
லும், இந்த உலக வாழ்க்கை மாயையே என்பதை அறிந்தபடியினாலும், தனது பாவத்திலேயும் தேவனுடைய சிட்சையிலே
யும் தான் மரித்துவிடாதபடி அதற்கு முன்புதானே கர்த்தர் தன்னை மீட்டு தன்னை தேற்றும்படியாக தீவிர ஜெபத்தை ஏறெடுக்கிறான்.
வலதுபுறக் கள்ளனைப்போல மரிப்பதற்கு முன் மீட்கப்பட்டால் மாத்திரமே பரதேசுக்கு செல்ல முடியும். இல்லையேல் நித்திய நரக ஆக்கினையை சந்திக்க நேரிடும்.
Author: Rev. Dr. R. Samuel