முக்கிய கருத்து :
- தாவீது தன் குமாரனாகிய அப்சலோமினால் வந்த நெருக்கத்தின்போது பாடிய சங்கீதம்.
- சேலா என்று சில வசனங்களின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பொருள் அந்த இடத்தில் நிறுத்தி தியானிக்க / ஜெபிக்கவேண்டும் என்பது.
1. தாவீதின் நெருக்கம் (வச.1,2)
தாவீது தன் குமாரனாகிய அப்சலோமினால் தனது சொந்த அரண்மனையைவிட்டு துரத்தப்பட்ட வேளையில் தேவனிடம் கதறினான் (2 சாமுவேல் 15:13-18). தாவீது தேவனை நேசிக்கிற ஒரு பக்தனாக இருந்தபோதிலும் இந்த நெருக்கம் நேரிட்டது. அதுபோலவே, எந்த ஒரு விசுவாசிக்கும்கூட சோதனையற்ற வாழ்க்கை இல்லை. தாவீதுக்கு வந்த இந்த நெருக்கம் கர்த்தருக்கு விரோதமாக தாவீது பத்சேபாளிடம் செய்த பாவத்தினிமித்தம் வந்த சிட்சை என்று கருதப்படுகிறது (2 சாமுவேல் 12:9-14).
விசுவாசிகள் வாழ்க்கையிலும் நெருக்கங்கள் பல சமயங்களில் பல காரணங்களால் வருகிறது.
அ) நாம் தவறு செய்யும்போது வரும் நெருக்கங்கள் (1 பேதுரு 2:20).
ஆ) பொதுவாக எல்லா மனிதருக்கும் வாழ்க்கையில் வரும் நெருக்கங்கள் (1 கொரிந்தியர் 10:13).
இ) நமது விசுவாசத்திற்கு வரும் எதிர்ப்பின் நெருக்கங்கள் (மத்தேயு 5:10,11).
2. தாவீதின் நம்பிக்கை (வச.3,4)
தாவீது தனது நெருக்கத்தில் மனந்தளறாமல் கர்த்தரை நோக்கி சத்தமிட்டான். அவர் தாவீதுக்கு செவிகொடுத்து அவன் தலையை உயர்த்தி சமாதானம் அருளினார். அவ்விதமாகவே ஒரு விசுவாசி சோர்ந்துபோகாமல் தனது நெருக்கத்தில் விடுதலைக்காக தேவனை விசுவாசிக்கவேண்டும்.
'உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்'' (ஏசாயா 26:3).
'கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அறிந்திருக்கிறார்' (2 பேதுரு 2:9) என்ற வசனங்கள் இந்த சத்தியத்தை விáக்குகின்றன.
3. தாவீதின் ஜெபம் (வச.5 8)
தாவீது தனது வெற்றியை 'இரட்சிப்பு கர்த்தருடையது' என்று அறிவிக்கிறான். தம்மை நம்புகிற தேவ பிள்ளைகள் அனைவருக்கும் கர்த்தர் ஜெயம் கொடுக்கிறவராக இருக்கிறார்.
'இவையெல்லாவற்றிலேயும் ... மரணமானாலும், ஜீவனானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் ...ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம்' (ரோமர் 8:37,38).
Author: Rev. Dr. R. Samuel