முக்கியக் கருத்து :
- தேவனிடம் நம்பிக்கையுடன் ஆத்துமாவை உயர்த்த வேண்டும்.
- தேவன் தமது திட்டப்படி பதிலளிப்பதை விசுவாசத்துடன் எதிர்பார்க்கவேண்டும்.
1.வசனம் 1-2 தேவனிடம் தன் ஆத்துமாவை நம்பிக்கையுடன் வாஞ்சையோடு உயர்த்துகிறவனை தேவன் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போகவிடமாட்டார். அவன் சத்துருக்கள் அவனை மேற்கொள்வதில்லை.
2. தேவனிடம் நம் ஆத்துமாவை உயர்த்தும்போது எந்த மனநிலமையில் அவரை அணுகவேண்டும் என்பதை பின்வரும் வசனங்களில் தெரிந்துகொள்ளலாம்.
வச.4,5,10 : கர்த்தருடைய வழிகளை தெரிந்துகொண்டு அவர் வழிநடத்தும் பாதையில், அவருடைய கட்டளைகளை கைக்கொண்டு நடக்க வாஞ்சையுடன் அணுகவேண்டும்.
"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும், உங்களை நடத்துவார்' (யோவான் 16:13).
வச.6,7,11 : தேவ இரக்கத்தை நம்பி பாவ அறிக்கை செய்து மனந்திரும்புதலோடு அணுகவேண்டும்.
"நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், ...' (அப்போஸ்தலர் 2:38).
வச.3,15 : நம்முடைய கண்களை கர்த்தர் மேலேயே பதியவைத்து அவரை நோக்கி காத்திருக்க வேண்டும்.
"... விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, ... பொறுமையோடே ஓடக்கடவோம்' (எபிரேயர் 12:1).
வச.12,14 : கர்த்தருக்கு பயப்படும் பயத்துடன், நிர்விசாரங்களை அகற்றி அவரை அணுகவேண்டும்
"என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்' (ஏசாயா 66:2).
வச.16-21 : நமது கஷ்டங்களையும், பாவங்களையும் பெலவீனங்களையும் மறைக்காமல் நம்பிக்கையுடன் கர்த்தருக்குத் தெரிவித்து அவரை அணுகவேண்டும்.
"அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்' (1 பேதுரு 5:7).
வச.22 : தனக்காக மாத்திரமல்லாமல் தனது தேசத்திற்காகவும், மற்றவர்களுக்காகவும் ஒருவன் பாரப்பட்டு கர்த்தரின் தயவை நாட வேண்டும். திருச்சபையின் பொறுப்பும் இதுதான்.
3. இப்படி தேவனை அணுகும்போது அவர் எப்படி பதிலளிப்பார் என்பதை பின்வரும் வசனங்களில் தெரிந்துகொள்ளலாம்.
வச.2,3,20 : வெட்கப்பட்டு போக விடமாட்டார்.
"... நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்' (ஏசாயா 45:17).
வச.2,3,19 : சத்துருக்கள் மேற்கொள்ள விடமாட்டார். பெலவீனம், பிரச்சனைகள் நம்மை மேற்கொள்வதில்லை.
வச.8,13 : நல்லவராக இருந்து, கிருபையும் நன்மையும் காணச்செய்து, பூமியை சுதந்தரிக்கச் செய்வார். மத்தேயு 5:5.
வச.4,5,9,12,14 : தமது வழிகளை போதித்து இரகசியங்களை தெரியப்படுத்துவார்.
ஆமோஸ் 3:7, யோவான் 14:26.
Author: Rev. Dr. R. Samuel