முக்கியக் கருத்து:
- கர்த்தருடைய வார்த்தை சர்வத்தையும் படைத்து ஆளுகிறது.
- கர்த்தருடைய கண்கள் தமக்கு பயந்தவர்களைக் காக்கும்படி அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.
- கர்த்தரை நம்பும் நீதிமான்கள் களிகூர்ந்து அவரை துதிப்பார்கள்.
1. கர்த்தரை நம்பும் நீதிமான்களின் மேன்மை (வச.1-3, 12, 21, 22)
கர்த்தரை நம்பும் நீதிமான்கள் அவரில் களிகூர்ந்து, பலவித இசைக்கருவிகளுடன் உற்சாகமாக அவரை துதிப்பார்கள் (வச.1-3, 21) கர்த்தரை இந்த ஜாதி மக்கள் தங்களுக்கு தெய்வமாகக் கொண்டபடியால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவார்கள் (வச.12). இவர்கள் மேல் கர்த்தருடைய கிருபை எப்போதும் இருக்கும் (22).
2. கர்த்தருடைய வார்த்தை - சர்வத்தையும் படைத்து ஆளுகிறது (வச.4-9, 11)
கர்த்தர் தமது வார்த்தையாலே எல்லா சிருஷ்டிப்புகளையும் படைத்தார் (வச.6,7). ஆதியாகமம் முதல் இரண்டு அதிகாரங் கள் இந்த சத்தியத்தை விளக்குகின்றன. சர்வ சிருஷ்டிப்பும் அவர் வார்த்தையாலே இயக்கப்படுகின்றன. அவர் வார்த்தைக் குக் கீழ்படிகின்றன (வச.8, 9). கர்த்தருடைய வார்த்தை உத்தமமாகவும், சத்தியமாகவும் நித்தியமாகவும் இருக்கிறது (வச.4, 5, 11).
3. கர்த்தருடைய கண்கள் - தமக்கு பயந்தவர்களைக் காக்கும்படி நோக்கி இருக்கிறது (வச.13-15, 18-20)
கர்த்தருடைய கண்கள் எல்லா ஜீவராசிகள் மேலும் சிருஷ்டிப்புகள் மேலும் நோக்கமாயிருந்தாலும், (வச.13-15) விசேஷ மாக தமக்கு பயந்தவர்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. அவ்விதமாக, தமக்காக காத்திருக்கிறவர்களை எல்லாச் சூழ்நிலையிலும் பாதுகாக்கவும், மரணம் போன்ற இக்கட்டிலிருந்தும் விடுவிக்கவும் துணையாக இருக்கிறது (வச.18-20).
"தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது" என்று 2 நாளாகமம் 16:9 ஆம்
வசனம் கர்த்தருடைய கண்களின் வல்லமையை தெளிவாக அறிவிக்கிறது.
4. மாமிச பெலன் விருதா (வச.10, 16-17)
கர்த்தர் ஒருவரே நம்மை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வல்லமையுள்ளவர். அவரால் படைக்கப்பட்ட மனித, மாமிச வல்ல மைகள் விருதா. ஜாதி ஜனங்களுடைய ஆலோசனைகளும், இராஜாக்கள், சேனைத் தலைவர்களுடைய பெலனும், குதிரைகளின் வீரியமும் நம்மை விடுவிக்க முடியாது.
கர்த்தரையே நாம் நம்பியிருக்கவேண்டும் என்று இந்த அற்புதமான சங்கீதம் நமக்கு ஆலோசனை அளிக்கிறது.
Author: Rev. Dr. R. Samuel